லேபிள்கள்

திங்கள், 6 நவம்பர், 2023

உதவி செய்பவன் பாதுகாவலன் அல்லாஹ் ஒருவனே

நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?” (அல்குர்ஆன் 2:107)

நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!” (அல்குர்ஆன் 7:194)

அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ, அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள்.” (அல்குர்ஆன் 16:20)

மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே.” (அல்குர்ஆன் 22:73)

அல்லாஹ் உங்களுக்குக் கெடுதியை நாடினால், அவனிடமிருந்து உங்களைப் பாதுகாப்பவர் யார்? அல்லது அவன் உங்களுக்கு ரஹ்மத்தை நாடினால் (அதை உங்களுக்குத் தடை செய்பவர் யார்?) அல்லாஹ்வையன்றி (வேறு யாரையும்) பாதுகாவலனாகவும், உதவியாளனாகவும் அவர்கள் காணமாட்டார்கள்என்று (நபியே!) நீர் கூறுவீராக.” (அல்குர்ஆன் 33:17)

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்;. இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்;. யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.” (அல்குர்ஆன் 4:48)

அறிவுடைய மக்களுக்கு அல்லாஹ்வின் வார்த்தைகளே போதுமானது.

https://www.nidur.info/2022/01/10/%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%a9-2/

கருத்துகள் இல்லை:

இரவு நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்

பலரும் இரவு நேரத்தில் அதிகளவு மூக்குபிடிக்க உணவுகளை சாப்பிடுவார்கள். உண்மையில் இரவு வேளை என்ப...

Popular Posts