லேபிள்கள்

திங்கள், 3 டிசம்பர், 2012

மனித மூளை - சிறிய அளவிலான இந்த உடல் தொடர்ச்சியான ஆச்சர்யங்களை தர தவறியதில்லை.


மனித மூளை குறித்த சில வியப்பான விசயங்களை கற்றுக்கொள்வோம் வாங்க. 
1. மனித உடல் இடையில் இரண்டு சதவிதமே மூளை (~1.4 kg) என்றாலும், நாம் சுவாசிக்கும் பிராணவாயுவில் 20%-தை மூளையே எடுத்துக்கொள்கின்றது. அதாவது, ஐந்தில் ஒரு பகுதி பிராணவாயுவை மூளையே பயன்படுத்திக்கொள்கின்றது. சுமார் 4-6 நிமிடங்கள் வரை ஆக்சிஜன் இல்லாமல் மூளையால் இருக்க முடியும்.
2. அதுபோல, இதயம் பம்ப் செய்யும் இரத்தத்தில் 15-20% நேரடியாக மூளைக்கு செல்கின்றது. 
3. மனித மண்டை ஓட்டை திறந்து மூளையை எடுத்தால், நம் கண்களும் அதனோடு சேர்ந்து வந்துவிடும். ஒரு கணிப்பொறியில் கீபோர்ட் இணைந்திருப்பது போல மூளையுடன் நேரடியாக இணைந்திருக்கின்றன நம் கண்கள். ஆனால் மற்ற புலன்களுக்கு இம்மாதிரியாக நேரடி இணைப்புகள் கிடையாது.   
4. மனித மூளை சுமார் 10 வாட் சக்தியை உற்பத்தி செய்கின்றது. இது, ஒரு சிறிய அளவிலான மின் விளக்கை எரிய வைக்க போதுமானது. (அதனாலும் தான் மனித மூளையில் பல்ப் எரிவது போல காட்டுகின்றார்களோ :) )
5. உடலின் மற்ற பகுதிகளின் வலியை மூளை உணர்ந்தாலும் தன்னுடைய வலியை அதனால் உணர முடியாது. இதற்கு காரணம், வலி உணரும் உணர்விகள் மூளைக்கு கிடையாது. இந்த காரணத்தினால், மனிதன் முழு நினைவோடு இருக்கும்போதே மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல், இந்த காரணத்தினாலேயே தலைவலி பிரச்சனைகளை மூளையோடு தொடர்புபடுத்த முடியாது. மூளையை சுற்றி இருக்கும் நரம்புகளின் அழுத்தத்தாலும், இரத்த நாளங்களின் அழுத்தத்தாலுமே வலி ஏற்படுகின்றது. 
6. மனித மூளையில் 80% தண்ணீரே உள்ளது. நீர் வறட்சி மூளையை பாதிப்புக்குள்ளாக்கலாம். ஆகையால், நீர் வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம்முடைய கடமையாகும். தொடர்ச்சியான இடைவெளியில் தண்ணீர் பருகிக்கொண்டிருப்பது ஆரோக்கியமான மூளை செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும். 
7. மூளையிலிருந்து வெளிவரும்/உள்வரும் நரம்பு சமிக்கைகள், ஒரு மணி நேரத்திற்கு சுமார் 170 மைல்கள் வேகத்தில் பயணிக்கின்றன. இதனாலேயே நம்மால் எந்தவொரு உணர்வையும் உடனடியாக உணர முடிகின்றது. 
8. மூலையில் உள்ள இரத்த நாளங்களின் நீளம் மட்டும் சுமார் ஒரு லட்சம் மைல்கள். 
9. சுமார் நூறு பில்லியன் நியுரான்கள் மூளையில் உள்ளன. இவை ஒன்றோடு ஒன்று தொட்டுக்கொள்வதில்லை (physically).  
10. நியுரான்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புக்கொள்வதை மந்தமாக்குகின்றது மதுப்பழக்கம். (இருப்பினும் டாஸ்மாக் நடத்துவதை அரசாங்கம் கைவிடபோவதில்லை. மதுவை எதிர்க்காத பலருக்கு, தமிழன் முன்னேறவில்லை(?) என்ற ஆதங்கம் மட்டும் இருக்கும்). 
11. கருவுறலின் போது, நிமிடத்திற்கு 2,50,000 நியுரான்கள் என்ற கணக்கில் மூளை வளர்ச்சியடைகின்றது. குழந்தை பிறந்த ஒரு வருடத்தில், அதன் மூளை அளவு மூன்று மடங்கு பெரிதாகி விடுகின்றது. (குழந்தைகளின் தலை பெரிதாக இருக்கின்றது என்பது இயல்பான விசயமே!!) 
12. ஒரு மனித மூளையில் உள்ள நிலைமாற்றிகளின் (switches) எண்ணிக்கை, இவ்வுலகில் உள்ள அனைத்து கணிப்பொறிகள், வழிச்செயளிகள் (Routers) மற்றும் இணைய இணைப்புகளில் உள்ள நிலைமாற்றிகளை விடவும் அதிகம். 
இறைவன் அமைத்துக்கொடுத்துள்ள இந்த மிக அற்புதமான அமைப்பை நல்ல முறையில் பாதுகாத்து ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம். 
இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன். 
இறைவனே எல்லாம் அறிந்தவன். 
References:
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ 

கருத்துகள் இல்லை:

பகலில் தூங்குவதால் ஏற்படும் விளைவுகள்.

தூங்குவதால் உடலுக்கு ஓய்வு கிடைத்து சோர்வு நீங்குகிறது. சிலருக்கு படுத்தவுடன் தூக் கம் கண்களை...

Popular Posts