லேபிள்கள்

வியாழன், 6 ஜூன், 2019

மழைக் காலங்களில் பின்பற்றப்பட வேண்டிய சுன்னாக்கள்


 (1) வானங்களில் மழையின் மேகத்தைக் கண்டால் அல்லாஹ்வின் தூதரின் பதற்றம் :

عن عائشةرضي الله عنها- قالت: كان النبي -صلى الله عليه وسلم- إذا رأى مخيلة في السماء أقبل وأدبر ودخل وخرج وتغير وجهه، فإذا أمطرت السماء سري عنه فعرفته عائشة ذلك فقال النبي صلى الله عليه وسلم: "ما أدري لعله كما قال قوم عاد (فلما رأوه عارضًا مستقبل أوديتهم)" الآية. رواه البخاري (3034).

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: "சூறாவளி, காற்று, மழைமேகம் ஆகியவை மிகுந்துள்ள நாட்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகத்தில் (ஒரு விதமான கலக்கம்) தென்படும்.முன்னும் பின்னும் நடப்பார்கள். (நிம்மதியற்று ஒருவிதத் தவிப்புடன் காணப்படுவார்கள்.) மழை பொழிந்துவிட்டால் அந்த (தவிப்பு) நிலை அவர்களைவிட்டு நீங்கிவிடும்.மகிழ்ச்சி வந்துவிடும்"
நான் அவர்களிடம் இது குறித்துக் கேட்டதற்கு, "அது என் சமுதாயத்தார்மீது சாட்டப்பட்ட (இறைவனின்) வேதனையாக இருக்குமோ என்று நான் அஞ்சினேன்" என்று விடையளித்தார்கள். அவர்கள் மழையைக் காணும்போது "இது இறைவனின் அருள்" என்று கூறுவார்கள்.
(
ஸஹீஹ்:முஸ்லிம் 📖)(1639)
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சூறாவளிக் காற்று வீசும்போது, "இறைவா, இந்தக் காற்றின் நன்மையையும் அதனுள்ளே மறைந்திருக்கும் நன்மையையும் அது எதனுடன் அனுப்பப் பெற்றுள்ளதோ அதன் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்தக் காற்றின் தீங்கிலிருந்தும், அதனுள்ளே மறைந்திருக்கும் தீங்கிலிருந்தும், அது எதனுடன் அனுப்பப் பெற்றுள்ளதோ அதன் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்" என்று கூறுவார்கள். வானத்தில் மேகமூட்டம் ஏற்பட்டால் நபி (ஸல்) அவர்களது முகம் மாறிவிடும்; (தமது அறைக்கு) உள்ளே போவார்கள்; வெளியே வருவார்கள்; முன்னும் பின்னுமாக நடப்பார்கள். (நிம்மதியற்று ஒரு விதத் தவிப்புடன் காணப்படுவார்கள்.) வானம் மழை பொழிந்துவிட்டால், அந்த (தவிப்பு) நிலை அவர்களைவிட்டு நீங்கிவிடும். இதை நான் அவர்களது முகத்திலிருந்து அறிந்துகொண்டு (இது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆயிஷா! (குர்ஆனில் கூறப்பட்டுள்ளபடி) 'ஆத்" சமுதாயத்தார், அந்த வேதனை (கொணரும் மேகம்) தாங்கள் வசித்த பள்ளத்தாக்குகளை நோக்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டபோது, (தவறாகப் புரிந்துகொண்டு) "இது நமக்கு மழை பொழிவிக்கும் மேகமாகும்" (46:24) என்று கூறினார்களே, அத்தகைய மேகமாகவும் இது இருக்கலாம்" என்று பதிலளித்தார்கள்.
(
ஸஹீஹ்: முஸ்லிம்📖 )(1640)
(2)பலத்த காற்று அடிக்கும்போது

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَ

அல்லாஹும்ம இன்னி அஸ்அலுக்க கைரஹா, வ அஊது பிக மின் ஷர்ரிஹா
பொருள் : யா அல்லாஹ்! இந்த காற்றின் நன்மையை நான் உன்னிடம் கேட்கிறேன். இதன் தீமையை விட்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
ஆதாரம் : அபுதாவுத், இப்னுமாஜா

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا ، وَخَيْرَ مَا فِيهَا ، وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا ، وَشَرِّ مَا فِيهَا ، وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ

அல்லாஹும்ம இன்னி அஸ்அலுக்க கைரஹா, வ கைர மா ஃபீஹா, வ கைர மா உர்ஸில்த பிஹி, வ அஊது பிக மின் ஷர்ரிஹா, வ ஷர்ரி மா ஃபீஹா, வ ஷர்ரி மா உர்ஸிலத் பிஹி
பொருள் : யா அல்லாஹ்! இந்த காற்றின் நன்மையையும், இதிலுள்ளதின் நன்மையையும் எதனை கொண்டு இந்த காற்று அனுப்ப்பட்டதோ அதன் நன்மையையும் நான் உன்னிடத்தில் கேட்கிறேன். இந்த காற்றின் தீமையைவிட்டும் இதிலுள்ளதின் தீமையைவிட்டும் எதனை கொண்டு இது அனுப்பபட்டுள்ளதோ அதன் தீமையைவிட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
ஆதாரம் : முஸ்லிம், புகாரி
(3) மழை அல்லாஹ்வின் அருள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் மழைப் பொழிவதை பார்த்தால் "இது அல்லாஹ்வின் அருள்"என்று கூறுவார்கள்.

وَهُوَ الَّذِي يُنَزِّلُ الْغَيْثَ مِن بَعْدِ مَا قَنَطُوا وَيَنشُرُ رَحْمَتَهُ ۚ وَهُوَ الْوَلِيُّ الْحَمِيدُ ﴿42:28

அவர்கள் நிராசையான பின்னர் மழையை இறக்கி வைப்பவன் அவனே; மேலும் அவன் தன் ரஹ்மத்தை (அருளை) பரப்புகிறான்; இன்னும் அவனே புகழுக்குரிய பாதுகாவலன்.
மழை பொழியும் போது தன் மீது தண்ணீர் துளிகள் விழுவதை விரும்புதல்.

(3) عن أنسرضي الله عنه- قال: أصابنا ونحن مع رسول الله صلى الله عليه وسلم مطر، قال: فحسر رسول اللهصلى الله عليه وسلم- ثوبه حتى أصابه من المطر. فقلنا: يا رسول الله لم صنعت هذا؟ قال: "لأنه حديث عهد بربه تعالى" رواه مسلم (898)

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தபோது மழை பெய்தது. உடனே அவர்கள் மழைத் துளிகள் தம்மீது விழும் விதமாக தமது ஆடையைச் சற்று விலக்கினார்கள். நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே, ஏன் இவ்வாறு செய்தீர்கள்?"என்று கேட்டோம். அதற்கு அவர்கள் "இது (புத்தம் புதிதாக) இப்போதுதான் இறைவனிடமிருந்து வருகிறது" என்று பதிலளித்தார்கள்.
(
ஸஹீஹ்: முஸ்லிம்📖) (1638)
(4) மழை பொழியும் போது பயனுள்ள மழையாக அமைய இறைவனிடம் பிரார்த்தனை செய்தல் நலம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மழை பொய்த்துவிடுவதற்குப் பெயர் பஞ்சமன்று. மாறாக, பஞ்சம் என்பது, மழை பெய்து கொண்டேயிருந்தும் பூமியில் (புற்பூண்டுகள்) எதுவும் முளைக்காமலிருப்பதாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(
ஸஹீஹ் :முஸ்லிம்📖) (5563)
"நபி(ஸல்)அவர்கள் மழை பொழியும் போது

اَللّهُمَّ صَيِّبًا نَافِعًا

"அல்லாஹும்ம ஸய்யிபன் நாஃபிஅன்"
பொருள்: இறைவா! பயனுள்ள மழையாக இதை ஆக்கு!
என்று பிரார்த்தனை செய்வார்கள்!
(
ஆதாரம்: புகாரி )
(5) மழை பொழியும் போது அல்லாஹ்விடம் செய்யும் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும்.

النبي صلى الله عليه وسلم قال : ( ثنتان ما تردان : الدعاء عند النداء ، وتحت المطر ) .
رواه الحاكم في "المستدرك" (2534) والطبراني في "المعجم الكبير" (5756) وصححه الألباني في "صحيح الجامع" (3078 ).

நபி(ஸல்) கூறினார்கள்: இரண்டு நேரங்களில் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளாமல் இருக்க மாட்டான்! பாங்கு கொடுக்கும் நேரம் மற்றும் மழை பொழியும் நேரம் .
(6) மழை பொழிந்ததற்கு பிறகு செய்யும் பிரார்த்தனை!

مُطِرْنَا بِفَضْلِ اللهِ وَرَحْمَتِهِ

முதிர்னா பி ஃபள்லிலில்லாஹி வரஹ்மதிஹி
பொருள் : அல்லாஹ்வின் அருளினாலும், அவனது கிருபையினாலும் நம்மீது மழை பொழிந்தது.
(
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்📖)
(7) தேவைக்கு அதிகமாக மழை பெய்யும்போது,
اَللّهُمَّ عَلَى الآكَامِ وَالْجِبَالِ وَالآجَامِ وَالظّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ اَللّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا
"அல்லாஹும்ம ஹவாலைனா வலாU அலைனா அல்லாஹும்ம அலல் ஆகாமி வழ்ழிராபி வபுதூனில் அவ்தியத்தி வமனாபித்திஷ் ஷஜரி" என்று கூறுவார்கள்
பொருள் : இறைவா! எங்களின் சுற்றுப்புறங்களுக்கு இதை அனுப்பு! எங்களுக்குக் கேடு தருவதாக இதை ஆக்கிவிடாதே! யா அல்லாஹ்! குன்றுகளின் மீதும் மலையின் மீதும் ஓடைகளின் உட்புறங்களிலும் தாவரங்கள் முளைக்கும் இடங்களிலும் மழை பொழிந்திட செய்வாயாக!
(
ஆதாரம்: புகாரி, முஸ்லிம்📖)
(8) மழைக் காலங்களில் பாங்கு சொல்லும் போது உங்கள் வீடுகளில் தொழுது கொள்ளுங்கள் என்ற வார்த்தையை அதிகப்படுத்த வேண்டும்.
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் குளிரும் காற்றும் மழையும் நிறைந்த ஓர் இரவில் தொழுகை அறிவிப்புச் செய்தார்கள். அறிவிப்பின் இறுதியில் "ஓர் அறிவிப்பு! நீங்கள் உங்கள் இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்; இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்" என்று கூறினார்கள். பிறகு "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளிரோ மழையோ உள்ள இரவில் பயணம் செய்யும்போது தொழுகை அறிவிப்பாளரிடம், "நீங்கள் உங்கள் இருப்பிடங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்" என்று அறிவிக்குமாறு கட்டளையிடுவார்கள்" என்றும் குறிப்பிட்டார்கள்.
(
ஸஹீஹ் :முஸ்லிம்📖) (1241)
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்று
கொண்டிருந்த போது மழை பெய்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் யார் விரும்புகிறாரோ அவர் தமது இருப்பிடத்திலேயே தொழுதுகொள்ளட்டும்!" என்று கூறினார்கள்.
(
ஸஹீஹ் :முஸ்லிம்📖) (1243)
(9) மழைக் காலங்களில் இரண்டு நேர தொழுகைகளை ஒரே நேரத்தில் (ஜம்மு) சேர்த்து தொழுவுதல்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹரையும் அஸரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்;மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். அப்போது அச்சமோ மழையோ இருக்கவில்லை.
(
ஸஹீஹ்: முஸ்லிம்📖)
இந்த நபி மொழியின் மூலம் மழை பொழியும் போது இரண்டு நேர தொழுகையை ஒரே நேரத்தில் தொழ முடியும்.
இப்னு அப்பாஸின் மற்றொரு அறிவிப்பு.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் மக்ரிப், இஷாவை ஏழு ரக்அத்களாகவும் லுஹர் அஸரை எட்டு ரக்அத்களாகவும் தொழுகை நடத்தினார்கள். (இப்னு அப்பாஸ்(ரலி) வழியாக இதை அறிவிக்கும் ஜாபிர் இப்னு ஸைதிடம் இது மழை நாளின்போது நடந்திருக்கலாமோ? என்று அய்யூப் கேட்டபோது இருக்கலாம்" என்று பதிலளித்தார்கள்.
(
ஷஹீஹ் புகாரி📖) (543)
(10) மழை வரும் நேரத்தை துல்லியமாக அல்லாஹ்வை தவிர வேறு யாராலும் அறிய முடியாது.

إِنَّ اللَّهَ عِندَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ ۖ وَمَا تَدْرِي نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا ۖ وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ ۚ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ ﴿31:34

31:34. நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடம் உள்ளது. அவனே மழையை இறக்குகிறான்.
"ஐந்து காரியங்களை அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அறிய முடியாது."
  •  நாளை என்ன நடக்கும் என்பதை எவரும் அறிய முடியாது
  • கருவறைகளிலுள்ள நிலைமைகளை எவரும் அறிய முடியாது
  • ஒருவர் நாளை எதைச் சம்பாதித்தார் என்று அறிய முடியாது
  • ஒருவர் தாம் எந்த இடத்தில் மரணிப்போம் என்பதை அறிய முடியாது
  • மழை எப்போது வருமென்பதையும் எவரும் அறிய முடியாது
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
(
ஷஹீஹ்: புகாரி📖) (1039)
(12) அல்லாஹ் அல்லாதவைகளால் மழை பொழியும் என்று நம்புவதும் இணை வைப்பு!
ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஹுதைபியா" எனுமிடத்தில் எங்களுக்கு சுப்ஹுத் தொழுகை தொழுவித்தார்கள். (அன்றிரவு மழை பெய்திருந்தது.) தொழுது முடித்ததும் மக்களை நோக்கி நேராகத் திரும்பி, "உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்" என்று கூறினர். அப்போது "என் அடியார்களில் என்னை நம்பக்கூடியவர்களும் உள்ளனர்; (என்னை) மறுக்கக்கூடியவர்களும் உள்ளனர். "அல்லாஹ்வின் தயவாலும் அவன் கருணையாலும்தான் நமக்கு மழை பொழிந்தது" எனக் கூறியவர்கள் என்னை நம்பி, நட்சத்திரத்தை மறுத்தவர்களாவர். "இன்ன இன்ன நட்சத்திரத்தினால் தான் எங்களுக்கு மழை பொழிந்தது" எனக் கூறியவர்கள் என்னை மறுத்து நட்சத்திரத்தை நம்பியவர்கள் ஆவர்" என அல்லாஹ் சொன்னான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(
ஸஹீஹ் முஸ்லிம்📖) (125)
-D.முஹம்மது ஹுசைன் மன்பஈ

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

விஷ ஜந்துக்கள் கடித்தால் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து தெரிந்து கொள்ளலாம்

விஷ ஜந்துக்கள் கடித்து மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து கீழே காணலாம். கண்ணாடி விரிய...

Popular Posts