லேபிள்கள்

புதன், 23 மே, 2012

சுயமருத்துவம்... வேண்டாம் இந்த விபரீதம் ! உபயோகமான தகவல்கள்

'காலையிலிருந்து சமையல்கட்டுல மூணு மணி நேரமா நின்னு வேலை பார்த்ததுல கால் ரெண்டும் ஒரே வலி, இடுப்பு கழண்டு கீழ விழுற மாதிரி வலி கொன்னு எடுக்குது. போன தடவ இடுப்புவலிக்காக டாக்டர்கிட்ட போனப்ப வலி குறைய மாத்திரை கொடுத்தாரே... அதுல ரெண்டு வாங்கிட்டு வாங்களேன்... போட்டுட்டுத் தூங்குறேன்...'' 
- வீட்டில் அடிக்கடி கேட்கும் வார்த்தைகள் இவை.
இப்படித்தான் நம்மில் பலர் ஒருமுறை ஏதோ ஒரு வலிக்காக மருத்துவர் கொடுத்த வலி நிவாரணி மாத்திரைகளை, எல்லா வகையான வலிகளுக்கும் பயன்படுத்துகிறோம். குறிப்பாக... ஆர்த்ரைட்டீஸ், கால் மூட்டுவலி, தசைவலி, மூட்டு எரிச்சல் போன்றவற்றுக்கு முதல் முறை பிரச்னை வந்ததும் மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெற்று வாங்கிய மாத்திரைகளை... அடுத்தடுத்த முறை அந்த வலி தோன்றும் போதெல்லாம் மருத்துவ ஆலோசனை இல்லாமல் பயன்படுத்துகிறோம்.
''இது சரியா?'' என்ற கேள்வியுடன் சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் டாக்டர் கருணாநிதியைச் சந்தித்தபோது...
''வலி நிவாரணிகளை அதிகம் பயன்படுத்துபவர்கள் பெண்கள்தான்'' என்று எடுத்த எடுப்பிலேயே அதிர்ச்சியைக் கூட்டினார் டாக்டர்.
''என்னிடம் வரும் நோயாளிகளில் பாதிப் பெண்கள், 'கை, கால் குடைச்சல் தாங்க முடியல டாக்டர். வலி சட்டுனு போற மாதிரி மாத்திரை கொடுங்கஎன்பார்கள். ஏன் இந்த வலி நமக்கு வருகிறது என்று தெரிந்துகொள்வதைவிட, வலி உடனே பறந்து செல்வதற்கு என்ன வழி என்றுதான் பலரும் அவசரப்படுகிறார்கள். இதற்குக் காரணம் வீட்டு வேலை, பிழைப்புக்கான வேலை என்று சக்கரமாய்ச் சுழலும் வாழ்க்கைச் சூழல்தான்.
வலியைக் குறைக்க பயன்படுத்தப்படும் மாத்திரைகளில் 'நான்-நார்காடிக்’, 'நார்காடிக்என்று இரண்டு வகைகள் இருக்கின்றன. அதில் 'நான்-நார்காடிக்வகையில் 'நான் ஸ்டீராய்டல் ஆன்ட்டி இன்ஃபிளமேட்டரி ட்ரக்ஸ்' (NSAID- Non Steroidal Anti-Inflammatory Drugs) மாத்திரைகளைத்தான் அதிகம் பயன்படுத்துகிறோம். புரூஃபன், அசிட்டமினோபென் போன்ற மாத்திரைகள் இந்த வகையில் அடங்கும்.''
''வலி நிவாரணிகளை அடிக்கடி விழுங்கு வதால் என்ன பின்விளைவுகள் ஏற்படும்?''
''ஒருமுறை வலி போவதற்காக நாம் பயன்படுத்திய மாத்திரையை அதன்பிறகு ஒவ்வொரு முறையும் வலி தோன்றும்போது டாக்டரின் அட்வைஸ் இல்லாமல் விழுங்கிப் பழகிக் கொண்டால்... அது மாத்திரை போட்டே ஆகவேண்டும் என்கிற 'அடிக்ஷன்பிரச்னையை உண்டாக்கும். அடுத்த கட்டமாக முதலில் வயிற்றில் புண் (அல்சர்) உண்டாகும். அதன் எதிரொலியாக குடலின் தோல் கிழிந்து, உள்ளேயே 'கேஸ்ட்ரிக் எரோஸன்எனப்படும் ரத்தக்கசிவு உண்டாகும். அதை உணராமலும், தெரியாமலும் 'வயிற்று வலி வயிற்று வலிஎன்று துடித்து, அதற்காக தனி சிகிச்சை எடுப்போம். சிலருக்கு வலி நிவாரணிகளைத் தொடர்ந்து 10 நாட்கள் சாப்பிட்டால்கூட, பிரச்னை வரலாம். அடுத்து நேரடியாக பாதிக்கப்படுவது சிறுநீரகம்.
50 வயதைக் கடந்தவர்கள் வலி நிவாரணிகளை அடிக்கடி பயன்படுத்தும்போது, 'ஹைபர் டென்ஷன்மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. ஹைபர் டென்ஷன் உண்டான பின்பும் தொடர்ந்து வலி நிவாரணிகளை உட்கொண்டால், அது மாரடைப்பு வரை செல்லலாம். கூடுதல் பரிசாக, ரத்தம் உறையும் பிரச்னையும் உண்டாக்கும்.
ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறு பிரச்சனை உள்ளவர்கள், வலி நிவாரணிகளைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது அந்த
   பிரச்னை அதிகமாகும். சிலருக்கு இந்த மாத்திரைகளை சில நாட்கள் உட்கொண்டாலே மலச்சிக்கல் பிரச்னை உண்டாகும்.''
''வலி நிவாரண மாத்திரை களால் ஏற்படும் விளைவு களைத் தடுப்பது எப்படி?''
''அறுவை சிகிச்சை, மூட்டு - தசை வலிக்குள்ளானவர்கள் வலி நிவாரணிகளை உட்கொள்ளாமல் இருக்க முடியாது. ஆனால், அதை அதிகம் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. முக்கியமாக, முதல் முறை டாக்டரைச் சந்திக்கும்போது 250 மில்லி கிராம் அளவு மாத்திரையைக் கொடுத்திருந்தார் என்றால், சில நாட்கள் கழித்து அந்த வலி உண்டாகும்போது அதைக் குறைக்க 100 மில்லி கிராமே பரிந்துரைப்பார். அதுவே போதுமானதாக இருக்கும். ஆனால், மருத்துவ ஆலோசனை இல்லாமல் தொடர்ந்து அதே மருந்தை எடுத்துக் கொள்ளும்போது, 250 மில்லிகிராமையே பயன்படுத்துவோம். இது ஆபத்துக்கு அழைத்துச் சென்றுவிடும்.
வலிநிவாரண மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது, 'ஆன்ட்டி - ஆசிட்மாத்திரைகளையும் சேர்த்து உட்கொண்டால், மாத்திரையால் உண்டாகும் அல்சர் வராமல் தடுக்க முடியும்.''
 

செவ்வாய், 22 மே, 2012

தாராளமாக தண்ணீர் குடிக்காவிட்டால் கல் தான்! ஹலோ டாக்டர்


உடலில் உள்ள பாகங்களில், மூளை, இதயம் போன்ற உறுப்புகளுக்கு நிகரான முக்கியத்துவம் பெற்றது, சிறுநீரகம். ரத்தத்தை சுத்திகரித்து, கழிவுகளை வெளியேற்றும் இந்த உறுப்பின் பணி, அளவிடற்கரியது. பொதுவான காரணங்களால், உள்ளுறுப்புகள் பாதிக்கப்படுவது போல, சிறுநீரகமும் பாதிக்கப்படுகிறது. புகை பிடித்தல், உடற்பயிற்சி இன்மை, மதுப் பழக்கம், உடல் எடை, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என, பல காரணங்களை அடுக்கலாம்.

சிறுநீரக கல்:
 சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்னையில் முக்கியமானது, கல் உருவாகுதல். சிறுநீரில் உள்ள உப்புகள் ஒன்று திரண்டு, கற்களாக உருவெடுக்கின்றன. கால்சியம், மெக்னீசியம் ஆகியவற்றின் ஆக்சலேட், பாஸ்பேட் உப்புகளால், இவை உண்டாகின்றன. இது, மிகச் சிறு துகள் அளவில் துவங்கி, பிறந்த குழந்தையின் தலை அளவிற்குக் கூட வளரக் கூடும். பெரிய கற்கள் கூட, அறிகுறியை வெளிப்படுத்தாமல் இருக்கும். கற்களின் வெளிப்பரப்பு, முட்களைப் போல இருந்தால், அவை சிறுநீர் பாதையில் உராய்ந்து, சிறுநீரில் ரத்தம் வெளியாகலாம். இவை பரம்பரை காரணமாக, போதிய நீர் குடிக்காததால் உருவாகலாம். அசைவ உணவை தவிர்ப்பது, போதிய நீர் குடிப்பது, சிறுநீர் பாதை நோய் தொற்று மற்றும் அடைப்புக்கு தாமதமில்லாத சிகிச்சையால், கல் உருவாவதை தவிர்க்கலாம்.

அறிகுறிகள்:
 இதன் முக்கிய அறிகுறி, வயிற்று வலி. சிறுநீர் பாதையில் வலது, இடது பக்க கீழ் முதுகு பகுதியில் வலி வந்து, விரைகள் வரை பரவலாம். வாந்தி, நீர்க்கடுப்பு, சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல், சிறுநீரின் வேகம் தடைபடுதல், காய்ச்சல் ஏற்படலாம். பெண்களை விட ஆண்களுக்கு, சிறுநீரக கல் உருவாகும் வாய்ப்பு, மூன்று மடங்கு அதிகம். இந்நோயாளிகள் தக்காளி, நெல்லி, முந்திரி பருப்பு, வெள்ளரி, கறுப்பு திராட்சையை தவிர்க்கலாம். பால், 250 மி.லி.,க்கு மிகாமல் எடுக்கலாம். எலுமிச்சை ஜூஸ், இளநீர் நிறைய குடிக்கலாம். முள்ளங்கி, வாழைத்தண்டு, சிறுநீர் பெருக்கியாக செயல்படுவதால், பெரும் பயன் உள்ளதாகக் கருத முடியாது. பார்லி, கொள்ளு, பாகற்காய், காரட் சேர்த்துக் கொள்ளலாம். ஒருவரின் சராசரி சிறுநீர் அளவு, ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் வரை இருக்கலாம். கல் உருவாகும் பிரிவினர், 2 லிட்டர் சிறுநீர் வெளியேறும் அளவு, 3 முதல் 4 லிட்டர், தண்ணீர் குடிக்க வேண்டும். 4 மி.மீ.,க்கு கீழ் உள்ள கற்கள், பெரும்பாலும் தானாகவே வெளியேறி விடுகின்றன. 6 மி.மீ.,யை விட பெரியவை, தானாக வெளியேறுவதில்லை. இதற்கு தாராளமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

சிறுநீர் சிக்கல்:
புராஸ்டேட் சுரப்பி, ஆண்களுக்கே உரியது; இனப் பெருக்கத்துடன் தொடர்புடையது. இது, சிறுநீர் பாதையின் அடியில், சிறுநீர்த் தாரையின் முதற்பகுதியை சூழ்ந்துள்ளது. வயது முதிர்ந்தவர்களுக்கு மிகவும் வளர்ச்சி அடைந்த நிலையில், சிறுநீர்த் தாரையை அமுக்குகிறது. இதனால், சிறுநீர் பாதை அடைபட்டு, சிறுநீர் கழிக்க முடியாமல் தேங்கும். அந்நிலையில், உடனடியாக அடைப்பை நீக்க வேண்டும்.

வயதானவர்களுக்கு சிறுநீர் சிக்கல் ஏற்படும்போது, ஆசன வாய்க்குள் விரல் விட்டு பார்த்தால், புராஸ்டேட் சுரப்பியின் இருபக்க மடல்கள் துருத்திக் கொண்டிருப்பதை உணரலாம். அடிக்கடி சிறுநீர் கழித்தல், முயற்சிக்கும்போது உடனடியாக சிறுநீர் வெளி வராதது, சிறுநீர் வெளி வருவதை கட்டுப்படுத்த முடியாதது, சிறுநீர் நின்று நின்று வருவது, நாட்கள் செல்லச் செல்ல, கிருமி தாக்கம் ஏற்பட்டு, சிறுநீர் தொற்றின் அறிகுறிகளாக, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், காய்ச்சல், அடிவயிற்றில் வலி தோன்றுவது என, பாதிப்பை ஏற்படுத்தும். புராஸ்டேட் எந்தளவு வளர்ந்துள்ளது, மலக்குடலின் சீதச்சவ்வை பாதித்துள்ளதா, புற்றுநோய் வளர்ச்சியா என அறிவது அவசியம். 50 வயதானவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும். அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு, "எண்டோஸ்கோபி' சிகிச்சை செய்யப்படுகிறது. முன்னதாக, வழக்கமான ரத்தம், சிறுநீர் பரிசோதனைகளுடன், ரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் தேவைப்படும். மேலும், சிஸ்டோஸ்கோபி, பை உள்நோக்கல் சோதனையும் செய்யப்படும். இதன் மூலம், பாதிப்புக்கான வேறு காரணங்களையும் அறியலாம்.
http://pettagum.blogspot.in

திங்கள், 21 மே, 2012

மாமியார் மெச்சும் மருமகளாக!


உங்க கணவர் அம்மா பிள்ளையா.. ?

அம்மாவா, நானா? இரண்டுல ஒண்ணு முடிவு பண்ணுங்கஎன கோஷமிட்டு விவாகரத்துப் படியேறுபவர்கள் எக்கச்சக்கம் என்கின்றனர் மேரிடல் கவுன்சிலிங்வல்லுனர்கள். இங்கிலாந்தில் நடந்த ஆய்வு ஒன்றில் 60 சதவீதம் பெண்களுக்கு மாமியாருடன் சண்டையாம். அது வாழ்நாள் முழுதும் ஒரு வித மன அழுத்தத்தைக் கொடுக்கிறதாம். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் டெரி அப்டர் நடத்திய ஆய்வின் முடிவு இது. எனவே மாமியார் மருமகள் பிரச்சினை ஏதோ இந்தியப் பிரச்சினை என்று நினைக்கவேண்டாம். மாமியார்கள் இருக்கும் எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் சர்வதேசப் பிரச்சினை இது!
அவரது ஆய்வில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் தங்கள் கணவன்மார் அம்மாப் பிள்ளையாக இருக்கிறார்கள் என குறைபட்டுக் கொண்டனர். அதே சமயம், மூன்றில் இரண்டு பங்கு மாமியார்களோ, தங்கள் பையன் தங்களை தனிமைப்படுத்துகிறான், பொண்டாட்டி தாசன் ஆகிவிட்டான் என வருந்துகின்றனர். எனவே இது ஒரு விதத்தில் அக்கரைப் பச்சை அனுபவம் தான். ஒவ்வொருவரும் அடுத்தவர் பார்வையில் பார்க்க ஆரம்பிக்கும் போது பல விஷயங்கள் எளிதில் புலனாகும். சிக்கல்கள் தீரத் துவங்கும்.
தன் பிள்ளை தன்னைக் கவனிக்கவில்லையோ என அம்மா கவலைப்பட ஆரம்பிக்கும் முதல் புள்ளி பல சிக்கல்களின் ஆரம்பம். அந்த சிந்தனையே வராமல் தடுத்தால் சிக்கலே இல்லை என்கிறார் ஒரு ஆலோசகர்.
அம்மாவிடம் மகன் பாசமாய் இருப்பது இயல்பே!
அம்மாவிடம் பையன் பாசமாய் இருப்பது இயல்பு. அப்படி இல்லாமல் இருந்தால் தான் கவலைப்பட வேண்டும். சரியாக வளர்க்கப்படாத மகன் சரியான பாதையில் செல்லாமல் இருக்க வாய்ப்பு அதிகம். எனவே அம்மாவின் மீது பாசமான பையன் என்பது ஒரு குறையல்ல. அது நல்ல விஷயம் எனும் எண்ணம் தான் முதலில் பெண்களுக்கு வரவேண்டும்.
மனைவியா? அம்மாவா? யாருக்கு ஆண்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்என ஆண் குழந்தைகளோட அம்மாக்களிடம் கேட்டுப் பாருங்கள். என் கணவன் அவரோட மனைவிக்கும், என் பிள்ளை அவனோட அம்மாவுக்கும் என்பார்கள். அதாவது எல்லா பெண்களுக்கும் தன் கணவன் தன்மீது அன்பு செலுத்த வேண்டும், அதே போல தனது மகனும் தன் மீது அன்பாய் இருக்க வேண்டும் எனும் ஆழமான ஆசை உண்டு. கணவனைப் பொறுத்தவரை தனது மனைவியை அவன் முழுமையாக ஏற்று அன்பு செய்ய வேண்டும். அது தனது அம்மாவை நிராகரித்துத் தான் நடக்க வேண்டும் என்பதில்லை.
சிக்கலில் மிக நுட்பமான பகுதி!
இந்த சிக்கலில் மிக நுட்பமான பகுதியைச் சொல்கிறேன். உங்க கணவன் அவரோட அம்மா கிட்டே ரொம்ப நெருங்கக் கூடாதா? ஒரு சின்ன வழி, நீங்க அவரோட அம்மா கிட்டே அதிகமா நெருங்கறது தான். குழம்ப வேண்டாம். தனது தாயைப் பார்த்துக் கொள்ள தன் மனைவி இருக்கிறாள் எனும் நிம்மதி கணவனுக்கு மிகப்பெரிய நிம்மதியாம். அது கணவன் தன் மனைவியிடம் அதிகம் நெருங்கும் காரணியாகிவிடும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இதே நிலை தான் மறு பக்கமும். தனது அம்மாவை தன் புருஷன் நன்றாகக் கவனிக்கிறார் என்றால் அந்த நிம்மதி மனைவிக்கு மிகப்பெரிய சுகம்.
வயதான காலத்தில் மகனின் ஆதரவை எதிர்பார்க்கும் தாய்!
வயதான காலத்தில் மகனின் ஆதரவை எதிர்பார்க்கும் தாய்க்கு அந்த ஆதரவு கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அது மகனுடைய கடமையும் கூட. ஆனால் அது மனைவியின் உரிமைகளை மீறியதாக இருக்கக் கூடாது என்பது மட்டுமே இங்கே பிரச்சினை. திருமணம் ஆன புதிதிலேயே புதுமணப் பெண் நினைத்தால் இத்தகைய பிரச்சினைகள் பிற்காலத்தில் பூதாகரமாக வெடிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.
முதலாவதாக மாமியாரைப் பற்றி கணவனிடம் குறை கூறுவதை நிறுத்த வேண்டும். தொன்னூற்று ஒன்பது விழுக்காடும் அதைக் கணவன் நம்பப் போவதில்லை. அப்படியே நம்பினாலும் அது அமைதியான குடும்ப வாழ்க்கைக்கு நல்லதா என்றால் இல்லை !. எல்லோருமாகச் சேர்ந்து அன்பாக வாழும் வாழ்க்கையே ஆரோக்கியமானது. சண்டையிட்டு ஒருவர் வெல்வதல்ல.
மாமியாரைப் பற்றி நல்லதா நாலு வார்த்தை உங்க கணவன் கிட்டே பேசுங்கள்!
யோசித்துப் பாருங்களேன். எப்போ கடைசியா உங்க மாமியாரைப் பற்றி நல்லதா நாலு வார்த்தை உங்க கணவன் கிட்டே பேசியிருப்பீங்க. முக்கால் வாசி பேரோட வாழ்நாள்லயே அப்படி ஒரு விஷயம் நடந்திருக்காது. மாமியாரைப் பற்றி நல்ல விஷயங்களை கணவனிடம் சொல்ல ஆரம்பியுங்கள். இயல்பானதைப் பேசினா போதும். உங்க அம்மா கையால ரசம் சாப்பிட்டா மனசு நிறைஞ்சு போயிடுதுன்னு சொல்லுங்களேன்”. சொல்றது போலித்தனமா இருக்கக் கூடாதுங்கறது முக்கியம்.
மாமியாருக்கு மதிப்பு கொடுங்கள்!
உங்க மாமியார் உங்களை விட வயசில பெரியவங்க. அவங்க ஒரு கால் நூற்றாண்டு காலம் கஷ்டப்பட்டு தன்னோட மகனை வளர்த்திருக்காங்க. அவங்க வாழ்க்கையில விலை மதிக்க முடியாத சொத்தான மகனை உங்க கிட்டே தந்திருக்காங்க. அதை மதிங்க. யாருக்கு அதிகம் உரிமைங்கறதெல்லாம் தேவையற்ற விவாதம். எந்தக் கண் தனக்குத் தேவைன்னு தலை கிட்டே போனா என்ன முடிவு கிடைக்கும்? எனவே அவங்களோட வயசுக்கு மரியாதை கொடுங்க. பொறுமையும், புன்னகையும் பெண்களோட மிகப்பெரிய ஆயுதம். மறக்க வேண்டாம்.
உங்க மாமியாரோட ரொம்ப நேரம் செலவிடுங்க. உங்க அம்மாகூட இருக்கும்போது எப்படி இயல்பா உற்சாகமா பேசுவீங்க ? அதே உற்சாகம் பிளஸ் அன்போட மாமியார் கிட்டே பேசிப் பாருங்க. வயசானவங்களுக்கு முக்கியமான தேவை, பேசறதுக்கும் கேட்கறதுக்கும் ஒரு நல்ல துணை தான். அந்த துணையா நீங்க இருங்களேன் !
உங்க பிள்ளைகளுக்கு உங்க தாத்தா பாட்டி செல்லம் கொடுக்கிறாங்களா ? ஜங்க் ஃபுட் குடுக்கிறாங்களா, டி வி போட்டு குடுக்கிறாங்களா ? டென்ஷன் ஆகாதீங்க. தாத்தா பாட்டிக்குன்னு சில விருப்பங்கள் உரிமைகள் உண்டு. நீங்க அந்த பருவம் வரும்போ புரிஞ்சுப்பீங்க. அதனால அந்த சின்னச் சின்ன விஷயங்களையெல்லாம் உலக மகா பிரச்சினைகள் போல எடுத்து பேசாதீங்க. அவர்களோட சின்னச் சின்ன சந்தோஷங்களுக்கு மதிப்பு கொடுங்க.
புகுந்த வீட்டிலும் இயல்பாக இருங்கள்!
உங்க வீட்ல இருக்கும்போ எப்படி இயல்பா கலகலப்பா இருப்பீங்களோ அப்படியே புகுந்த வீட்லயும் இருக்க முயற்சி பண்ணுங்க. அது ரொம்பவே பயனளிக்கும். அவர்கள் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை முறை வேறு. நீங்கள் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை முறை வேறு. இப்போது இரண்டு பேரும் ஒரே வீட்டில் இருக்கப் போகிறீர்கள், ஒரு வகையில் இது ஒட்டுச் செடி போன்ற அனுபவம். எனவே நன்றாக ஒட்டிச் சேர டைம் வேணும். அவசரப் படக் கூடாது. ஒட்டலையே என வெட்டிவிட்டால் சர்வமும் நாச மயம் !
அம்மாக்களைப் பொறுத்தவரை மகன் ஆனந்தமாக இருக்கவேண்டும் எனும் எண்ணமே பிரதானமாய் இருக்கும். ஒருவேளை மனைவி அவனை நன்றாகக் கவனிக்கவில்லையோ எனும் கவலை ஒரு புறம் இருக்கலாம். அல்லது அதிகமாய்க் கவனித்து நம்மை விட்டுப் பிரித்து விடுவாளோ எனும் பயம் இன்னொரு புறம் இருக்கலாம். இது மாமியார் மருமகள் இடையேயான ஆழமான உரையாடல்களுக்குப் பின்பு தான் இயல்பு நிலையை அடையும்.
மாமியார்கள் பிரச்சினைவாதிகளாய் மாற காரணங்கள் பல!
மாமியார்கள் பிரச்சினைவாதிகளாய் மாற பல காரணங்களை உளவியலார்கள் சொல்கின்றனர். தனது கணவன் தன்னை சரியான அளவுக்குக் கவனிக்காத ஏக்கம். சின்ன வயதிலேயே தான் இல்லாமல் மகனால் எதுவும் செய்ய முடியாது என உருவாக்கும் பிம்பம். தனது மகனிடமோ, மகளிடமோ உருவாக்கும் குற்ற உணர்வு. இப்படி பல காரணங்களை அவர்கள் அடுக்குகின்றனர். சில மருமகள்கள் தன்னை விட மாமனாரிடம் அன்பாய் இருப்பது கூட மாமியாருக்கு எரிச்சலைக் கிளப்புமாம்.
மாமியாருக்கு நீங்களாக விரும்பி ஒரு திடீர் பரிசு கொடுத்து அசத்துங்கள்!
சரி, ஒரு சின்ன கேள்வி. உங்களில் எத்தனை பேர் உங்கள் மாமியாருக்கு நீங்களாக விரும்பி ஒரு திடீர் பரிசு கொடுத்து அசத்தியிருக்கிறீர்கள்? தலையைச் சொறிய வேண்டாம். பதில் எல்லோருக்கும் தெரிந்தது தான். அப்புறம் என்னங்க ? கணவன் அம்மா பிள்ளையா இருக்கிறதுல என்ன ஆச்சரியம் இருக்கப் போவுது ?
மகிழ்சியான குடும்ப வாழ்க்கை மாமியாருடன் இணக்கமாகவும், அன்பாகவும் இருக்க உதவும். தனது தாயுடன் நல்ல அன்பாகவும் நட்பாகவும் இருக்கும் பெண்களில் 78 சதவீதம் பேர் மாமியாருடன் இணக்கமாக இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. அதே போல குடும்ப வாழ்க்கையில் ஆனந்தமாய் இருப்பவர்களில் 57.9 % பேர் தங்கள் மாமியார் ரொம்ப நல்லவங்க எனும் சர்டிபிகேட் தருகிறார்கள். அவர்கள் சொல்லும் சிம்பிள் அட்வைஸ், மாமியார் சொல்ற விஷயத்தை அம்மா சொன்னா என்ன ரியாக்ஷன் தருவீங்களோ, அதை மட்டும் தாங்க என்பது தான்!
குறைகளைச் சுட்டிக் காட்டிப் பேசும் பழக்கத்தை மூட்டை கட்டி வையுங்கள்!
அடுத்தவர்களுடைய குறைகளைச் சுட்டிக் காட்டிப் பேசும் பழக்கத்தை மூட்டை கட்டி வையுங்கள். அது நல்ல ஆரோக்கியமான பழக்கம் அல்ல. அவர்களுடைய பழக்கம் அவர்களுக்குஎன எடுத்துக் கொள்ளும் இளகிய மனம் இருக்கட்டும். என் பையனுக்கு என் சாப்பாடு ரொம்பப் புடிக்கும்ன்னு மாமியார் சொன்னா, “ஆமா.. என் சாப்பாடு மட்டும் புடிக்காதான்னு எதிர் கொடி புடிக்காதீங்க. அடிக்கடி போன் பண்ணினா, எப்பவும் அம்மா கூட பேசறது தான் வேலையான்னு முகத்தைத் தூக்கி வெச்சுக்காதீங்க. அம்மா கிட்டே சிரிச்சுப் பேசினா உங்க ஆளுங்க கிட்டே பேசும்போது மட்டும் எப்படித் தான் இந்த சிரிப்பு வருதோன்னு நக்கல் அடிக்காதீங்க.
சுருக்கமா சொல்லணும்ன்னா ஈகோவைக் கழற்றி வைத்து விட்டு ஆனந்தமான வாழ்க்கை வாழவேண்டுமென முடிவெடுத்து களமிறங்குங்கள். பிரச்சினைகளெல்லாம் பறந்தோடிப் போய்விடும் என்பது மட்டும் நிஜம்.
நன்றி: நீடூர்.இன்போ

ஞாயிறு, 20 மே, 2012

உங்களது குண்டு உடல் ஒல்லியாக வெள்ளை உணவுகளைத் தவிருங்கள்


உடல் பருமன் என்பது இன்றைக்கு பெரும்பாலோனரை படுத்தி எடுக்கிறது. உடல் எடையை குறைப்பதற்காக டயட் என்ற பெயரில் உணவை குறைத்து, சுவையை குறைத்து எதையாவது செய்து இறுதியில் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். உடல் எடையை குறைக்க உணவை குறைக்கத் தேவையில்லை என்பது உணவியல் வல்லுநர்களின் ஆலோசனை சரிவிகித ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டாலே உடல் எடை கட்டுப்படுவதோடு மன உளைச்சலும் சரியாகும் என்கின்றனர் நிபுணர்கள்.

வெள்ளை நிற உணவுகள்
நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் வெள்ளைநிறப் பொருட்களை குறைந்த அளவு சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சீனி,உப்பு,சாதம்,பால்,தயிர் போன்ற வெள்ளை நிறப் பொருட்களை அளவை குறைத்து சேர்க்கவேண்டும். கொழுப்பு நீக்கப்பட்ட பால் உபயோகிக்க வேண்டும். இது உடல் எடையை குறைப்பதோடு சத்துக்களை அப்படியே தக்கவைக்கும்.
கொழுப்பை கரைக்கும் உணவுகள்
கொள்ளு பயிரை அடிக்கடி சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும். கொள்ளு ரசம்,கொள்ளு சுண்டல் போன்றவை செய்து சாப்பிடலாம். அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள். இது நிச்சயம் எடையை குறைக்கும்.
வாரம் ஒரு முறையாவது ஓட்ஸ்,பார்லி சேர்த்துக் கொள்ளுங்கள். ஓட்ஸ் உடம்பில் உள்ள கொழுப்பையும்,பார்லி உடம்பில் அதிகம் உள்ள நீரையும் குறைக்கும்.ஆனால் பார்லியை அதிகம் முக்கியமாக கருவுற்றிருக்கும் பெண்கள் உபயோகப்படுத்த வேண்டாம். இது நீரின் அளவை குறைத்து சிசேரியனில் கொண்டு விட்டுவிடும். சிலர் கால்,கை வீக்கம் கர்ப்ப காலத்தில் ஏற்படும்போது அதிகம் பார்லியை உட்கொண்டுவிடுவதால் இப்படி நேர்ந்துவிடுகிறது.
சரி விகித உணவுகள்
காலை உணவு எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். ஆவியில் வேகவைத்த உணவு, நீர் காய்கறிகள் என்று திட்டமிட்டு சமையுங்கள். வாரம் ஒரு முறை பொரித்த உணவு, ஸ்வீட்ஸ் என்றுகூட சாப்பிடலாம்.முக்கியமாக டயட் இருந்தாலும் நம் உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் தொடர்ந்து கிடைக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். புரோட்டீன், கார்போஹைடிரேட், நல்ல கொழுப்பு, கால்ஷியம், இரும்புச் சத்து முதலியவை நம் உடலுக்கு கண்டிப்பாக தேவை. இதன் அளவு குறைந்தால் முடி கொட்டுதல்,ரத்த சோகை, எலும்பு தேய்மானம் முதலியவை ஏற்படும். பருப்பு, கீரை, அவித்த முட்டை, சாதம்,பால் முதலியவை சேர்த்துக் கொள்ளுங்கள். சமைக்கும் முறையில் அதிகம் கொழுப்பு சேர்ந்து விடாமல் செய்து சாப்பிடுங்கள்.
சூடான நீர்
குளிர்ந்த தண்ணீர் குடிப்பதை விட சூடான தண்ணீர் குடிப்பது உடல் எடை குறைக்க உதவும். உங்களது லைப்ஸ்டைலுக்கு ஏற்றார்போல் உடல் பயிற்சியை அமைத்துக் கொள்ளுங்கள். உடல் எடையை குறைப்பதில் வாக்கிங் மிகச்சிறந்த பயிற்சி. எக்காரணம் கொண்டும் சாப்பிட்ட பிறகு உடல் பயிற்சி செய்யாதீர்கள். சாப்பிடும் முன்பு செய்வதுதான் சரி.
வீட்டு உணவுகள் சாப்பிடலாம்
3 வேளையாக சாப்பிடாமல் 3 மணி நேர இடைவெளியில் 6 தடவையாக சாப்பிடுங்கள். அதனால் எப்போதும் சாப்பிடும் ஒரு வேளை உணவை(அதே அளவை) இரண்டாக பிரித்து 2 வேளையாக சாப்பிடுங்கள். இதுதான் இன்று மிகவும் அதிகமான பேர் பின்பற்றும் டயட்டிங் முறை. இப்படி பிரித்து சாப்பிடுவதால் உடம்பில் கொழுப்பு தங்க வாய்ப்பு இல்லாமல் எளிதில் உணவு ஜீரணமாகிவிடும். எப்போதும் சாப்பிடும் தட்டைவிட சிறிய தட்டில் சாப்பிடுங்கள். அப்போதுதான் நாம் நிறைய சாப்பிடுகிறோம் என்ற எண்ணம் வரும்.மெதுவாக, நன்றாக மென்று சாப்பிடுங்கள். இதனால் உணவு எடுத்துக் கொள்ளும் அளவும் குறையும்.
அதிக எண்ணெய்,மட்டன் ஸ்நாக்ஸ் போன்ற கலோரி அதிகமுள்ள பொருட்களை தவிர்த்து விடுங்கள். மாதம் ஒரு முறையோ,வாரம் ஒரு முறையோ கொழுப்பில்லாத கறியாக சாப்பிடலாம். டீ குடிப்பது உடலில் கொழுப்பை சேர விடாது. அதுவும் க்ரீன் டீ மிகவும் நல்லது. பாலை சேர்க்காமல் அல்லது ஸ்கிம் மில்க்கை சேர்த்து குடிக்கலாம். முடிந்தவரை வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள்.வெளியில் சாப்பிடுவதுகூட எடை ஏற ஒரு காரணம். முக்கியமாக பிட்ஸா,சிக்கன் ஃபிரை போன்ற அயிட்டங்கள் நிச்சயம் எடையை கூட்டிவிடும்.
பி பாசிட்டிவ்
உடற்பயிற்சி, டயட் இல்லாமல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதல்ல. டயட் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தாமல் ஹெல்தியாக சாப்பிடுகிறோம் என்று நினையுங்கள். நிச்சயம் சரியான டயட்டும்,உடற்பயிற்சியும் எடையை குறைக்கும். தவிர உடல் எடையை குறைப்பதில் நேர்மறை எண்ணங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடல் மெலிவிற்காக உடற்பயிற்சி,டயட்டிங் இருக்க ஆரம்பிக்கும் போது இனி உடல் எடை குறையும், கொஞ்சம் குறைந்து விட்டது என்று அடிக்கடி மனதில் நினைக்க வேண்டும். இதுதான் உங்களை மேலும் முயற்சி செய்ய வைக்கும். என்ன செய்தும் உடல் எடை குறைய வில்லையே என்று பாதியில் விட்டு விடாதீர்கள்.அப்புறம் மேலும் எடை கூட வாய்ப்பு அதிகம்.
நன்றி: கண்ணோட்டம்

சனி, 19 மே, 2012

கருவுற்ற பெண்ணுக்கு ஆலோசனைகள்


இப்போது மருத்துவம் வெகுவாக முன்னேறி விட்டது. பல பெரிய நோய்களை குழந்தை கருவிலிருக்கும் போதே கண்டுபிடித்து விட முடியும். இதன் மூலம் குணப்படுத்த முடியாத நோய்களோடு குழந்தை பிறப்பதையும் தவிர்த்து விடலாம். கருவுற்ற பெண்கள் என்னென்ன சோதனைகள் செய்து கொள்ள வேண்டும்?

11 லிருந்து 14 வாரங்களுக்குள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் செய்ய வேண்டும். இதன் மூலம் கருவின் வயதை உறுதிப்படுத்த முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தாலும் தெரிந்து விடும்.
20, 22 வாரங்களில் மீண்டும் ஒருமுறை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவிக்குறைபாடுகள் பெரும்பாலானவற்றை இதில் தெரிந்து கொள்ளலாம்.
மெட்டர்னல் சீரம் ஸ்கீரினிங்
கருவில் இருக்கும் குழந்தைக்கு டவுண்சிண்ட்ரோம், ட்ரிகோமி 18 என்ற ஜெனிட்டிக் பிரச்சனைகள் ஏற்படுவதை இந்த சோதனையில் மூலம் கண்டறியலாம். முதுகெலும்பில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் இதன்மூலம் கண்டறியலாம்.
கருத்தரித்த 11 முதல் 14 வாரங்களுக்குள் முதல் ட்ரைமெஸ்டர் ஸ்கீரினிங் சோதனையும், 1521 வாரங்களுக்குள் ட்ரிபுள் ஸ்கீரினிங் டெஸ்ட் சோதனையும் செய்ய வேண்டும்.
பெற்றோருக்கு மரபுக் குறைபாடுகள் இருந்தால் கருவுற்ற பெண்ணுக்கு கேரியர் ஸ்கீரினிங் சோதனை செய்ய வேண்டும். இச் சோதனைகளால் டவுன் சிண்ட்ரோம், ட்ரைசோமி 18, மஸ்குலர் டிஸ்ரோபி, ஹீமோபிலியா போன்ற நோய்கள் இருந்தால் கண்டறியலாம்.
பிரசவ கால ஆலோசனைகள்
சிருஷ்டிப் புதிருக்கு ஒரு தத்துவமாக விளங்குகிறாள் பெண். அவளது பெண்மையோ படைப்புத் தத்துவத்துக்கு ஒரு விளையாட்டாக அமைகிறது. ஆனால் பெண் தாய்மைப்பேற்றை அடையும் பொழுதுதான், அவள் சிருஷ்டிக்கே ஒரு ஜீவன் ஆகின்றாள்; அதன் மூலம் படைப்பின் ரகசியம் அம்பலமாகின்றது; சிருஷ்டியின் புதிருக்கு ஒரு விளக்கம் கிடைத்து விடுகின்றது! ஆம்; குழந்தைகள் படைப்புச் சக்தியின் முதல் ஆத்மா. அந்த ஆத்மானை அருளுகிற & அருளவல்ல அந்தத் தாய்தான் படைப்பிற்கு ஒரு விதி & ஒரு தவம்!
உண்மைதான்; தாய் தவம் இருந்து, நோன்பு இயற்றி, கனவு கண்டு, அன்பு வளர்த்துப் பெற்ற மழலை உலகின் ஜனத் தொகையில் ஓர் அங்கம் வகிக்கத் தொடங்குகிறது; நாட்டு நடப்பில் அதற்கும் ஒரு பங்கு கிட்டக்காத்திருக்கின்றது! வாழ்வியல் கதைக்கு அதுவே விதியாகவும் இயங்கத் தொடங்கி விடுகின்றது!
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தே!என்று சொல்லப்படுவது உண்டல்லவா! & இம்மொழி நமது தமிழ்ப் பண்பாட்டுக்கு ஒரு விளக்கமாகும். கொண்டாடப்படும்போது தான் குழந்தையும் தெய்வமும் ஏற்றம் பெறுகின்றன! கொண்டாடக் கொண்டாட, கடவுளுக்குச் சக்தி கூடுதல்; அம்மாதிரியேதான். குழந்தையின் நிலையும் அமைகிறது.
இத்தகையதொரு பொது நியதியின் கட்டுக்கோப்பில் தான் புதிய உலகின் பரிணாமத் தோற்றம் உருவாகிறது. இந்தப் புதிய புவனத்தில், குழந்தை தெய்வமாகிறது; தெய்வம் குழந்தையாகிறது. குழந்தையும் தெய்வமும் ஒன்றி இணைந்ததொரு கூட்டுப்பான்மைக்கு உத்தாரமாக அமையவல்ல & அமைந்து விடுகிற & அந்தத் தாயைப் போற்றுகிறோம்; அத்தெய்வத்தின் பொறுமைக்கு & தர்மத்துக்கு & சகிப்புத்தன்மைக்கு & அன்புக்கு & அருளுக்கு அத்தெய்வம்தான் உதாரணமாக முடியும்; அத்தவ நெறிப்பான்மைக்கும் அச்சக்திதான் சாட்சியாக ஆகவும் கூடும்.
வாழ்வியல் போக்கின் பிரத்யட்ச உணர்வாகவும் நடைமுறை மெய்யாகவும் இச்சட்டம் ஆட்சி செலுத்துகிறது. இச்சட்டத்தின் ஆளுகைக்கு உருக்கொடுக்கும் உரிமை, ஆண் & பெண் எனும் மகத்தான மெய்ப்பாட்டுணர்வுகளுக்கே சொந்தமாகின்றது. அந்தப் பொது நியதியின் இரு வேறு கூறுகளாக & இயங்கும் அல்லது இயக்கப்படும் பிண்டங்களாக விளையாடும் அல்லது விளையாட்டுக் காட்டும் ஆண் & பெண் என்கிற தூண்டுதலின் கூட்டுறவு தான் வாழ்வு; அதுவேதான் அவனி.
மெய்தான் : ஆதி மனித குலத்தின் நாகரிகத்துக்கும் இந்நியதிக் கோட்பாடுதான் வரம்புக் கோடாக விளங்கியது. இன்றைய விண்வெளிக் கேளிக்கையின் யுகசந்திக்கும் அதே குறிக் கோள்தான் மையப்புள்ளியாக விளங்குகிறது.
பட்டினத்தடிகள் அழகு கனிந்த ஒரு பாடலைப் பாடியிருக்கின்றனர்:
ஆண்&பெண் இனக்கவர்ச்சிக்கு வாய்ந்த ஒரு மகா சக்தி போலவே இந்தப் பாடல் மிளிர்கின்றது.
காதல் செய்வது, தூய்மையுடன் காதலனும், காதலியும் இருப்பது ஆகிய இவ்விரு கடமைகளும் என்றென்றும் எல்லாவித இனங்களிடையேயும் நிலவி வருகிற&காலம் கடந்த நிலையில் நிலவி வருகிற ஓர் அறவழிப் பண்பாடாகும்!
இவ்விதச் சிந்தனையையும் இதோ ஒலிக்க விருக்கிற அடிகளாரின் குரலையும், விஞ்ஞான ரீதியில் ஒன்றாக்கியோ அன்றி பாகுபடுத்தியோ பார்க்கும்போது, வாழ்வியலின் ஆண், பெண் தத்துவ ரகசிய நுட்பங்களும், அந்நுட்பங்களின் புதிர்களும் அப்புதிர்களின் புதுமைகளும் நன்கு புலனாக முடியும்.
இயற்கையின் இயல்பான, தவிர்க்க முடியாத விபத்தாக அமையும் ஆண்-, பெண் இனக் கவர்ச்சியின் உறவுக்கு திருமணம்என்கிற சடங்கும் முதல் இரவுஎன்கிற விழாவும் இன்றியமையாத பாதுகாப்பாக இனிமை கொண்ட எச்சரிக்கையாக அமைகின்றன. இத்தகைய விசித்திரக் கலவையின் அல்லது கலவியின் ஓர் அற்புதமாகத் திகழ்கிறாள் தாய்என்னும் மகாசக்தி. அந்த மகாசக்தி பெற்றெடுக்கும் மகத்தான அற்புதமாகவே குழந்தைஎனும் புதுமைபொலிகிறது!
குழந்தை என்று சொல்லக்கூடிய புத்தொளி மாத்திரம் உலகத்திலே இல்லாமல் இருந்திருந்தால், அப்புறம் உலகம் என்ற ஒன்று அர்த்தமிழந்ததாக எப்போதோ ஆகிவிட்டிருக்கும்.என்று மொழிந்த ஆசிய ஜோதியான நேருஜியின் சொற்களை நாம் எப்போதுமே மறந்து விட முடியாது. இன்றையக் குழந்தைகளே நாளையத் தலைவர்கள்!என்று இளைய பாரதத்தினோர்க்கு வாழ்த்துக்கூறும் பெற்றிருக்கும் உடைத்தானது குழந்தை உலகம்.
இந்த இருபதாம் நூற்றாண்டை குழந்தைகளின் நூற்றாண்டுஎனவும் குறித்தார் பேரறிவாளர் எல்லென் கே அவர்கள்.
குழந்தைஎன்கிற ஒரு தவத்தை ஓர் அன்பை ஒரு மந்திரத்தை ஓர் அற்புதத்தை, ‘பிள்ளைக்கனியமுதுஎனவும் பேசும் பொற் சித்திரம்என்றும் ஆடிவரும் தேன்எனவும் போற்றிப் புகழ்ந்திடும் தண்ணளியும், மோன புளகிதமும் பாரதி ஒருவனுக்கே சொந்தம்.
இந்த மகோன்னத நிலைக்கு ஆதாரமாக விளங்கும் தாய்தன்னுடைய பேறுகாலக் கண்டங்களைத் தாண்டி குழந்தையைப் பெற்றெடுத்த, ‘புனர்ஜன்மம்பெறுவதற்குள், அவள் முன்னே தலைவிரித்தாடும் பிரச்னைகள் ஒன்றா, இரண்டா? அவள் கருத்தரித்தது முதல் பிரசவிக்கும் வரையிலும் அவள் கண்காணித்துப் பேண வேண்டிய குறிப்புரைகள் ஒன்றல்ல&இரண்டல்லவே!
விதியின் முன் பணயம் வைத்து, பெண் என்பவள் தாயாக உயர்ந்து ஒரு சமூக அந்தஸ்தைப் பெறும் ஓர் அதிர்ஷ்டவசமான நல்வாய்ப்புக்கு முதற்காரணமாகிறது குழந்தை. இக்குழந்தையின் மூலமாக ஆணும், பெண்ணும், தந்தையும் தாயும் ஆகி, ஒரு சமுதாய மதிப்புப் பெறும் பாக்கியத்தையும் அடைகின்றனர்.
கருத்தரிப்புஎன்பது எவ்வாறு தெய்வச் செயலாகக் கொள்ளப்படுகிறதோ, அதே அளவுக்கு பிரசவம்என்பதும் தெய்வச் செயலாகவே கொள்ளப்பட்டு வருகிறது.
இத்தகைய மனநிலையில் நின்று நோக்கும்போது இவ்வாறு பிரசவத்தை நிர்யணிக்கலாம்.
பிரசவம் என்பது வாழ்க்கையின் ஒரு தேவை. ஒரு நிகழ்ச்சி. ஒரு விடிபொழுது!
நன்றி: உங்களுக்காக

வெள்ளி, 18 மே, 2012

எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி?


 தேர்வு பயத்தினால் ஹார்மோன்களின் திண்டாட்டம் டென்ஷனை உண்டாக்கும். அந்த டென்ஷன் பல வழிகளில் வெளிப்படும். மறதி, சோர்வு, மன அழுத்தம், படபடப்பு என பல வடிவங்களில் பாடாய் படுத்தும். தேர்வுக்காக விடிய விடிய தூக்கம் கெட்டுப் படித்தல் மற்றும் போதுமான சத்துணவு எடுத்துக் கொள்ளாமல் விடுவது போன்ற காரணங்களால் படித்ததையெல்லாம் மறக்கும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர்.

இதுபோன்ற எக்ஸாம் டென்ஷனில் இருந்து விடுபடுவதற்கான வழிகள் குறித்து விளக்குகிறார் உளவியல் நிபுணர் தேவிப்பிரியா. தேர்வு பயம் குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை உண்டாக்குகிறது. அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் நம்மால் முடியுமா என்ற சந்தேகத்தால் எதிர்மறை எண்ணங்கள், தன்னம்பிக்கை இழத்தல் போன்ற மனச்சிக்கலுக்கு குழந்தைகள் ஆளாகின்றனர்.
பெற்றோரின் அதீத எதிர்பார்ப்புகள் குழந்தைகள் மீது திணிக்கப்பட்டு மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். இதுபோன்ற தொந்தரவுகளால் குழந்தைகள் எதையும் முழுமையான ஈடுபாட்டுடன் படிக்க முடியாமல் போகிறது. கஷ்டப்பட்டு படித்திருந்தாலும் எழுத முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பெற்றோர் குழந்தைகளிடம் தன்னம்பிக்கை ஏற்படும் வகையில் பேச வேண்டும். நம்பிக்கையான சூழலை உருவாக்க வேண்டும்.
ஆசிரியர் மற்றும் மனநல ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவதுடன் எதிர்கால லட்சியம் பற்றியும் கோடிட்டுக் காட்டிவிட்டால் குழந்தைகள் இது போன்ற குழப்பங்கள் எதுவும் இன்றி தேர்வுக்கு தயாராக முடியும்.ர்வு பயத்தை கண்டுகொள்ளாமல் விட்டால் குழந்தைகள் மனச்சோர்வு மற்றும் எரிச்சலை வெளிப்படுத்துவார்கள்.
சாப்பிடுவது உள்ளிட்ட அன்றாட நடவடிக்கைகளில் அக்கறையின்றி இருப்பது, தூக்கமின்மை, முதுகுவலி, தலை வலி உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தசை இறுக்கம், கவனக்குறைவு, படபடப்பு, வயிற்று போக்கு, படிப்பில் ஈடுபாடு குறைதல் போன்ற தொல்லைகளும் உண்டாகும்.
இதனால் சத்துள்ள ஆகாரம் இல்லாமல் உடல் பலவீனம் அடையும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். குழந்தைகள் குறித்த நேரத்துக்கு தூங்கி, சத்தான உணவுகள் எடுத்துக் கொள்ள பெற்றோர் உதவ வேண்டும். தேர்வு பயம் குழந்தைகளுக்கு அதிகரிக்கும் பட்சத்தில் உளவியல் நிபுணரிடம் ஆலோசனை பெறுவதன் மூலம் தீர்வு காணலாம்.
மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சி, தியானம் மற்றும் சரியான உணவு முறையை கடைபிடிப்பதன் மூலம் படிப்பின் மீது கவனத்தைத் திருப்பலாம். தேர்வு நேரத்தில் உண்டாகும் உடல் பிரச்னைகளுக்கு உடனடியாக சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். நேரம் கிடைக்கும் போது மனதுக்குப் பிடித்த விளையாட்டுகளில் ஈடுபடலாம். தொடர்ந்து பல மணி நேரம் படிப்பதற்கு பதிலாக இடையில் ரிலாக்ஸ் செய்யலாம்.
பாதுகாப்பு முறை: கடினமான பாடங்களை முதலில் படித்தல், மனதில் பதியும்படி குறிப்பெடுத்தல், கேள்விகளை வரைபடம் வரைந்து நினைவில் வைத்துக் கொள்ளுதல் போன்ற யுக்திகள் உதவும். படித்தவற்றை நண்பர்களிடம் சொல்லிப் பார்த்து தவறைத் திருத்தலாம். நேரத்தை திட்டமிட்டுப் பயன்படுத்தினால் டென்ஷனை பெரிதளவில் குறைக்க முடியும். முக்கிய கேள்விகளை முதலில் படித்து முடிக்கலாம்.
படம் மற்றும் பாடங்களை கற்பனை மூலம் மனதில் நிறுத்துதல் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம். படித்த விஷயங்களை குழுவாக விவாதிக்கும் போது அந்த கருத்துகள் மறக்காத வண்ணம் மனதில் பதிந்து விடும். சோர்வை நீக்கி மனதை உற்சாகமாக வைத்திருக்க சிறிய உடற்பயிற்சிகள் செய்யலாம். படிக்க நேரம் ஒதுக்குதல், எளிய யுக்திகள் மூலம் படித்தவற்றை மனதில் வைத்துக் கொள்வது மற்றும் முழுமையாக வெளிப்படுத்துவது போன்ற பயிற்சிகளை தொடர்ந்து செய்வதால் தேர்வை எந்த பயமும் இன்றி எதிர்கொள்ள முடியும். சத்தான உணவும், தன்னம்பிக்கையும் சாதனைக்கான சாவிகள்.
ரெசிபி
பிரட் புதினா சாலட்: புதினா ஒரு கப், பச்சை மிளகாய் 2, வெங்காயம் கால் கப், கொப்பரைத் தேங்காய் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன் மற்றும் தேவையான உப்பு சேர்த்து சட்னி அரைத்துக் கொள்ளவும். பிரட் துண்டின் மீது புதினா சட்னி தடவி அதன் மீது வெண்ணெய் தடவிய பிரட் துண்டு வைத்து அடுத்த லேயருக்கு டொமேட்டோ கெச்சப் தடவவும். அதன் மீது வெண்ணெய் தடவிய பிரட் துண்டு வைத்து சாப்பிடலாம். இதில் உடலுக்குத் தேவையான புரதம் மற்றும் இரும்புச் சத்து கிடைக்கிறது.
முளைப்பயறு துவையல்: ஏதாவது ஒரு முளை கட்டிய பயறு அரை கப், புதினா ஒரு கட்டு, மிளகு ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு எடுக்கவும். முளை கட்டிய பயிறை எண்ணெய்யில் வறுத்து புதினா, மிளகு, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதில் கடைசியாக ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.
சோயாவடை: ஒரு கப் மைதாவை வெண்ணெயில் வறுத்துக் கொள்ளவும். 200 கிராம் பனீரை பொடியாக நறுக்கி வைக்கவும். உதிர்த்த ஒரு கப் பேபி கார்ன், நறுக்கிய 4 பச்சை மிளகாய், 2 டீஸ்பூன் கொத்தமல்லித் தழை, துருவிய சீஸ் 4 டீஸ்பூன், மசித்த உருளைக்கிழங்கு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து உருண்டையாக உருட்டிக் கொள்ளவும். மைதாவை தனியாக கரைத்துக் வைத்துக் கொள்ளவும். உருண்டையை மைதாவில் நனைத்து பிரட் தூளில் ஒற்றி எடுத்து, எண்ணெய்யில் பொரிக்கவும். இதில் புரோட்டீன் மற்றும் தாது சத்துக்கள் உள்ளது.
டயட்
தேர்வு பயத்தால் ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றத்தால் நடத்தை மாற்றம் மற்றும் மனச்சிக்கல் உண்டாகிறது. எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பதால் சத்தான உணவையும் மாணவர்கள் தவிர்க்கின்றனர். சத்துக் குறைபாட்டின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியால் உடல்நலக் குறைபாடுகள் உண்டாகிறது.
எண்ணெய்யில் பொரித்த கொழுப்பு உணவுகளை தவிர்க்கவும். காலை உணவை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். புரோட்டின் மற்றும் தாது சத்து அதிகம் உள்ள உணவுகளால் புத்திக் கூர்மை அதிகரிக்கும். காபியில் உள்ள காபின் என்ற பொருள் சிந்திக்கும் திறனைக் குறைக்கும்.
எனவே காபியை தவிர்க்கலாம். சுண்டல் வகைகள் மற்றும் முளைக்கட்டிய பயறு வகைகள் சாப்பிடலாம். தண்டுக் கீரையை சாப்பிடுவதன் மூலம் போலிக் ஆசிட் கிடைக்கிறது. இதனால் சோர்வு நீங்கி உற்சாகத்துடன் படிக்க முடியும். ஆட்டு இறைச்சி சாப்பிடலாம்.
இதில் இரும்பு, ஜிங்க் மற்றும் பி வைட்டமின் கிடைக்கும். மன அழுத்தம் குறையும். சுண்டக்காய்ச்சிய பாலில் புரதம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. எனவே தினமும் ஒரு கிளாஸ் பால் அருந்தலாம். வைட்டமின் பி-2 மற்றும் பி-12 சத்து கிடைக்கிறது. பாலாடைக்கட்டி மற்றும் பாதாம் ஆகியவற்றில் இருந்து பி-2 வைட்டமின், வைட்டமின் ஈ, மெக்னீசியம், ஜிங்க் ஆகிய சத்துகள் கிடைக்கிறது. செர்ரிபழம் சாப்பிடும் போது மனதுக்கு உற்சாகம் கிடைக்கிறது. எனவே மனச்சோர்வை நீக்கும் சத்தான உணவுகள் மூலம் தேர்வு பயத்தை விரட்ட முடியும்
நன்றி: கண்ணோட்டம்

வியாழன், 17 மே, 2012

எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்?


உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது.

உடலில் இயங்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய மூளை சரியாக இயங்க வேண்டுமானால், பிற தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும். இந்த ஆறு தாதுக்களை வளர்ப்பவை ஆறு சுவைகளாகும்.
துவர்ப்பு ரத்தம் பெருகச் செய்கிறது. இனிப்பு தசை வளர்க்கிறது. புளிப்பு கொழுப்பை உற்பத்தி செய்கிறது. கார்ப்பு எலும்பை வளர்த்து உறுதியாக்குகிறது. கசப்பு நரம்பை பலப்படுத்துகிறது. உவர்ப்பு உமிழ் நீரைச் சுரக்கச் செய்கிறது. உடல் தாதுக்கள் பெருக்கவும் அவற்றை உடலுக்கு ஏற்றவாறு சமன் செய்வதும் ஆறு சுவைகள் கொண்ட உணவுகளாகும்.
துவர்ப்பு:
உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. விருப்பு வெறுப்பில்லாதது. வியர்வை, ரத்தப்போக்கு, வயிற்றுப் போக்கை சரி செய்யும். வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அத்திக்காய் போன்றவை துவர்ப்பு சுவையுடையவை.
இனிப்பு:
மனத்துக்கும் உடலுக்கும் உற்சாகத்தைத் தரக்கூடியது. இது அதிகமானால் எடை கூடும். உடல் தளரும். சோர்வும் தூக்கமும் உண்டாகும். பழங்கள், உருளை, காரட், அரிசி, கோதுமை, கரும்பு போன்ற பொருள்களில் இனிப்புச் சுவை இருக்கிறது.
புளிப்பு:
உணவின் சுவையை அதிகரிக்கும் சுவையிது. பசியைத் தூண்டும். நரம்புகளை வலுவடையச் செய்யும். இது அளவுக்கு அதிகமானால், பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும். உடல் தளரும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவை புளிப்புச் சுவை கொண்டவை.
காரம்:
பசியைத் தூண்டும். செரிமானத்தைத் தூண்டும். உடல் இளைக்கும். உடலில் சேர்ந்துள்ள நீர்ப்பொருளை வெளியேற்றும். ரத்தத்தைத் தூய்மையாக்கும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவை காரச்சுவை கொண்டவை.
கசப்பு:
பெரும்பாலும் வெறுக்கக் கூடிய சுவை. ஆனாலும் உடலுக்கு மிகுந்த நன்மையைத் தரக்கூடிய சுவை இதுவே. இது, நோய் எதிர்ப்புச் சக்தியாகச் செயல்படும். தாகம், உடல் எரிச்சல், அரிப்பு, காய்ச்சல் ஆகிய இவற்றைத் தணிக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பாகற்காய், சுண்டை, கத்தரி, வெங்காயம், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம் பூ, ஓமம் போன்றவற்றிலிருந்து கசப்புச் சுவையைப் பெறலாம்.
உவர்ப்பு:
அனைவரும் விரும்புகின்ற சுவை. தவிர்க்க இயலாதது. உமிழ் நீரைச் சுரக்கச் செய்யும். மற்ற சுவைகளைச் சமன் செய்யும். உண்ட உணவைச் செரிக்க வைக்கும். கீரைத்தண்டு, வாழைத் தண்டு, முள்ளங்கி, பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் உவர்ப்புச் சுவை மிகுதியாக உள்ளது.
உணவு வகைகளை சுவைக்கு ஒன்றாகச் சமைத்து உண்பதாக வைத்துக்கொள்வோம். இலையில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும். எந்தச் சுவையை இறுதியில் உண்ண வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.
சிலர், இலையில் உணவு பரிமாறப்படும் போதே ஒவ்வொன்றாக உண்டு கொண்டேயிருப்பார்கள். அது தவறு. உணவு முழுமையாகப் பரிமாறப்பட்ட பின்பும், முதலில் உண்ண வேண்டியது, இனிப்பு. அடுத்து அடுத்ததாகப் புளிப்பு, உப்பு, காரம், கசப்பு ஆகிய சுவைகளை உண்ட பின்பு இறுதியாகத் துவர்ப்புச் சுவையை உண்ண வேண்டும்.
இவ்வாறாக உணவை உண்பதனால், உடம்பில் ஆட்கொண்டிருக்கும் பஞ்ச பூதங்கள் சமநிலை பெறும். இவ்வாறு உண்ட பின்பு முடிவாக தயிரும் உப்பும் கலந்து உண்டால், உணவில் கலந்துள்ள வாத பித்த ரசயங்கள் என்னும் முக்குற்றங்கள் நீங்கிவிடும். உடம்பில் நோய் தோன்றுவதற்கான கூறுகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும்.
ஆறு சுவை உணவை மட்டும் உண்டுவிட்டால் போதாது. அதற்கு உரிய காலத்தில் உணவு உண்ண வேண்டும். ஞாயிறு எழும்போதும், மறையும் போதும் எந்த உணவையும் உண்ணக் கூடாது. கோபமோ கவலையோ துக்கமோ ஏற்படும் போதில் உணவு உண்பதைத் தவிர்த்திட வேண்டும். அதே போல், நின்று கொண்டும் கைகளை ஊன்றிக் கொண்டும் உணவு உண்ணக் கூடாது.
எப்போதும் உணவு உண்ணும்போது, கிழக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது ஆயுளை வளர்க்கும். தெற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது புகழை வளர்க்கும். மேற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது செல்வத்தை வளர்க்கும். வடக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது அழிவுக்கு வழி வகுக்கும்.
எவ்வகை உணவாயினும் அதை உண்பதற்கு வாழை இலையைப் பயன்படுத்தினால், உணவினால் உண்டாகக் கூடிய தீமைகள் முற்றிலும் நீங்கிவிடும். உணவு உண்டு முடிந்த பின்பு குறைந்த அளவு நூறு அடி தூரமாவது நடந்து வர வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. படுக்கையில் அமர்ந்து கொண்டு உணவுண்ட பின்பு அப்படியே படுத்துக்கொள்கின்றவர்களுக்காகப் பரிதாப்படலாமே ஒழிய வேறு ஒன்றும் செய்ய இயலாது.
உணவின் சுவைக்கும் உடல் நலத்துக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொண்டால், உடல் நோய்களைத் தீர்க்கலாம். உடலில் நோய்கள் வராமல் தடுக்கலாம். உடல் உறுப்புகள் நன்கு வளரச் செய்யலாம். உடல் உறுப்புகள் பழுதில்லாமல் செழிப்பாகச் செம்மையாக அமைந்துவிட்டால் உடல் இன்பமாக இருக்கும். அதன்பின் வாழ்க்கை இன்பமாக இருக்கும். உடலில் ஏற்படும் குறைபாடுகளுக்கு ஏற்ப மனம் இருக்கும்.
நோயுடைய உடலைக் கொண்ட மனம், மகிழ்ச்சியை இன்பத்தை எண்ணாமல் துன்பப்படும். நாக்கின் விருப்பத்துக்கு ஏற்ப உணவை உண்ணும் நாகரிகம் வளர்ந்து வருகிறது. எதை எப்போது சாப்பிடுவது என்றில்லாமல் எப்போதும் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்னும் பழக்கத்தினால், நோய்களுக்கு இடமளிப்பவர்கள் இருக்கின்றார்கள். உயிர் வாழ்வதற்கு உணவு வேண்டும் என்பதற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் உண்டு கொண்டிருந்தால் தம்மைத்தாமே வருத்தத்தில் ஆழ்த்திக் கொள்வதாகும்.
உண்பது நாழிஎன்று, உணவின் அளவு குறிக்கப்படுகிறது. அதுவும் ஒரு நாளைக்கு எத்தனை முறை என்பதும் கூறப்பட்டுள்ளது. வாழ்க்கையை வாழும் முறையை அறிந்தவர்கள் சொல்லும் சொல்லை இகழ்ந்தால் வாழ்க்கையை இகழ்ந்தது போலாகும். ஆறு சுவையுடைய உணவுகளை உண்டு வந்தால், இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
சில சமயத்தில் ஆறு சுவை உணவை உண்ண இயலாமல் போகலாம். இயலும் சமயத்தில் உண்டு வந்தால் அவை சமநிலைக்கு வந்து உடல் நிலையைப் பாதுகாக்கும்.
நன்றி: கஜேந்திரன்

ரூபாய் நோட்டுகளில்சாய்வான கோடுகள் எதற்காக என்று தெரியுமா?

பழைய மற்றும் புதிய நோட்டுகளில் Window Threat அப்படி என்கிற ஒரு லைட் அடிக்கிற மாதிரியான ஒரு கோட...

Popular Posts