லேபிள்கள்

வெள்ளி, 3 நவம்பர், 2023

*ஆலீவ் எண்ணெய் பற்றி பரவும் கட்டுக் கதைகளும் உண்மைகளும்.*

 


ஆலிவ் எண்ணெய் பல உணவகங்களில் பல நாடுகளில் பயன் படுத்தப்பட்டு வரும் ஒரு மூல பொருளாகும். இந்த எண்ணெய் இதயத்திற்கு மிகவும் சிறந்தது.

மேலும் ஆலிவ் ஆயிலில் உள்ள ஃபேட்டி ஆசிட்டுகள், சிறுநீரகத்தை ஆரோக்கியமாக செயல்பட வைக்கின்றன. எனவே சமையலில் ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்துவது நல்லது.

மேலும் இதன் ஊட்டச்சத்து மதிப்பை அறிந்து பலர் இதனை தங்கள் உணவுகளில் சேர்த்து வருகின்றனர். இருப்பினும், இந்திய சமயலறைகளில் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தப்படுவதில்லை. இதற்கு காரணம் ஆலிவ் எண்ணெய் குறித்து பரவி வரும் சில கட்டுக்கதைகள் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஆலிவ் எண்ணெய் பற்றிய கட்டுக்கதைகளும் உண்மைகளும்:

1. அடர் பச்சை நிறம் ஆலிவ் எண்ணெயின் தூய்மையைக் குறிக்கிறது:

ஆலிவ் எண்ணெயின் தூய்மை அதன் நிறத்துடன் எப்போதும் இணைக்கப்பட்டதில்லை.

2. ஆலிவ் எண்ணெய் சூடுபடுத்தப்பட்டால், அதன் ஊட்டச்சத்து மதிப்பு குறையும். எனவே இந்த எண்ணெய்யை அப்படியே பயன்படுத்தப்பட வேண்டும் மற்றும் வறுக்க பயன்படுத்த முடியாது:

ஆனால் உண்மை என்னவென்றால் வெப்பமாக்கல் ஆலிவ் எண்ணெயின் ஊட்டச்சத்து மதிப்புகளை பாதிக்காது. இன்ஃபான்ட், ஆலிவ் போமேஸ் எண்ணெய் போன்ற பல்வேறு வகையான ஆலிவ் எண்ணெயில் உள்ள ஒரு மாறுபாடு, அதிக சூட்டைத் தாங்கும் தன்மைக் கொண்டது. இது உணவுகளை வறுக்க ஏற்றதாக இருக்கும்.

3. அனைத்து ஆலிவ்/கனோலா/காய்கறி எண்ணெய்களிலும் ஒரே மாதிரியான கலோரிகள் உள்ளன:

ஆலிவ் எண்ணெயில் நல்ல கொழுப்புகள் (MUFA, PUFA), ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது மற்றும் பூஜ்ஜிய டிரான்ஸ்-ஃபேட்/கொலஸ்ட்ரால் உள்ளது. எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயில் பல்வேறு வகையான ஆலிவ் எண்ணெய்களின் மாறுபாடு ஆகும். இது உடலுக்குத் தேவையான அனைத்து வைட்டமின்களையும் கொண்டுள்ளது. கலோரி அளவு அனைவருக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தாலும், ஆலிவ் எண்ணெயில் கனோலா/காய்கறி எண்ணெய்களைக் காட்டிலும் குறைவான கலோரிகளே உள்ளன.

4. ஆலிவ் ஆயிலை மற்ற எண்ணெயுடன் கலந்தால் நன்மைகள் குறைகிறது மற்றும் காய்கறிகள் ஆக்ஸிஜனேற்றத்தை இழக்கின்றன:

ஆலிவ் எண்ணெயை வேறு எந்த எண்ணெயுடனும் கலந்தால் ஆலிவ் எண்ணெயின் நன்மைகள் குறையாது.

5. கிளவுடி எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் என்பது ரான்சிடிட்டியின் அறிகுறியாகும்:

கிளவுடி என்பது எண்ணெய் ஸ்டோரேஜ் செய்யப்பட்டிருக்கும் இடத்தில் வெப்பநிலை சார்ந்த மாற்றத்துடன் தொடர்புடைய ஒரு பொதுவான நிகழ்வு ஆகும். இது எண்ணெய் அதிகமாக சூடுபடுத்தப்பட்டுள்ளது என்று அர்த்தமல்ல. உதாரணத்திற்கு, குளிர்காலத்தில், குறைந்த வெப்பநிலை எண்ணெய்களை திடமாக்குகிறது. இதனை தடுக்க சேமிப்பக இடத்தில் வெப்பநிலையை உயர்த்துவதன் மூலம் எண்ணெய்யை அதன் திரவ வடிவத்திற்கு கொண்டு வருவது, அதன் இயல்பான நிலையை மீட்டெடுக்க உதவும் என்று அறியப்படுகிறது. இதற்காக அவை ரான்சிடிட்டி தன்மை கொண்டிருக்கும் என்பது அர்த்தமல்ல.

6. எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெயை இந்திய சமையலில் பயன்படுத்த முடியாது:

எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் சமைப்பதற்கு மிகவும் நிலையான எண்ணெய் மற்றும் 400 வரை இதனை சூடேற்றலாம். டீப் பிரை செய்ய 350 முதல் 375 வரை சூடேற்றலாம். வெர்ஜின் ஆலிவ் எண்ணெய்கள் அதன் குறிப்பிட்ட வெப்பத்தை தாண்டிச் சூடாக்கினாலும், எண்ணெயில் உள்ள அதிக ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் காரணமாக, குறைந்த அளவிலான தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை அவை உருவாக்குகின்றன. எனவே, எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய்களை இந்திய சமையல் வகைகளையும் சமைக்க பயன்படுத்தலாம்.

7. ஆலிவ் எண்ணெய் கனமானது மற்றும் கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. அதுவே மற்ற எண்ணெய்கள் இதயத்திற்கு இலகுவானவை:

ஆலிவ் எண்ணெயில் பூஜ்ஜிய கொழுப்பு மற்றும் ஜீரோ டிரான்ஸ்-கொழுப்பு உள்ளது. இதில் மோனோசாச்சுரேட்டட் ஒலிக் அமிலம் நிறைந்துள்ளது. இது பல நன்மை பயக்கும் விளைவுகளைக் கொண்டுள்ளது. எனவே இதனை சமையலில் பயன்படுத்த காட்டாயம் ஆரோக்கியமான தேர்வாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

நாற்பது வகை கீரைகளும் அதன் பயன்களும்...!!*

அகத்திக்கீரை – ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும். முடக்கத்தான் கீரை – கை , கா...

Popular Posts