லேபிள்கள்

சனி, 3 ஜூலை, 2021

உடலைஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில எளிய டிப்ஸ்...!!

தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் முடிந்த அளவு 2ல் இருந்து 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லதாகும். 

காலை, மாலை என இரு நேரமும் ஒரு  மணி நேரமாவது நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதனால் உங்கள் உடல் உறுப்புகளில் நல்ல செயல்பாடு ஏற்பட்டு நரம்புகளுக்கும், சதைகளுக்கு பலம்  கிடைக்கும்.

நேரத்திற்கு சாப்பாடு உணவு உட்கொள்ளவது. ஒரு நாளில் நாம் மூன்று வேலை சாப்பிடுகிறோம் இதில் காலை 9-9:30 மணிக்குள் சாப்பிட வேண்டும். மதியம் 1:30 - 2  மணிக்குள் சாப்பிட வேண்டும். மற்றும் இரவு 7-7:30 மணிக்குள் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

அளவான சாப்பாடு. நாம் தினமும் சாப்பிடும் உணவில் அளவான சாப்பாடு இருந்தால் மிகவும் நல்லது. அல்லது காலை, மாலை நன்றாக சாப்பிட்டால் இரவு  உணவில் குறைந்த அளவு சாப்பாடு இருந்தால் செரிமானம் சீராக ஏற்படும்.

உடற்பயிற்சி, தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நல்லது.தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடல் உறுப்புகளுக்கு நல்ல செயல்பாடு  ஏற்பட்டு மூளைக்கும், இதயத்திற்கும் புத்துணர்ச்சி கிடைப்பதோடு நல்ல ஆரோக்கியம் கூடும்.

நமது தினசரி வேலையை நேரத்திற்கு செய்வது. ஒரு நாளைக்கு நாம் செய்யும் வேலையை நாம் மற்ற நாளிலும் அதே நேரத்திற்கு செய்ய வேண்டும்.

கொழுப்பு சத்து நிறைந்த உணவை தவிர்க்க வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்த உணவை  உட்கொள்வதால் தேவையற்ற கொழுப்பு நம் உடம்பில் ஏற்படுகின்றது.  இதனால் உடல் பருமனாகி உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.  முடிந்த அளவு கொழுப்பு சத்து நிறைந்த உணவை தவிர்ப்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு  நல்லதாகும்.

நாம் உட்கொள்ளும் உணவில் காயிகரிகள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். பயிர்கள் சாப்பிடுவது நல்லது அதிலும் ஊறவைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது.  அசைவ

உணவை இரவில் தவிர்ப்பது உடல் செரிமானத்திற்கு நல்லது.

நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள் முடிந்த அளவு மூன்று அல்லது நான்கு மாதத்திற்கு ஒரு முறை உடலை பரிசோதித்துக்கொள்வது மிகவும் நல்லது

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/tips-for-keeping-the-body-healthy-120051400024_1.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா - 1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்பட...

Popular Posts