லேபிள்கள்

ஞாயிறு, 25 நவம்பர், 2012

நபி கூறும் பூண்டு வாசனை=அறிவியல் கூற்றுகள்!


 பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை சாப்பிடுபவர் நம்முடைய பள்ளியை விட்டு விலகி அவரின் இல்லத்திலேயே அமர்ந்துக் கொள்ளட்டும்
 
பச்சைப்
 பூண்டின் வாசனை பற்றிய மேற்கூறிய  நபி மொழியும் அதனோடு ஒத்துப்போகும் மற்றும் அதனை மெய்ப்பிக்கும் அறிவியல் விளக்கம் பற்றியதே இப்பதிவு.

முதலில், எப்படி ஒரு பொருளின் வாசனையை நுகர்கிறோம் என்பதை சுருக்கமாக பார்த்து விடுவோம்:
 

பொருட்கள் வைக்கப்படும்போது அவற்றிலிருந்து சில இரசாயனக் கூறுகள் (odorent) வளியில் பரவுகிறது. அவை எமது மூக்கின் உட்பகுதியை போர்த்திக் கொண்டிருக்கும் மென்சவ்வினை அடைகிறது. அங்கேதான்நுகர்வு வாங்கி
 எனப்படும் கலங்கள் உள்ளன. இரசாயன கூறுகள் இந்த நுகர்வு வாங்கிகளைத் தூண்டிவிடுகிறது. எனவே அங்கிருந்து நரம்பு கணத்தாக்கத்தின் மூலம் மூளையில் உள்ள ஒல்பெக்டரி கோர்டெக்ஸ் (olfactory cortex) எனும் பகுதிக்கு தகவல் அனுப்பப்படுவதால் மூளையால் அந்த வாசனையை நுகரக் கூடியதாக உள்ளது.
             
பொதுவாக எல்லாப் பொருட்களிற்கும் வாசனை உண்டு. என்றாலும் எம்மால் எல்லா வாசனையையும் நுகரமுடிவதில்லையே!??
இது ஏனெனில்,

ஒவ்வொரு பொருளில் இருந்தும் இரசாயனக்கூறு வெவ்வேறு அளவில் வெளிவிடப்படும். அதனால்தான் அவை வளிமண்டலத்தில் வெவ்வேறு செறிவுகளில் காணப்படுகிறது. ஆனால் அது குறித்த
 அடிப்படை செறிவைவிட அதிகமாக உள்ளபோது மட்டும்தான் அதை விலங்குகளால் நுகர முடிகிறது. அடிப்படை செறிவைவிட குறையும்போது நரம்புக் கணத்தாக்கம் இல்லாமல் போவதால் மூளைக்கு செய்தி அனுப்பப்படுவதில்லை.

வாசனையை அறிவதற்கு தேவையான
 ஆகக் குறைந்த செறிவு மட்டம்’(Threshold for olfaction) வெவ்வேறு விலங்கினங்களிற்கிடையிலும், அதேபோல வெவ்வேறு பொருட்களிற்கும் வித்தியாசப்படுகிறது. உதாரணத்திற்கு, 
 
நாய்களிற்கு மனிதர்களைவிட நுகர்வு திறன்
 2.5 log மடங்கு அதிகம். அதனாலேதான் மனிதனால் அடையாளம் காணமுடியாத மிகக் குறைந்த செறிவில் உள்ள வாசனைகளைக்கூட நாயால் அடையாளம் காணமுடிகிறது.
அதேபோல ஒரு குறித்த விலங்கினத்தை எடுத்தோமென்றால் வாசனையை அடையாளம் காணத்
 தேவையான threshold  ஒவ்வொரு பொருட்களிற்கும் வேறுபடுகிறது. உதாரணமாக மனிதன் peppermint ஐ நுகர்வதற்கு அது வளி மண்டலத்தில் (குறைந்தது) 1 லீற்றரிற்கு 0.02mg என்ற அளவில் காணப்பட வேண்டும். அதேவேளை chloroform வாசனையை நுகரவேண்டுமெனில் அது ஆகக் குறைந்தது 1 லீற்றர் வளியில் 3.3mg அளவிற்கேனும் இருக்கவேண்டும்.
அதுபோலவே பொருட்களிற்கு அருகில் உள்ளபோது வாசனை அதிகமாகவும் தூரம் செல்ல செல்ல அது குறைந்து இல்லாமல் போவதையும் பார்க்கிறோம். இதற்கு கூட செறிவு வித்தியாசம்தான் காரணம். பரவும் இரசாயனக்கூறு பொருட்களிற்கு அருகில் அதிக செறிவிலும் அப்பால் பரவிச் செல்லும்போது செறிவு குறைந்துக்
 கொண்டே வந்து THRESHOLD விட குறையும் இடத்தில் வாசனை அற்றுப் போகும்.
பூண்டு பற்றி அறிவியல்:
‘Ganong Review Of Medical Physoilogy’ என்பது prof. Ganong ஆல் எழுதப்பட்ட, மருத்துவப்படிப்பு, மருத்துவ மேற்படிப்பு, மருத்துவம் சார்ந்த கற்கைகளிற்காக உலகளாவிய ரீதியில் பரிந்துரைக்கப்பட்ட ஒரு புத்தகம். இந்நூலில் prof.Ganong குறிப்பிட்டுள்ள ஒரு வசனத்தை அறிய நேர்ந்தபோது என்னால் ஆச்சர்யம் தாங்கவே முடியவில்லை. எனவே இதை எல்லோரிடமும் பகிரவேண்டும் என்ற ஆவல் என்னை தூண்டிவிட்டது.
Some olfactory thresholds:
Substance
mg/L of air
Ethyl ether
Chloroform
Pyridine
Oil of peppermint
Lodoform
Butyric acid
Propyl mercaptan
Artificial musk
Methyl mercaptan
5.83
3.30
0.03
0.02
0.02
 
0.009
0.006
0.00004
0.0000004
The olfactory thresholds for substances shown in table 14-1 illustrate the remarkable sensitivity of the odorant receptors. For example, methyl mercaptan, one of the substances in garlic, can be smelled at a concentration of less than 500 pg/L of air”

(“அட்டவணையில் காட்டப் பட்டுள்ள, பொருட்களை நுகர்தலிற்கான Threshold ஆனது (மூக்கிலுள்ள) நுகர்வு வாங்கிகளின் குறிப்பிடத்தக்க உணர்திறனை விவரிக்கிறது. உதாரணமாக
 பூண்டிலுள்ள மீதைல் மேர்கப்டன் எனும் கூறானது 500pg/L செறிவில் உள்ளபோதே நுகர முடிகிறது”)

ஒரு லீற்றர் வளியில் 500 pg (5*10-6
 mg) ??????????
கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியாத மிக நுண்ணிய அளவு……
மீதைல் மேர்கப்டன் வியக்கத்தக்க அளவில் குறைந்த Threshold எல்லையை கொண்டிருந்தமையால் prof.Ganong ன் கவனத்தை ஈர்த்தது மட்டுமன்றி, தன் நூலில் விஷேடமாக அவரை குறிப்பிடத் தூண்டிய அதே பூண்டுஎனும் வார்த்தை என்னை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டது. மாஷா அல்லாஹ்!

சரி இதற்கும் இப்பதிவிற்கும் என்ன தொடர்பு... பார்ப்போம்!
பூண்டு பற்றி முஹம்மத் (ஸல்) அவர்கள் :
 “'பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிடுகிறவர் நம்முடைய பள்ளியைவிட்டு விலகி அவரின் இல்லத்திலேயே அமர்ந்துக் கொள்ளட்டும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                   அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி); நூல்: புகாரி (855)
அநேக துர்மணம் கொண்ட உணவுகளின் வாசனை எம்மை உடனடியாக சூழவுள்ள ஓரிருவரால்தான் உணரக்கூடியதாக இருக்கும். ஆனால் 500 pg/L செறிவென்பது ஏறத்தாள வெள்ளைப் பூண்டு உண்டவர் உள்ள மண்டபம் முழுதும் நுகரப்பட்டு ஒரு வித சங்கடத்தை உருவாக்கிவிடும்.

ஆண்கள் பள்ளியிலே தொழவேண்டும் என்ற கட்டளையின் முக்கியத்துவம் காரணமாக
 பச்சைப் பூண்டு, பச்சை வெங்காயம் உண்டவர்கள் கட்டாயம் பல் துலக்கியே ஆக வேண்டியுள்ளது. இல்லையெனில் வீட்டை விட்டு வெளியிறங்கியது முதல், பாதையில் கடந்து செல்பவர்கள் உள்பட பள்ளிவாயிலில் உள்ள அனைவரிற்கும் தொந்தரவை ஏற்படுத்தியவராக கணிக்கப்படுவார். சின்ன விடயங்களில் கூட இஸ்லாம் தனி மனித உரிமை மீறலை எவ்வளவு அழகாக கண்டிக்கிறதென்பதை பாருங்கள்….அல்லாஹு அக்பர்!
அதே வேளை தொழுகை தூய்மையான நிலையில் நிறைவேற்றப்படும் ஒரு வணக்கமாகும். எனவே பச்சையாக
 பூண்டு, வெங்காயம் உண்டால், உண்ட பின் பல் துலக்குவது ஒரு சுத்தமான நிலை என்று இஸ்லாம் கற்று தருகிறது.

சில மாற்று மத நண்பர்கள்
 உங்களிற்கு நற்பண்புகளை பெற்றோர் கற்றுத்தரவில்லையா? இஸ்லாம் தான் கற்றுத்தந்ததா? என்று அடிக்கடி கேட்பதை நாம் காண முடிகிறது. அவர்களில் எத்தனை பெற்றோர் இவ்வாறு பல் துலக்கக் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள் என்றால் நிச்சயம் அரிதாகதான் இருக்கும். ஆனால் எங்களிற்கும், எம் பெற்றோரிற்கும் நற்பண்புகளை போதித்தது இஸ்லாம்தான்! அதற்காக பச்சைப்  பூண்டு சாப்பிட வேண்டாம் என்று இஸ்லாம் தடை செய்யவில்லை. பச்சைப்பூண்டை சமைத்து சாப்பிடுவதன் மூலம் அதன் வாசனையை போக்க முடியும் என நபி (ஸல்) கூறியிருக்கிறார்கள். 
முஆவியா இப்னு குர்ரத்(ரலி) அவர்கள் த‌னது தந்தையிடமிருந்து கேட்டதாக அறிவிக்கிறார்கள்:
இரண்டு செடிகளைச் சாப்பிடுவதை விட்டும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள். மேலும் எவர் அவற்றை சாப்பிடுகிறாரோ அவர் தொழுமிடத்துக்கு (மஸ்ஜிதுக்கு) நெருங்கவேண்டாம் என்றும், அதனை சாப்பிடுவது யாருக்கு அவசியமாகிறதோ அவர் சமைப்பதின் மூலம் அவற்றின் வாடையை போக்கிவிடுமாறும் கூறினார்கள். அந்த இரண்டு செடிகள் வெங்காயமும், பூண்டுமாகும்.  ஆதாரம்: அபூதாவூத் (3331)
அறிவியலின் படி சமைப்பதன் மூலம் வாசனைக்கு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்!
இவற்றிலுள்ள மீதைல் மேர்கப்டனில் அதிக எண்ணிக்கையில் டைசல்பைட்டு பிணைப்புகள் உள்ளமையினால் வெப்பத்திற்கு இலகுவில் ஆவியாகிவிடும் பண்பை கொண்டுள்ளது. எனவேதான் சமைக்கப்பட்ட வெள்ளைப்பூண்டில் இக்கூறுகள் அதிகளவில் ஆவியாகிவிட பெருமளவான துர்வாடை அற்றுப் போய்விடுகிறது. ஆக  சமைக்கப்பட்ட பூண்டு எனில் சாப்பிட எத்தடையும் இல்லை! 

மேலும் வெங்காயம், பூண்டு என்பன பல மருத்துவக் குணங்கள் நிறைந்த, அவசியம் உண்ணவேண்டிய உணவுகள் என்பதாலோ தொந்தரவு கொடுப்பதாகினும் தடை செய்யப்படாமல்
 வாசனை போக்கிக்கொள்ள வழிமுறையை சொல்லப்பட்டது!!! :-)

எனவே,
 பூண்டு சமைத்து  உண்ணுங்கள். பச்சையாக உண்டால்  பல் துலக்க மட்டும் மறந்துவிடாதீர்கள் please…………………

இவ்விடயத்தை என்கவனத்திற்கு கொண்டு வந்த Dr.Mathani Sir (Katankudy,Srilanka) அவர்களிற்கு ஜஸாக்கல்லாஹு கைர்!

வஸ்ஸலாம்.
உங்களில் ஒரு சகோதரி,
அஷ்பா.

கருத்துகள் இல்லை:

கேஸ் சிலிண்டரை சேமிக்க சிறந்த வழி முறைகள்.

' மாதம் பிறந்தா இதுக்கு அழுதே ஆகணும்னு... ' ஒரு பட்டியல் இருக்கும். அதில் ஒன்ற காஸ் ...

Popular Posts