லேபிள்கள்

சனி, 13 ஏப்ரல், 2013

கடனை திருப்பி செலுத்துங்கள்



எவ்வளவு சம்பாதித்தாலும், அதற்கேற்ப தேவைகளும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. தேவைகளை நிறைவேற்றுவதற்கு கடன் வாங்கத்தான் வேண்டியிருக்கிறது. எனவே, கடன் வாங்குவது தவிர்க்க முடியாத விஷயம். அப்படி கடன் வாங்கியிருந்தால், அதை உரிய காலத்தில் திருப்பிக் கட்டி விட வேண்டும். இல்லாவிட்டால், கடன்காரன் திட்டத்தான் செய்வான். நபிகள் நாயகத்தின் வாழ்விலும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது. நாயகம் ஒரு வணிகரிடம் கடன் வாங்கியிருந்தார். ஆனால், அதைத் திருப்பிச் செலுத்தவில்லை. ஒருநாள் தன் தோழர் உமருடன் அவர் தெருவில் நடந்து கொண்டிருந்த போது, அந்த வணிகர் அவரைப் பார்த்து விட்டார்.

""நீர் வாங்கிய கடன் என்னாயிற்று? ஏன் திருப்பித் தரவில்லை?'' எனக்கேட்டு நபிகள் நாயகத்தை காரசாரமாக திட்ட ஆரம்பித்து விட்டார். அவரது திட்டுதலை நாயகம் அமைதியாக கேட்டுக் கொண்டார். ஆனால் அவரது நண்பர் உமருக்கு கடுங்கோபம் வந்து விட்டது. ஒரு கட்டத்தில் அவர் வணிகரை அடிக்கவே பாய்ந்து விட்டார். அப்போது நாயகம் அவரைத் தடுத்தார். அவர் உமரிடம், ""தோழரே! தாங்கள் செய்வது சரியல்ல! கொடுத்த கடனை அவர் திருப்பிக் கேட்கிறார். நான் அவருக்கு கொடுக்காமல் இருந்ததற்காக என்னைத்தான் நீர் கண்டித்திருக்க வேண்டும்,'' என்றார். அவரது பதிலைக்கேட்ட உமர் அமைதியாக நின்றார். நபிகள் நாயகத்தின் இந்த பதிலை சற்றும் எதிர்பாராத வணிகர், தான் அவரை திட்டியதற்கு வருந்தினார். அண்ணலாரிடம் மன்னிப்பும் கேட்டார். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தி விட வேண்டும் என்பதில் நபிகள் நாயகம் உறுதியைக் கடைபிடித்தார். கடன் வாங்கியவர்கள் அதனை வாங்கும்போது இருந்த அக்கறையை விட, அதøனை திருப்பி செலுத்துவதில் அதிக அக்கறை கொண்டிருக்க வேண்டும் என்பதை நபிகள் நாயகம் வாழ்வில் நடந்த இந்நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது.

ஜூம்ஆ தொழுகை

"ஜூம்ஆ' என்றால் வெள்ளிக்கிழமை. இந்த நாள் ஒரு இனியநாள். ஏனெனில், அன்று அல்லாஹ் நரகத்தில் வசிக்கும் ஆறுலட்சம் பேரை விடுதலை செய்கின்றான். ஆகவே, அன்றைய தொழுகைமிகவும் முக்கியமானதாகிறது. யார் ஒருவர், மூன்று வெள்ளிக்கிழமைகளில் காரணமின்றி தொழாமல் இருந்து விடுகிறாரோ, அவரை முனாபிக் (நயவஞ்சகன்) என்கிறார் நபிகள் நாயகம். ஒவ்வொரு நாளும் வானத்தின் மத்தியில் சூரியன் வரும்போது, நரகம் எரிக்கப்படுகின்றது. அந்நேரத்தில் எந்த தொழுகையையும் தொழக்கூடாது. ஆனால், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் நரகம் எரிக்கப்படுவதில்லை. எனவே, அந்நாளில் மதியம் தொழுகை செய்யலாம். வெள்ளிக்கிழமை தொழுகையை விடாமல் கடைபிடிக்க வேண்டும்.

கடமைக்காக தொழலாமா?

நபிகள்நாயகம் மூதேவிகளுக்கு ஐந்து அடையாளங்கள் இருப்பதாகச் சொல்கிறார். அவை,
1. ஆலிம் உலமாக்களை (மார்க்க பேரறிஞர்கள்) விட்டு விலகியிருப்பவர்கள்.
2. மார்க்கத்திற்கு விரோதமாக தங்கள் பலத்தை செலவிடுபவர்கள்.
3. கடமைக்காக தொழுபவர்கள்.
4. பேச்சில் பொய்யை நிறைப்பவர்கள்
5. பொருள் சேகரிக்கும் ஆசையைத் தவிர வேறெதுவும் இல்லாதவர்கள்.
இந்த குணங்கள் உங்களிடம் இருந்தால் அவற்றை கைவிட்டு, மூதேவியிடமிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்.


--
*more articles click*
www.sahabudeen.com



கருத்துகள் இல்லை:

உங்கள் பைக்கை நீங்களே பராமரிக்க உதவும் சில முக்கிய டிப்ஸ்கள்.

  மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்களுக்கு அதை பற்றிய அனைத்து விவரங்கள் மற்றும் எப்படி ரிப்பேர் செய்வது என்பது தெரிந்திருக்க வேண்டும் என்ற அவ...

Popular Posts