லேபிள்கள்

வெள்ளி, 11 அக்டோபர், 2013

குழந்தைங்க எதுக்கு அழுறாங்கன்னு தெரியலையா?

குழந்தைகள் பிறந்த பின்னர் அவர்கள் எப்போது பார்த்தாலும் அழுது கொண்டே இருப்பார்கள். அவ்வாறு அவர்கள் அழும் போது தாய்க்கு என்ன செய்வதென்றே புரியாது. அதிலும் முதல் குழந்தை என்றால் ஒன்றுமே தெரியாது. சிலசமயங்களில் அவர்களின் அழுகையை நிறுத்த பெரும் சிரமத்திற்கு ஆளாவார்கள். அதுவே சில நேரத்தில் கோபம் கூட வரும். குழந்தை பிறந்ததும் பேச முடியாது. அதனால் அவர்களுக்கு இருக்கும் உடல் பிரச்சனைகளை சொல்ல முடியாமல் தான் அழுகின்றது.

* குழந்தைக்கு பசி எடுத்தால், அந்த பசியை தாய்க்கு உணர்த்த குழந்தை அழத் தொடங்கும். ஏனென்றால் அதனால் தாயிடம் தன் பசியை சொல்ல முடியாது அல்லவா? ஆகவே அப்போது தாயானவள் குழந்தையின் பசியைப் புரிந்து கொண்டு, உணவைக் கொடுக்க வேண்டும். அவ்வாறு உணவு உண்டப் பின் குழந்தை அழுவதை நிறுத்திவிட்டால், அப்போது குழந்தை பசிக்கு தான் அழுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

* குழந்தை எப்போதுமே தாயின் அரவணைப்பை தான் அதிகம் தேடும். ஏனெனில் குழந்தை எதையாவது பார்த்து பயந்திருக்கும். அதனால் தாய் குழந்தையை கீழே இறக்கினால் கூட, குழந்தை அழத் தொடங்கும். ஆகவே எங்கு சென்றாலும் குழந்தையை அழைத்து செல்லுங்கள். இல்லையெனில் குழந்தைக்கு பயத்திலேயே காய்ச்சல் வந்துவிடும். பின் அதற்கு அவஸ்தைப்பட வேண்டும்.

* நிறைய குழந்தைகள் வயிற்று வலியால் அழுவார்கள். அதிலும் அந்த வலி அவர்களுக்கு வரக் காரணம் வாயு அல்லது பசி. ஆகவே நீண்ட நேரம் தாய்ப்பால் கொடுக்காமல் இருந்தால், உடனே குழந்தைக்கு தாய்ப்பாலை கொடுத்துவிடுங்கள். பின் அவர்களுக்கு லேசாக மசாஜ் போல் செய்துவிடுங்கள். இல்லை வாயுவால் தான் அழுகிறதென்றால், உடனே மருத்துவரிடம் அழைத்தோ அல்லது கிரேப் வாட்டரை கொடுத்தோ சரிசெய்யலாம். பொதுவாக குழந்தைகள் வயிற்று வலியால் அழும் போது கிரேப் வாட்டர் கொடுத்தால், சரியாகிவிடும்.

* குழந்தையின் நாப்கினை நீண்ட நேரம் மாற்றாமல் இருந்தால், குழந்தை அவற்றை மாற்ற வேண்டும் என்பதற்காக அழும். ஏனெனில் அவ்வாறு மாற்றாமல் இருப்பதால், அதில் இருக்கும் அதிகமான ஈரம் மற்றும் கழிவுகள், அவர்களுக்கு அந்த இடத்தில் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும் இதனால் பல நோய்களும் அவர்களை தாக்கும்.

* சில குழந்தைகள் தூங்கிக்கொண்டிருக்கும் போது திடீரென்று எதையேனும் நினைத்து, அதனால் பயம் ஏற்பட்டு அழுத் தொடங்கும். அந்த நேரம் அவர்களின் சிந்தனையை திசை திருப்ப, ஏதேனும் சத்தத்தை வரவைக்கும் விளையாட்டுப் பொருட்களை அவர்களிடம் கொடுத்தால், அவர்கள் அந்த சத்தத்தில் மனதில் ஏற்பட்ட பயம் நீங்கி, அழுவதை நிறுத்திவிடுவார்கள்.

* குழந்தைக்கு பற்கள் முளைக்கும் போது வலி ஏற்படும். ஏனெனில் அப்போது அவர்களின் ஈறுகளை கீறிக் கொண்டு பற்கள் வருவதால், அப்போது அந்த வலியின் காரணமாக அழுவார்கள். ஆகவே அப்போது அவர்களுக்கு போதிய சிகிச்சை அளித்து வந்தால், நலம்.

மேற்கூறியவையே குழந்தைகளின் அழுகைக்கான காரணங்கள். ஆகவே இதனை படித்து தெரிந்து கொண்டு, உங்கள் குழந்தையின் அழுகையை நிறுத்தி, சந்தோஷப்படுத்துங்கள்.


--
*more articles click*
www.sahabudeen.com


கருத்துகள் இல்லை:

ஃபிரண்ட் லோடிங்வாஷிங் மெஷின், டாப் லோடிங் வாஷிங்மெஷின். இதில் எது சிறந்தது?

பொதுவாக நாம் வாஷிங் மெஷின் வாங்கும் போது நமக்கு ஏற்படுகின்ற மிக பெரிய குழப்பம் என்ன என்றால் ,...

Popular Posts