லேபிள்கள்

செவ்வாய், 26 ஜூலை, 2022

தினமும் உலர்ந்த அத்திப்பழத்தினை சாப்பிடுவதால் இத்தனை பயன்களா...?

 

உலர்ந்த அத்திப்பழத்தில் 2% இரும்புச்சத்து இருக்கிறது. இது உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்தி ரத்தத்தின் உற்பத்தியையும்  அதிகப்படுத்துகிறது.

அத்திப்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் , கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளதால் இந்த பழத்தை நாம் அடிக்கடி சாப்பிடலாம். இது நம் உடலுக்கு ஆற்றலைத் தருவதோடு ஆரோக்கியத்தையும் தருகிறது

தினமும் மூன்று அத்திப்பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் 5 கிராம் அளவிலான நார் சத்து நம் உடலுக்கு கிடைக்கப்பெறுகிறது. இதனால் மலச்சிக்கலில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

தினமும் 1 அல்லது 2 அத்திப்பழத்தை சாப்பிட்டு வருவதால் இதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. இதன் மூலம் இதயத்தின் ரத்த ஓட்டம் சீராக்கப் படுகிறது. ட்ரைகிளிசரைடுகள் அளவை குறைப்பதால் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைக்கப்படும். இதயம் ஆரோக்கியமாகும்

புற்றுநோயை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் இந்த அத்திப்பழத்தில் உள்ளதால் நம் உடலானது புற்றுநோயை உண்டாக்கும் செல்லகளில் இருந்து பாதுகாக்கப்படுகிறது. நம் உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

தினமும் ஒரு அத்திப்பழத்தை சாப்பிட்டு வருவதால் நம் உடலில் உள்ள எலும்புகள் பலப்படுத்துகிறது. ஒரு அத்திப்பழத்தில் 3% கால்சியம் உள்ளது.நம் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான கால்சியம் அளவை இந்த ஒரு அத்திப் பழமே கொடுத்து விடுகிறது. இதனால் எலும்பு தேய்மானம் ஏற்படாமல் மூட்டு வலி வராமல்  தடுக்கலாம்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/what-are-the-benefits-of-eating-dried-figs-every-day-121011300060_1.html


--

கருத்துகள் இல்லை:

ஒரு எறும்பு உங்களைக் கடித்தால் அதற்கு நன்றி சொல்லுங்கள்! ஏன்?

  ஒரு எறும்பு உங்களைக் கடித்தால் அதற்கு நன்றி சொல்லுங்கள்! ஏன் ? ஒரு எறும்பு உங்களைக் கடித்தால் , அதைக் கொல்லாதே , ஆனால் அதற்கு நன்றி சொ...

Popular Posts