லேபிள்கள்

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

பெண்கள் கவனத்திற்கு…


கையடக்க காமிராக்கள், மொபைல் வீடியோ காமிராக்கள், மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச் சிறிய காமிராக்கள் என்பது இன்றை நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் நல்ல பயன்பாடுகள் கருதி நமக்கு வழங்கினாலும் அதை எத்தனை பேர் நன்மையாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி.

மொபைல் கேமிராக்கள், கையடக்க வீடியோ கேமிராக்கள் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப் படுகிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
குறிப்பாக தன் கணவன்  மற்றும் வீட்டில் உள்ள ஆண்கள் வெளிநாடுகளில் இருக்க தனியாக வெளியிடங்களுக்கு செல்லக் கூடிய, தனியான தமது காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய நிலையில் உள்ள நம் சமுதாயப் பெண்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவே, நம் சமுதாய பெண்களின் மத்தியில் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பொது இடங்களில் காமிராக்கள் :
பொது இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட் போன்ற பொது இடங்களில் வரும் பெண்களை மொபைல் காமிராக்கள் மூலம் படமெடுத்து இன்டர்நெட்டில் வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் பெருகி வருகிறது. ஆடை விலகிய நிலையில் பல குடும்பப் பெண்களின் படங்கள், வீடியோக்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். ஹிஜாப் அணியும் பெண்கள் இது பற்றி கவலைப்பட வேண்டாம் என்றாலும். பர்தா அணியாமல் வெளியே செல்லும் பெண்கள் இது பற்றிய விழிப்புணர்வு பெற்றுக் கொண்டு தங்கள் ஆடைகள் சரியாக இருக்கிறதா என்று கவனம் வைத்துக் கொள்வது நல்லது.
பள்ளி, கல்லூரி, விடுதிகளில் :
பள்ளி, கல்லூரி, விடுதிகளில் தங்கும் மாணவிகள் அவர்களின் அறைகளில், மற்றும் கழிவறை, குளியலறைகளில் காமிராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்தவும் சக மாணவர்கள் தங்களை காமிராக்களால் படமெடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் இன்று சகஜமாக நடந்து வருகிறது. இதிலும் பர்தாவைப் பேணும் மாணவிகள் தப்பித்தார்கள் என்று சொல்லலாம் மற்றவர்கள் கவனமாக எப்பவும் விழிப்புணர்வுடன் இருக்கவும்.
பொதுக்கழிப்பிடங்கள், குளியலறைகள், ஹோட்டல் அறைகள்:
பொதுக் கழிப்பிடங்களுக்கு செல்லும் பெண்கள், பொதுக் குளியலறைகளை பயன்படுத்தும் பெண்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும்போது வேலை நிமித்தமாக அங்கு ஹோட்டல்கள், லாட்ஜ்களில் தங்க நேரிடும்போது அங்குள்ள அறைகளை பயன்படுத்தும் போதும், கழிப்பறை, குளியலறைகளிலும் காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்று நன்றாக கவனித்துப் பார்க்கவும். தங்களுக்கு தெரியாமல் தங்களை, தங்கள் செயல்களை படமெடுக்கும் காமிராக்கள் அங்கு பொருத்தப் பட்டிருக்கலாம் கவனம் தேவை.
மருத்துவமனைகள் (ஆஸ்பத்திரிகளில்) கவனம் தேவை:
மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்கள் தனியாக செல்லாதீர்கள். தக்க துணையுடன் செல்வது நல்லது, மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும் போதும், ஆடைகளை மருத்துவ காரணங்களுக்காக ஆடைகளை விலக்கும் போதும் கவனமாக இருங்கள், காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்பதை கவனித்து உறுதி செய்து கொள்ளுங்கள், மருத்துவமனைகளில் டெஸ்ட்டுக்கு என்று எதாவது மருந்துகளை உட்கொள்ள சொல்லும் போதும் கவனம் தேவை உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.
இப்படித்தான் ஒரு மருத்துவர் தன் மருத்துவமனைக்கு கால்வலி என்று வந்த குடும்பப் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து தனி அறைக்கு எடுத்துப் போய் அவர்களின் கற்பையும் சூறையாடி மானபங்கம் செய்து  அவர்களை ஆடையின்றி படமெடுத்து, வீடியோவாகவும், புகைப்படமாகவும் இன்டர்நெட்டில் விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தான், இன்றைக்கு அந்த குடும்பப் பெண்களின் அலங்கோல புகைப்படங்கள், வீடியோக்கள் இன்டர்நெட்டில் வலம் வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை.
ஆகவே மருத்துவமனைகளுக்கு செல்லும் நமது பெண்கள் தக்க துணையுடனும் சென்று அங்கு மிக்க கவனத்துடனும் இது பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.
துணிக்கடைகளின் உடை டெஸ்ட் செய்யும் அறைகளும் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகளும்:
நாம் துணிக்கடைகளுக்கு செல்வது இயல்பானது அங்கு உடைகளைப் போட்டு பார்த்து சரிபார்க்க சிறிய அறை பெண்களுக்காக பெரிய கடைகளில் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த துணிக்கடைகளின் உடைகளை போட்டு சரிபார்க்கும் அறைகளைப் பயன்படுத்தும் பெண்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அங்கு கண்டிப்பாக கேமிராக்கள் தங்களை கண்காணிக்ப் பொறுத்தப் பட்டிருக்கும், வேறு நோக்கத்தில் இல்லை என்றாலும் துணிகள் களவு போகிறதா, துணிகளை மறைக்கிறார்களா என்று பார்ப்பதற்காகவாவது அங்கு கேமிராக்கள் பொருத்தப் பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு தாங்கள் உடைகளை மாற்றவும். காமிராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என்றாலும். கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த கண்ணாடிகளிலும் இரண்டு வகை கண்ணாடிகள் உண்டு இவைகளைகப்பற்றியும் நாம் தெரிந்து கொள்வது நல்லது. கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒரு வகை இன்னொரு வகை நாம் பார்க்கும்போது கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கும். ஆனால் மறுபக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு, மறைவு இல்லாமல் நம்மைக் காட்டும் இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றிதான் நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். இந்த உடை மாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம் இவைகளை கவனத்தில் கொண்டு செயல்படவும்.
நம்மையறியாமலேயே நம்மை படமெடுத்து, வீடியோ எடுத்து மற்றவர்களுடன் இன்டர்நெட்டில் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் தற்போது மிக சாதாரணமாக நம் நாட்டிலும் பரவி வருகிறது. இதற்கு காரணம் கையடக்க காமிராக்கள்தான் என்றாலும் நாமும் கவனமாக இருந்து இது போன்றவைகளில் சிக்காமல் வாழ பழகிக் கொள்ளவும் தக்க விழிப்புணர்வை நம் சமுதாயப் பெண்களுக்கும் சொல்லி நம் எல்லோரிடமும் ஒரு எச்சரிக்கை உணர்வை எப்பவும் ஏற்படுத்த வேண்டும்.
நன்றி: இஸ்லாம்குரல்.காம்

கருத்துகள் இல்லை:

பழங்களில் உள்ள விதைகளின் பயன்கள்

பழங்கள் சாப்பிட சிறந்த பொருட்களில் ஒன்றாகும். சுவையாகவும் இனிப்பாகவும் இருப்பதுடன் , ஒட்டு மொத்தமாக நமது ஆரோக்கியத்திற்கு அவசியமான பலவி...

Popular Posts