லேபிள்கள்

வெள்ளி, 9 நவம்பர், 2012

பிஸினஸ் மேனேஜ்மென்ட் இதுதாங்க!


கொஞ்சம் படிப்பு, கொஞ்சம் அறிவு, இன்டர்வியூவில் சரியான ப்ளஸ்

தன்னம்பிக்கையான பேச்சுவே லை கிடைப்பதற்கு இது போதும். ஆனால்பிஸினஸுக்கு ..? பல விஷயங்களும் சரியான நேரத்தில், சரியாக நடக்கும் போதுதான் அது க்ளிக்ஆகும்!
 பல விஷயங்கள் என்ற உடன், ‘பண ம், பிஸினஸுக்கான ஐடியா மற்று ம் பணி யாளர்கள்இவைதானே.. ?’என்று நினைக்கத்தோன்றும். ஆனால், இவற் றைத் தாண்டியும் சில விஷயங்கள் தேவை!என்கிறார் பிஸினஸ் கன்சல்டன்ட் சேகர் . ஒவ்வொன்றை யும் இங்கே விள க்கமாகவே சொல்கிறார் உங்களுக்காக
விருப்பம்தன்னம்பிக்கை வளர்க்கும்!

ஒரு பிஸினஸை நீங்கள் விருப்பப்பட்டு செய்கிறீர்களாஅல்லது நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் செய்கிறீர்களா என்பது முக்கியம். பலர் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் தான் பிஸினஸ் செய்கிறார்கள். அது அவர்களுக்கேகூட தெரியாமல் இருக் கலாம். உதாரணத்துக்கு, பெற்றோரி ன் பிஸினஸை சில சமயம் எடுத்து நடத்த வேண்டி இருக்கும். இன்னும் சிலருக்கு நிலையான வருமானம் வந்து கொண்டிருக்கும். அது கொஞ்ச ம் அதிகமாக சேர்ந்துவிடும்போது… ‘பணத்தை வங்கியில் வைத்திருப்ப தை விட, ஏதாவது பிஸினஸ் செய்ய லாமேஎன்று நினைத்து, ‘பார்ட் டைம் ‘ (பகுதி நேரம்) பிஸினஸ் செய்வார் கள். இன்னும் சிலருக்கு நிறைய நேரம் இருக்கும். அதை சரியான வழியில் செலவழிக்க வேண்டும் என்பதற்காக பார்ட் டைம்பிஸின ஸ் செய்ய நினைப்பார்கள்.

பார்ட் டைம்பிஸினஸில் வெற்றி கிடைக்கவில்லை என்றால், நீங்கள் ஏற்கெனவே செய்து கொ ண்டிருக்கும் வேலையே, உங் களுக்குச் சுமையாக மாறி வி டக்கூடிய ஆபத்து இருக்கிற து. எந்தத் தொழிலை நீங்கள் விருப்பப்பட்டு செய்கிறீர்க ளோஅந்தத் தொழில் மட்டு மே உங்களது தன்னம்பிக்கை யை வளர்க்கும். அதுதான் உங்களையும், உங்கள் தொழி லையும் அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லு ம்.

உதாரணத்துக்குஉங்களுக்கு இசை தெரியும் என்பதற்காக இசைப் பள்ளி ஆரம்பிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தொடக்கத்தில் சேர்க்கை மிக குறைவாக வே இருக்கிறது. கொஞ்சமும் மனம் தளராமல் கற்றுத் தரு வதுடன், நீங்களும் இசையை த் தொடர்ந்து கற்றுக்கொண் டே இருப்பீர்கள்… ‘இன்று இல் லாவிட்டால் நாளை, நாளை இல்லாவிட்டால் நாளை மறு நாள் நம் இசைப்பள்ளி பெரிய அளவில் வளரும்என்ற நம்பி க்கையில்! ஒருவேளை உங்களுக்கு இசையில் விருப்பமே இல்லை என்றால்,  நாளாக ஆக உங்களது தன்னம்பிக்கை குறையும். விரை வில் உங்களது பள்ளியில் பூட்டு தான் தொங்கும்!

சந்தையின் தேவையை சிந்தியுங்கள்!

அது ஒரு பெரிய அபார்ட்மென்ட். அங்கு நிறைய இளம் பெற்றோர் வசிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் வேலைக்கு ச் செல்பவர்கள். நகரத்தில் வசி ப்பதால் குழந்தைகளைப் பார் த்துக்கொள்ள ஆள் இல்லை. ஒரு க்ரெச்’ (Creche) ஆரம்பித் தால் என்ன என்று, அதே அபார் ட்மென்ட்டில் உள்ள ஒரு இல்ல த்தரசிக்கு ஐடியா வந்தது. அது சக்சஸும் ஆனது. மற்றவர்களு க்கு என்ன தேவை, மற்றவர்க ளால் என்ன முடியாது, அதில் நீங்கள் எவ்வளவு திறமையானவர்க ளாக இருக்கிறீர்கள் என்பதையெல்லாம் பொறுத்துதான் இருக்கிற துபிஸினஸ் விளையாட்டு.
வாடிக்கையாளர்கள் வாடக் கூடாது!
வாடிக்கையாளர்களைப் பற்றி தொடர்ந்து சிந்திக்கும் போதுதான்புதுப்புது சேவைகளைக் கொடுக்க முன்வருவீர்கள். அது உங்களது பிஸினஸுக்கு இன்னும் புது வாடிக் கையாளர்களைக் கொடுக்கும்.
இன்றுள்ள டெக்னாலஜி கம்பெனிக ளை எடுத்து கொள்ளுங்கள். எந்த கம்பெனி தொடர்ந்து மாற்றங்களை புகுத்தி வருகிறதோஅந்த கம்பெனி தான் தொடர்ந்து சந்தையில் இருக்கி றது. இல்லாவிடில், ஒரு காலத்தில் ஓஹோவென இருந்த கம்பெனி என் ற பெயர்தான் கிடைக்கும்.
எந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தாலும் அவர்கள் சொல்வ து… ‘இஃப் யூ ஆர் நாட் அப்டேட்டட்யு வில் பி அவுட்டேட்டட்’ (If you are not updated, you will be outdated).வேலையில் தொடர்வதற்கே அப்டேட் தேவை என்றால், பிஸினஸுக்கு அது எவ்வளவு முக்கிய ம்?!

நம்பிக்கைநிரந்தரத் தேவை!
 நம்பிக்கையின் அடிப்படையில்தான் பல பிஸினஸ்கள் நடந்து கொண்டிருக்கின் றன. ஆனால், அந்த நம்பிக்கையைப் பெறுவது அவ்வள வு எளிதான காரியம் அல்ல. என் நண்பர் ஒருவர், தன் தொழி லின் ஆரம்ப காலத்தில் சந்தித்த சூழ லைப் பாருங்கள். தான் உற்பத்தி செய்த பொருட்களை கடையில் கொடுத்து, பணம் பெற்றுக்கொள்வார் நண்பர். கடைக்காரர், தான் தரவேண்டிய 1,000 ரூபாயை… 10 ரூபாய் தாள்களாகக் கொ டுப்பார். நண்பர் எண்ணிப் பார்க்கும் போ து, 10 ரூபாய் அதிகமாக இருக்ககடை க்காரரிடமே திருப்பிக் கொடுப்பார். இதே போல் பல முறை நடந்தபோதுதான், ‘ஆஹாநாம் சோதனை செய் யப்படுகிறோம்என்பதே அவருக்குப் புரிந்திருக்கிறது. ஒரு வேளை முதல்முறையே அந்த 10 ரூபாய் தாளுக்கு அவர் ஆசைப்பட்டிருந்தா ல்..? எனவே, பண விஷயத்தில் தேவை 100% நேர்மை.

தொழில் வாக்குறுதி!
பணம் மட்டுமல்லதரம், நேரம் தவறாமை போன்ற விஷயத்திலும்வாடிக்கையாளர்களிடம் நம்பிக்கையை உருவாக்க வேண்டும். பல நாள் கஷ்டப்பட்டு உருவாக்கிய நம்பிக்கையை ஒரே நாளில் கூட இழக்க வாய்ப்பிருக்கிறது என்பதால், தினமும் கத்திமேல் நடப்பது போலத்தான் பிஸினஸில் இருக்க வேண்டும். 10 மணிக்கு டெலிவரி கொடுப்பதாக சொல்லிவிட்டு 9.30 மணிக்குக்கூட கொடுக்கலாம். ஆனால்… 10.10-க்குக் கொடுக்கக் கூடாது.

நீண்டகாலத் திட்டம்!
புதுப்புது ஐடியாக்கள்தான் பிஸினஸை அடுத்த கட்டத்துக்கு எடுத்து ச் செல்லும். ஆனால் அந்த ஐடியாக்களை நீண்ட காலத்துக்கு ஏற்றவையாக, தேவைப்படும்படியா க யோசிப்பது நல்லது. காரணம் , எந்த ஒரு மாற்றத்தையும் மக் கள் உடனடியாக அங்கீகரிக்க மாட்டார்கள். ஒரு ஐடியாவை முடிந்தவரை செயல்படுத்தி வி ட்டு, அதன் பிறகும் தோற்றால் மட்டுமேமாற்றாக மற்றொரு ஐடியாவை கொண்டு வரலாம். அப்படியில்லாமல் அடிக்கடி ஐடி யாவை மாற்றிக்கொண்டு இரு க்கும்பட்சத்தில்உங்களது பிராண்ட், உங்களது நிறுவனத்தின் மீதான இமேஜ்இதெல்லாம் சரிய வாய்ப்புண்டு.
பணத்தைத் தாண்டியும் பல முக்கியமான விஷயங்கள் பிஸினஸில் உள்ளது என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். தொழில் வெற்றியடைய வாழ்த்துக்கள்!

கருத்துகள் இல்லை:

சர்க்கரை நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவது ஆதாயமா? ஆபத்தா?

பீட்ரூட்டில் பல மருத்துவ குணங்கள் உள்ளதால் பெரும்பாலான மருத்துவர்கள் பீட்ரூட்டை உணவில் அடிக்க...

Popular Posts