லேபிள்கள்

சனி, 16 ஏப்ரல், 2022

பாதங்களை நல்லமுறையில் பராமரிக்க உதவும் டிப்ஸ் !!

வெதுவெதுப்பான தண்ணீரில் ஷாம்பூ, சிறிதளவு உப்பு மற்றும் எலுமிச்சை பழத்தின் சாரை கலந்து அந்த தண்ணீரில் சில நிமிடங்கள் பாதங்களை நனைத்து வைத்து பின்பு பியூமிக் கற்களால் கால் பாதங்களையும் நகங்களையும் நன்றாக தேய்க்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரால் கால்களைக் கழுவி நன்றாக துடைத்து  எடுக்கவேண்டும்.

உள்ளங்கால்கள் வறண்டு போய் இருந்தால் 4 சொட்டு கிளிசரின், 4 சொட்டு எலுமிச்சைச் சாறு கலந்து தூங்கச் செல்லும் முன் நக விரல்கள், பாதம் முழுவதும் தடவி காய்ந்ததும் காலுறை அணிந்து தூங்க செல்ல வேண்டும்.

பாலில் நனைத்த பஞ்சு கொண்டு நகங்களில் தேய்த்து வந்தால் நகம் உடையாமல் மினுமினுப்பாக இருக்கும். குளிப்பதற்கு முன்பு கஸ்தூரி மஞ்சளோடு வெண்ணெய்யை கலந்து நன்றாக தேய்த்து வந்தால் சொரசொரப்பான பாதம் மிருதுவாகி விடும்.

சிறிது கற்றாழை ஜெல் மற்றும் கடலை மாவையும் கலந்து மிக்ஸியில் அரைத்து இரண்டு நாட்களுக்கு ஒருமுறை உள்ளங்கால்கள், பாதம், கணுக்கால் முழுவதும் தேய்த்து கழுவ வேண்டும்.

4 துளி விளக்கெண்ணெய் உள்ளங் கையில் எடுத்து நன்றாக சூடு பறக்கத் இரண்டு பாதங்களிலும் தேய்த்து வந்தால் மினுமினுப்பாக மாறும். மாதத்தில் இரண்டு முறை வெள்ளை எள் அரைத்து பேஸ்ட் போல் தயார் செய்து அதை விரல்கள், பாத வெடிப்புகள் மீது தேய்த்து வந்தால் பாத வெடிப்புகளும் நகங்களும் பட்டு போல  மாறிவிடும்.

எல்லாவற்றிற்கும் மேலாக காலணிகளையும் சரியான அளவில் போடவேண்டும் தரமானதாகவும் சரியான அளவில் வாங்கி அணியும் போது தான் பாதம் கறுத்துப்  போகாமல் இயல்பாக இருக்கும்.

https://tamil.webdunia.com/article/health-related-to-beauty/tips-to-help-maintain-good-feet-120100800023_1.html


--

கருத்துகள் இல்லை:

பழங்களில் உள்ள விதைகளின் பயன்கள்

பழங்கள் சாப்பிட சிறந்த பொருட்களில் ஒன்றாகும். சுவையாகவும் இனிப்பாகவும் இருப்பதுடன் , ஒட்டு மொத்தமாக நமது ஆரோக்கியத்திற்கு அவசியமான பலவி...

Popular Posts