லேபிள்கள்

வியாழன், 19 செப்டம்பர், 2024

ஹேண்ட் பேக்கால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்... பெண்களே கவனம்!

தற்போதுள்ள வாழ்க்கை முறையில் பெண்கள் எங்கு சென்றாலும் கைப்பையை தங்களுடன் எடுத்து செல்கின்றனர். பல்வேறு வகைகளில் தயார் செய்யப்படும் கைப்பைகள், கண்களை கவரும் வகையில் அழகுடன் இருந்தாலும் சில பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

அதன் விளைவுகள் குறித்து இன்று காணலாம்.

முதுகுத்தண்டு பிரச்சனை:

பெரிய அளவிலான கைப்பைகளை பெண்கள் பயன்படுத்துவதால், பல பொருட்களை தேவையில்லாமல் முதுகில் சுமந்து செல்கின்றனர். இதனால் தோள்பட்டைக்கான இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. தோள்பட்டை, கைப்பை மாட்டும் இடம் அதிக அழுத்தத்தை சந்திக்கிறது. இதனால் நரம்பு பாதிப்பும் எதிர்காலத்தில் ஏற்படலாம். இது தோள், கழுத்து, முதுகுத்தண்டு மற்றும் இடுப்பு போன்ற பிரச்சனையையும் ஏற்படுத்தலாம்.

உருவமாற்றம்:

தோள்களுக்கு அழுத்தம் தரும் வகையிலான ஹேண்ட் பேக் உபயோகம் செய்யும் போது, தோளின் ஒருபக்கம் தாழ்வாகவும், மற்றொரு புறம் உயர்த்தப்பட்டு இருக்கும். இதனால் நாளடைவில் இரண்டு தோள்களும் சமமில்லாமல் செல்லும். இதே ஹேண்ட் பேக்கில் அதிகளவு எடை சுமந்து செல்லும் பட்சத்தில், எதிர்காலத்தில் முதுகுத்தண்டுவடம் வளைந்து கூன் பிரச்சனையும் ஏற்படலாம்.

தவிர்க்க வழிமுறைகள் என்னென்ன?..

சுமையை எளிதாக்குவது:

பெண்கள் உபயோகம் செய்யும் கைப்பையில் எந்த பொருட்களை கொண்டு செல்ல வேண்டும் என்பதை தீர்மானித்து, அதற்கேற்ப அவசியம் உள்ள பொருட்களை மட்டும் வைத்திருக்க வேண்டும். இதனால் நாம் செல்லும் இடங்களில் தேவையான பொருட்கள் வாங்கலாம். தேவையற்ற சுமை குறைந்து, புதிய பொருட்கள் வாங்கினாலும் அதனை வீடு செல்லும் வரை சுமந்தால் போதும்.

வலமிடம் மாற்றுவது:

ஹேண்ட் பேக்கில் அதிக எடை இருப்பது போல உணர்வு ஏற்பட்டால், அதனை நீண்ட நேரம் ஒரே தோளில் சுமந்து செல்வதை தவிர்க்கலாம். அரைமணிநேரத்திற்கு ஒருமுறை வலது மற்றும் இடது என மாற்றி உபயோகம் செய்யலாம். இதனால் தோள்களில் வலி ஏற்படுவது குறையும். இயலாத பட்சத்தில் கைகளில் பிடித்து பயணம் செய்யலாம்.



--

கருத்துகள் இல்லை:

உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.

உயர் இரத்த அழுத்த நோயாளிகள் உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியமாகும். இது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். ஆனால் இ...

Popular Posts