லேபிள்கள்

வியாழன், 6 அக்டோபர், 2022

மூளையை இயக்கி சுறுசுறுப்படைய செய்யும் தோப்புக்கரணம் !!

தோப்புக்கரணம் என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது பிள்ளையார்தான். பிள்ளையாரை வழிபடும்போது பெயரளவுக்காவது தோப்புக்கரணம் போட்டுவிட்டுத்தான் வருவோம்

ஆசிரியர் தண்டனை தர தோப்புக்கரணம் போட சொல்லுவார். இவை மூளையை இயக்கி சுறுசுறுப்படைய வைக்கும் ஒருவித வைத்தியம். ஆம் தோப்புக்கரணத்தால் நமக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது. அதன் விவரத்தை இங்கே காண்போம்.

தோப்புகரணம் போடும்போது வலது கை இடது காதின் கீழ் பகுதியையும் இடது கை வலது காதின் கீழ் பகுதியையும் சற்று இருக்கமாக அழுத்தி பிடித்து முழுமையாக உட்கார்ந்து எழ வேண்டும். சுமார் 10 நெடிகள் உட்கார்து பின் எழ வேண்டும்.

வலது கை இடது காதையும் இடது கை வலது காதை பிடித்து கால்கள் நேராக வைத்து செய்து தோப்புக்கரணம் போடுவது ஒருவகை. வலது கை இடது காதையும் இடது கை வலது காதை பிடித்து கால் பின்னலாக வைத்து செய்வது குசா தோப்பு கரணம் போடுவது இன்னொரு வகை. இருவர் சேர்ந்து செய்தல், தன்னுடைய காதை எதிராளி பிடித்தும் எதிராளியின் காதை தான் பிடித்தும் செய்வது மூன்றாவது முறை.

நாள் ஒன்றுக்கு 15 முதல் 50 தோப்பு கரணம் போடலாம், பெண்கள் கர்ப்ப காலம், மாதவிடாய் காலம் தவிர்து செய்யவும். முதல் முறையாக செய்பவர்கள் 5 வரை செய்து, பிறகு அதிக படுத்தி கொள்ளலாம்.

காதுகளில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகள்:

 காதுளின் கீழ் புரத்தில் முக்கிய உடல் உறுப்புகளின் நரம்பு மண்டலம் உள்ளது இதனை அக்கு பிரசர், அக்கு பஞ்சர் புள்ளிகள் என அழைக்கபடுகிறதுஇருதயம், மூளை, வயிறு, சிறுநீரகம், கண்கள், கீழ் மற்றும் மேல் தாடை, ஈரல், காதின் உட்புற பகுதிக்கு செல்லும் நரம்பு புள்ளிகள் உள்ளனகாதை பிடித்து இயக்குவதால் அந்த நரம்புகள் சுறுசுறுப்பாக இயங்கி நன்மை செய்கிறது.

 தோப்புகரணம் போடும்போது காதுகளின் முக்கிய புள்ளிகளை அழுத்தி பிடித்து உட்கார்ந்து எழும்போது காதில் அழுத்தி பிடித்த இடத்தில் மிகச் சிறிய அளவு அழுத்தம் மாறுபடும். அவ்வாறு தொடர்ந்து அழுத்ததில் மாற்றம் நிகழ்ந்து கொண்டு இருக்குபோது, காதில் பிடித்து உள்ள இடத்தில் உள்ள நரம்புகளின் வழியாக அப்பகுதிக்கான உடல் உறுப்பு தூண்டப்படுகிறது

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/toppukkaranam-driving-the-brain-and-making-it-active-120121100037_1.html


--

கருத்துகள் இல்லை:

Hiccups: விக்கல் என்னும் சிக்கலைத் தீர்க்க டிப்ஸ்

Hiccups: விக்கல் வருவதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. பொதுவாக யாராவது உங்களை நினைத்தால் ...

Popular Posts