வயதான பெற்றோரைப் பராமரிக்க...!
அனைவருக்குமே பெற்றோர்கள் கடவுள் போன்றவர்கள். அத்தகைய பெற்றோர் நன்கு இளமையாக இருக்கும் போது, குழந்தைகளை நல்ல நிலைமையில் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் அவர்களுக்கு வயதானால், அவர்களால் எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய முடியாதவாறு இருப்பார்கள்.
அவ்வாறு அவர்களுக்கு வயதாகிவிட்டால், அவர்களின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் தெரியும். அந்த மாதிரி ஏதாவது மாற்றங்களை கவனிக்கும் போது, மாற்றங்கள் தென்பட்டால், அப்போது அவர்களுக்கு உதவி தேவை என்பதை உணர்ந்து, அதற்கேற்றாற் போல் நடக்க வேண்டும்.
பொதுவாக வயதான பெற்றோர்களை பராமரிப்பது என்பது ஒரு எளிதான பணியல்ல. ஏனெனில் அன்றாட வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டே, வயதான பெற்றோரை கவனிப்பது என்பது சற்று கடினம் தான்.
ஆனால் அத்தகைய வேலைகளை எளிதாக்க சில வழிமுறைகள் உண்டு. ஆகவே இப்போது வயதான பெற்றோரை பராமரிப்பதற்கான எளிய வழிமுறைகளை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வழிமுறைகள்:
1. பெற்றோர்களுடன் நல்ல கருத்துப் பரிமாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளவும். வயதானவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்கள், அதனால் அவர்களது அந்த நிலைமையிலும், தாங்கள் நல்ல நிலையில் உள்ளோம் என்பதை உணரும் படி அவர்களோடு கலந்து பேசுவது முக்கியமாகும்.
2. பெற்றோர்கள் மருத்துவரிடம் செல்லும் போது அவர்களுடன் செல்லவும். மருத்துவரிடம் செல்லும் போது, அவர்களுடன் யாராவது இருந்தால், அவர்களுக்கு பெரிய ஆறுதலாகவும், உதவியாகவும் இருக்கும். இதனால் அவர்களது உடல் நலத்தைப் பற்றியும் நன்கு தெரிந்து கொள்ளலாம்.
3. பெற்றோர்களை கவனிக்கும் போது அவர்களுக்கென்று ஒரு அட்டவணையை வைத்துக் கொள்ளவும். அந்த அட்டவணையில் அவர்களின் நியமனங்களை எழுதி, அவர்களிடம் கொடுத்தால், அவர்கள் அதை நினைவில் வைத்துக் கொண்டு சரியான நேரத்திற்கு அவற்றைச் செய்வார்கள்.
4. பெற்றோர்களுடனும் சிறிது நேரத்தை செலவிட வேண்டும். என்ன தான் பிற வேலைகளில் மும்முரமாக இருந்தாலும், அவர்களுடன் சிறிது நேரத்தை செலவிட முயற்சி செய்யவும். இதற்காக அவர்களுடன் சிரித்து பேசி விளையாடவோ அல்லது நடப்பதற்காக வெளியே செல்லவோ முயற்சி செய்யலாம். இது உறவை இன்னும் மேம்படுத்தும்.
5. பெற்றோர்களுக்கு என்று தனியாக ஒரு அறையை கொடுக்க வேண்டும். அதுவும் அவர்களுக்கு உரியது என்று உணரும் வகையில் பிரத்தியேகமான அறையை ஒதுக்கித் தர முயற்சி செய்ய வேண்டும். மேலும் அவர்கள் உதவி கேட்கும் போது மட்டுமே உதவி செய்யவும்.
6. பெற்றோர்களை கவனிப்பதற்கு என்று ஒரு பராமரிப்பாளரை நியமிக்கலாம். இவ்வாறு நியமித்தால், வாழ்க்கையானது மிகவும் எளிதாக்கப்படும்

--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக