லேபிள்கள்

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

கார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்


வேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில் சாலை விதிமுறைகளையும், டிரைவிங்கையும் முழுமையாக கற்றுக்கொண்டு புது காரில் ஏறி உட்காருவது நல்லது.

டிரைவிங் ஸ்கூலுக்கு போய் குறைந்தது 10 மணிநேரமாவது பயிற்சி பெற்று பின்னர் காரை வாங்குவது உத்தமம்.

தற்போது இருக்கும் போக்குவரத்து நெரிசலில் கார் ஓட்டுவது பெரிய சவாலான காரியமாகவே உள்ளது. குறிப்பாக, நகர சாலைகளில் நன்றாக கார் ஓட்டத் தெரிந்தவர்களே படாத பாடு படுகின்றனர்.

இந்த நிலையில், புதிதாக கார் ஓட்ட கற்றுக்கொள்பவர்கள் சில முக்கிய விஷயங்களை கவனத்தில் கொண்டு செயல்பட்டால் விரும்ப தகாத சம்பவங்களை தவிர்த்து ஒரு முழுமையான டிரைவராக மாறிவிடலாம்.

புதிதாக கார் ஓட்ட கற்றுக்கொள்பவர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய விஷயங்களை காணலாம்.

சீட் பெல்ட்:

கார் இருக்கையில் அமர்ந்தவுடன் முதலில் விரட்ட வேண்டியது தேவையில்லாத பதட்டத்தைத்தான். கார் இருக்கையில் ஏறி அமர்ந்தவுடனேயே ரிலாக்ஸ்டாக முதலில் செய்ய வேண்டியது சீட் பெல்ட்டை கட்டாயம் அணிய வேண்டும்.

கார் ஏபிசி தெரிஞ்சிக்கலாம்...

அதாவது, ஆக்சிலேட்டர், பிரேக், கிளட்ச் என்ற காரின் 3 கன்ட்ரோல் மும்மூர்த்திகளைத்தான் சுருக்கமாக ஏபிசி என்று குறிப்பிடுகின்றனர். கிளட்சில் இடது காலையும், ஆக்சிலேட்டர் மற்றும் பிரேக்குகளுக்கு வலது காலையும் பயன்படுத்தவும்.

கியர் மாற்றும் முறை...

எஞ்சினை ஸ்டார்ட் செய்வதற்கு முன் கியர்கள் எந்த முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு கார்களிலும் கியர் மாற்றும் அமைப்பு மாறுபடலாம். இதை தெரிந்து வைத்துக்கொள்வது மட்டுமின்றி நினைவில் வைத்துக்கொள்வதும் அவசியம்.

எஞ்சினை ஸ்டார்ட் செய்யும்போது...

எஞ்சினை ஸ்டார்ட் செய்யும் முன் ஹேண்ட் பிரேக்கை ரிலீஸ் செய்துவிட்டு நியூட்ரல் கியரில் கார் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளவும்.

கிளட்ச்சையும் பிரேக்கையும் மிதித்துக்கொண்டு காரை ஸ்டார்ட் செய்யவும். முன்பக்கம் வாகனங்கள் எதுவும் இல்லையென்றால் முதல் கியரை மாற்றி கிளட்சை மெது மெதுவாக ரிலீஸ் செய்யவும். ஆக்ஸிலேட்டரை மிதிக்க அவசியமில்லை.
கிளட்ச் பைட்டிங் பாயிண்ட்:
பைட்டிங் பாயிண்ட் என்று டிரைவிங் ஸ்கூல் டிரைவர்கள் கூறுவார்கள். அதாவது கிளட்சை குறிப்பிட்ட தூரம் வரை விட்டாலும் கார் மூவ் ஆகாது. ஆனால், இந்த பைட்டிங் பாயிண்ட் என்று சொல்லும்
இடத்திற்கு கிளட்ச் ரிலீஸ் ஆகும்போதும் கார் மெதுவாக நகரும். இந்த கிளட்ச் கன்ட்ரோலை தெரிந்துகொண்டால் கால் டிரைவர் ஆகிவிடலாம்.

மேலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் இஞ்ச் இஞ்ச்சாக காரை நகர்த்துவதற்கு இந்த பைட்டிங் பாயிண்ட் கிளட்ச் கன்ட்ரோலிலேயே காரை செலுத்துவார்கள் . ஆக்சிலேட்டரை மிதிக்க வேண்டிய அவசியமில்லை. வேகமெடுக்கும்போது மட்டும் ஆக்சிலேட்டர் பக்கம் வலது கால் செல்ல வேண்டும்.

ஸ்டீயரிங் கன்ட்ரோல்:

அடுத்து இப்போது கவனிக்க வேண்டியது ஸ்டீயரிங் கன்ட்ரோல். கிளட்ச் கன்ட்ரோலுடன் ஸ்டீயரிங் கன்ட்ரோலும் மிக அவசியம். மேலும், காரின் ஸ்டீயரிங் வீல் ஒன்றரை ரவுண்டு சுற்றும் அளவுக்கு ப்ளே இருக்கும்.

இப்போது வரும் புதிய கார்கள் அனைத்தும் கிளட்சை சரியாக ரிலீஸ் செய்தாலே 10 கிமீ வேகம் வரை செல்லும். பைட்டிங் பாயிண்ட் கிளட்ச் கன்ட்ரோலை முதலில் தெரிந்துகொண்டு ஒவ்வொரு முறையும் நிதானமாக காரை மூவ் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.

15 கிமீ வேகத்தை கார் எட்டியவுடன் கிளட்சை மிதித்து இரண்டாவது கியரை மாற்றுங்கள். கிளட்சை முழுவதுமாக ரிலீ்ஸ் செய்துவிட்டு ஆக்சிலேட்டரை கொடுக்க வேண்டும்.

வளைவுகளில் திரும்பும்போது...

பொதுவாக இடதுபுறத்தில் காரை செலுத்த பழகிக்கொள்ளுங்கள். வளைவுகளில் திரும்பும்போது எந்த பக்கம் திரும்ப வேண்டுமோ அதற்கான இன்டிகேட்டரை ஆன் செய்து கொள்வது மிக அவசியம்.

பின்னர் காரின் வேகத்தை முழுவதுமாக குறைத்துக்கொண்டு இருபுறமும் வளைவில் பார்த்துக்கொண்டு உங்கள் கார் செல்வதற்கு போதிய இடம் இருந்தால் ஆக்சிலேட்டரை மிதித்து காரின் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.

குறுகிய சந்துகளில் திருப்பும்போது காரை உடனடியாக திருப்ப வேண்டாம். பாதியளவுக்கு காரின் முன்பகுதியை தெருவிற்குள் நுழைத்துக்கொண்டு அதன் பின் திருப்பினால் எளிதாக திரும்பும்.
யு டர்ன் போடும்போது ... 

ஸ்டீயரிங் வீலில் ஒன்றரை ரவுண்டு சுற்றும் அளவுக்கு ப்ளே இருக்கும் என்று முன்பு கூறினோம் அல்லவா. அதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பெரிய வளைவாக இருந்தால் ஸ்டீயரிங் வீலில் பாதி ரவுண்டு திருப்பினாலே கார் பெரிய வளைவுகளில் அட்டகாசமாக திரும்பும்.

சிறிய வளைவுகளில் திரும்பும்போது ஒரு ரவுண்டு ஸ்டீயரிங்கை திருப்பிக்கொண்டால் கனக்கச்சிதமாக திரும்பும். இதேபோன்று, யு டர்ன் போடும்போது முழு ரவுண்டு அதாவது ஒன்றரை ரவுண்டும் திருப்பினால் அழகாக யு டர்ன் போட்டுவிடலாம்.

வேகத்தடையில் ஏறி இறங்கும்போது...


வழியில் சிறிய வேகத்தடை இருந்தால் வேகத்தை முழுவதுமாக குறைத்துக்கொண்டு முதல் கியரை மாற்றி சிறிது தூரத்துக்கு முன்னரே கிளட்சையும், பிரேக்கையும் ரீலிஸ் செய்துவிடவும்.

கார் தானாகவே அழகாக தவழ்ந்து எந்த வித பாதிப்பு இல்லாமல் வேகத்தடையை கடந்துவிடும். இப்போது ஆக்சிலேட்டரை கொடுத்து வேகத்துக்கு தகுந்தாற்போல் கியரை அடுத்தடுத்து மாற்றுங்கள்.

அகலமான அல்லது பெரிய வேகத்தடை இருந்தால் இரண்டாவது கியரில் வைத்து காரை மேற்சொன்னது போல் மூவ் செய்யவும். தேவையான இடங்களில் கண்டிப்பாக ஹாரன் அடிக்க மறக்காதீர்.

பிரேக் பிடிக்கும்போது...

தற்போது வரும் கார்கள் அனைத்தும் நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்டவை. எனவே, பிரேக்கை லேசாக அழுத்தினால் போதுமானது. புதிதாக கார் ஓட்ட கற்றுக்கொள்ளும்போதே பிரேக்கை அழுத்தும் முறையையும், கன்ட்ரோலையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
Pettagum

கருத்துகள் இல்லை:

நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும். மேலும் அந்...

Popular Posts