லேபிள்கள்

திங்கள், 21 ஜனவரி, 2013

ஆன்லைன் ஷாப்பிங் உஷார் டிப்ஸ்கள் !



கடை கடையாக ஏறி, இறங்கி பொருட்கள் வாங்குவதைவிட, கம்ப்யூட்டர் முன் அமர்ந்து, ஜஸ்ட் மவுஸ் கிளிக் பண்ணி 'ஆன்லைன் ஷாப்பிங்செய்வது, தற்போது பரவிக் கொண்டிருக்கிறது!
ஆனால், 'நேரில் பொருட்களை வாங்கும்போதே ஏகப்பட்ட தில்லு முல்லு திருகுதாளங்கள் நடக்கின்றன. அப்படியிருக்க, கண்காணாமல், கம்ப்யூட்டரில் படத்தை மட்டுமே பார்த்து வாங்கும்போது... எந்த அளவுக்கு மோசடி இருக்கும்?' என்று ஒரு கேள்வி கண்டிப்பாக பலருக்கும் எழும். இது உண்மையும்கூட. ஆம், ஆன்லைன் ஷாப்பிங்கில் ஏமாற்றுவதற்கும்... ஏமாறுவதற்கும் ஏகப்பட்ட வழிகள் இருக்கின்றன. ஆனால், உஷாராக கையாண்டால்... இதைவிட ஷாப்பிங்குக்கு சூப்பர் வழி இப்போதைக்கு வேறு இல்லை என்பதே பலருடைய கருத்தாக இருக்கிறது!

இதோ, ஆன் லைன் ஷாப்பிங்கில் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பட்டியலிடுகிறார்... வைத்தீஸ்வரன். இவர், பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'இண்டியா பிளாஸா ஆன்லைன் ஷாப்பிங்’-ன் ஃபவுண்டர் மற்றும் சி.இ.ஓ. இந்தியாவில் முதன் முதலாக, 1999-ல் ஆன்லைன் ஷாப்பிங்குக்காக 'இண்டியா பிளாஸா.காம்என்ற வெப்சைட் ஆரம்பித்தது, இவர்தான்!

''கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கும்போது, பயணச் செலவுகளில் ஆரம்பித்து, நேரம், உடல் களைப்பு தொடங்கி பல விரயங்கள் ஏற்படும். இதையெல்லாம் தவிர்க்க, ஏ டு இஸட் எல்லா பொருட்களையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் வாங்க முடியும். ஷோ ரூம்களில்... கடைக்கான வாடகை, ஏ.சி, கரன்ட் பில், ஊழியர்களின் சம்பளம் முதல் அத்தனை செலவுகளும் வாங்கப்படும் பொருட்களின் விலையில்தான் சேர்க்கப்படும். ஆனால், ஆன்லைன் ஷாப்பிங்கில் இந்தச் செலவுகள் பெருமளவு இருக்காது. அதனால், கடைகளைவிட, ஆன்லைனில் விலை குறைவாகவே இருக்கும்!'' என்றவர், ஆன்லைன் ஷாப்பிங்குக்காக சில ஆலோசனைகளை வழங்கினார்.

''முதலில், ஆன்லைன் ஷாப்பிங்குக்காக இருக்கும் பலவிதமான வெப்சைட்களையும் தெரிந்துகொண்டு, ஒருமுறை வலம் வாருங்கள். அவற்றில் எது பிரபலமானது, நம்பிக்கையானது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நண்பர்களிடமும் ஆலோசனை கேட்கலாம். தொடர்பு முகவரி, தொலைபேசி எண், இ-மெயில் ஐ.டி, புகார் எண் என அனைத்தும் குறிப்பிடப்பட்ட வெப்சைட்களே பரிந்துரைக்கத்தக்கது. இ-மெயில் ஐ.டி மட்டுமே தந்திருக்கும் வெப்சைட்களைத் தவிருங்கள்.

அடுத்ததாக, நீங்கள் வாங்க விரும்பும் பொருளை ஒரு வெப்சைட்டில் பார்த்தவுடன் வாங்கிவிடாமல், அதே பொருளுக்கு மற்ற வெப்சைட்களில் நிர்ணயித்துள்ள விலையையும் அறிந்துகொண்டு, விலை குறைவாக, அதேசமயம் பிராண்டடாக இருக்கிறதா என்பதை அலசுங்கள். டிஸ்கவுன்ட் கொடுத்தால் கூடுதல் சிறப்பு.

போலி வெப்சைட்களும் நிறையவே புழக்கத் தில் இருக்கின்றன என்பதால், நீங்கள் 'லாக் இன்ஆகிற வெப்சைட் பாதுகாப்பானதுதானா என்பதை அறிய, அந்த வெப் பக்கம் ஓபன் ஆகும்போதே லிங்க் பகுதியில் 'லீttஜீs’ என்று இருக்கிறதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். கிரெடிட் கார்டு பாஸ்வேர்ட் டைப் அடிக்கும்போதும் 'லீttஜீs’ என்று இருக்க வேண்டும்'' என்றவர், டெலிவரி விஷயங்களைப் பேசினார்.

''ஆன்லைனில் நீங்கள் புக் செய்யும் பொருட்கள் எல்லாம் கப்பல், ரோடு டிரான்ஸ்போர்ட் என்று கடந்து உங்களை வந்தடையும். ஷிப்பிங் சார்ஜை உங்களிடம் வசூலிக்காத வெப்சைட்டாகப் பார்த்து பொருட்களை வாங்குங்கள்.  பொருளை புக் செய்யும்போதே எத்தனை நாட்களுக்குள் டெலிவரி கிடைக்கும் என்பதையும் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்குத் தோதான நேரத்தில் கைக்கு கிடைக்காது என்றால், அதைவிட குறுகியகால டெலிவரிக்கு உத்தரவாதம் தரும் அடுத்த வெப்சைட்டை அணுகலாம்.

டெலிவரி ஆகும்போது ஏதேனும் சேதமாகியிருந்தால், சில ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகள் அவற்றை மீண்டும் ஏற்க மாட்டார்கள். சிலர், குறிப்பிட்ட காலகெடுவுக்குள் ஏற்றுக் கொள்வார்கள். வெப்சைட்டில் இதுபற்றிய தகவல் களை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். ஒருவேளை சேதமாகியிருந்தால், குறிப்பிட்ட முகவரிக்கு, உரிய காலக்கெடுவுக்குள் அனுப்பி, புதிய பொருளைப் பெற்றுக்கொள்ளலாம்'' என்ற வைத்தீஸ்வரன்,

''ஆன்லைன் ஷாப்பிங் செல்லும்போது, இந்த எல்லா விஷயங்களும் நினைவில் இருக்கட்டும். நாம் கவனமாக இருந்தால், குறைந்த விலையில் சுலபமாக பொருள் வாங்க ஆன்லைங் ஷாப்பிங் வெப்சைட்கள் சூப்பர் சாய்ஸ்!'' என்று சர்டிஃபி கேட் தந்தார்.

ஆன்லைன் ஷாப்பிங்கில் இப்போது பெண்களின் நடமாட்டம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. அதில் தன் அனுபவம் சொன்னார் சென்னையைச் சேர்ந்த சாஃப்ட்வேர் புரொபஷனல் அனுஷா.
''என் வேலை காரணமா எப்பவும் சிஸ்டம் முன்னயே உட்கார்ந்திருக்கணும். அதனால கொஞ்சம் டைம் கிடைச்சாலும் ரிலாக்ஸ் பண்ண.. மார்க்கெட்ல புதுசா என்ன வந்திருக்குனு தேட ஆரம்பிச்சுருவேன். சொன்னா நம்பமாட் டீங்க... ஆன்லைன்ல வாங்குற பொருட்கள் விலை குறைவாவும், அதேசமயம் தரமாவும் இருக்கு.

குறிப்பா, ஸ்க்ரீன்ல பார்க்கறப்போ எப்படி இருக்குதோ அதேமாதிரிதான் கைக்கு வர்றப்பவும் இருக்குது. இப்ப எனக்கு ஏகப்பட்ட ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்கள் அறிமுகம். கம்மல், காலணி, பெட்ஷீட், வீட்டுக்குத் தேவையான பொருட்கள்னு அத்தனையும் இதுல வாங்கியிருக்கேன். இதுவே நாம கடைக்குப் போகணும்னா, வண்டிக்கு பெட்ரோல்ல இருந்து... நம்ம எனர்ஜி வரைக்கும் அத்தனையும் செலவாகும். இதுல எல்லாம் மிச்சம்தானே?!'' என்று சந்தோஷமாகச் சொன்னார் அனுஷா!

கருத்துகள் இல்லை:

தரமான செங்கல்லைகண்டறிவது எப்படி? செங்கல் கட்டுமானத்தில் என்னசெய்யலாம்? என்ன செய்யக் கூடாது?

இன்று ஹாலோபிளாக் , கான்கிரீட் கல் , ஏஏசி கல் , போன்ற பல தரப்பட்ட கற்கள் வந்து விட்டாலும் , நம...

Popular Posts