லேபிள்கள்

வியாழன், 1 டிசம்பர், 2011

இமெயில் வதந்திகள் – ஓர் இஸ்லாமியப் பார்வை!


எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி 

அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.
தகவல் பரிமாற்றம் என்பது காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே வருகிறது. முற்காலங்களில் எல்லாம் வாய்மொழியாகவே பரிமாறப்பட்டு வந்த வந்த தகவல் பரிமாற்றம் தற்போது நவீன தொழில் நுட்ப வளர்ச்சியின் உதவியால் சில வினாடிகளில் கோடிக்காண மக்களைச் சென்றடைகிறது.
இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் கூட வெளிநாட்டில் வாழும் உறவினர் ஒருவர் மரணமடைந்தால் சில நாட்களுக்கு ஏன் சில வாரங்களுக்குப் பின்னரே அந்தச் செய்தியை அறிய முடிந்தது. ஆனால் இப்போது உடனுக்குடன் செய்தியை அறிந்துக் கொள்ளும் அறிவியல் வளர்ச்சியை பெற்றிருக்கிறோம். இந்த அறிவியல் வளர்ச்சியின் மற்றொரு சாதனை தான் இமெயில் எனப்படும் தகவல் பரிமாற்றம். இந்த வசதியின் மூலம் மனிதர்கள் எண்ணிலடங்கா பலன்களைப் பெறுகிறார்கள் என்பது உண்மை தான். அதே நேரத்தில் சில விஷமிகளின் பொய்யான தகவல்கள் கூட ஒரு சில நிமிடங்களில் உலகையே வலம் வந்துவிடுகிறது.
இதை சாதகமாக பயன்படுத்தி இஸ்லாத்தின் விரோதிகள் பல பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். இஸ்லாத்தைப் பற்றிய அடிப்படை அறிவு இல்லாதவர்கள், நல்ல விஷயங்களைப் பரப்புவோம் என்ற நல்ல நோக்கில் தமக்கு இமெயிலில் வந்த அந்த தகவல் உண்மையானது தானா என்று சிறிது கூட யோசிக்காமல் தமது இமெயில் முகவரி பட்டியலிலுள்ள அனைவருக்கும் அதே கணத்தில் அந்த தகவல்களை அனுப்பி விடுகின்றனர்.. அதை பெற்றவரும் அவ்வாறே யோசிக்காமல் அனுப்ப அந்த பொய்யான தகவல் ஒரு சில நிமிடங்களில் உலகையே வலம் வந்து விடுகிறது.
உதாரணத்திற்கு சமீபத்தில் பிரபலமடைந்த விண்வெளி வீராங்கனை இஸ்லாத்தை தழுவிய இமெயில் வதந்தியைக் கூறலாம்.
இந்த வகையான தகவல்களை பரப்பும் முஸ்லிம்கள் வேண்டுமானால் நாங்கள் ஆர்வக் கோளாறினால் செய்து விட்டோம் எனக் கூறலாம். ஆனால் இந்த பொய்யான தகவல்களின் மூலம் ஏற்படக் கூடிய பாரதூரமான விளைவுகளைப் பற்றி நாம் யோசிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
இவ்வாறு வதந்தியைப் பரப்புவோர்களை நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள்.
‘தான் கேட்டவற்றை அனைத்தையும் (அப்படியே பிறரிடம்) ஒருவன் கூறுவது என்பது, அவன் பொய்யன் என்பதற்கு போதுமா(ன சான்றா)கும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.
பெற்ற தவறான தகவல்களை நன்மை செய்கிறோம் என்ற நினைப்பில் ஆராயமல் நாம் பிறருக்கு அனுப்ப நாம் அந்த தவறான தகவலை ஆரம்பத்தில் அனுப்பிய அந்த பொய்யனுக்கு உடந்தையாக இருப்பதோடல்லாமல் நமக்கும் பொய்யன் என்ற பட்டம் கிடைக்க வேண்டுமா? நாம் இது பற்றி யோசிக்க கடமைப்பட்டுள்ளோம். ஏனென்றால் பொய்யர்களுக்கு மறுமையில் மிகக் கடுமையான தண்டணைகள் இருக்கிறது என்று நபிமொழிகள் எச்சரிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

சமையல் எண்ணெய்களுக்கு எக்ஸ்பயரி தேதி உண்டா?"

விகடனின் 'Doubt of common man' பக்கத்தில் சுந்தரம் என்ற வாசகர் , " நாம் பயன்படு...

Popular Posts