லேபிள்கள்

புதன், 1 ஆகஸ்ட், 2018

வருமானவரியைக் கணக்கிடுவது எப்படி?

வருமானவரியைக் கணக்கிடுவது எப்படி?
வருமான வரி சட்டத்தின் படி ஐந்து தலைப்புகளில் ஒவ்வொரு விதமாக வருமானம் கணக்கிடப்படுகிறது எல்லாவிதமான வருமானங்களையும் பணப் பரிமாற்றங்களையும் இதில் அடக்கி விடலாம்.
1. சம்பள வருமானம்                                                   Income from Salary
2. வீட்டு வாடகை வருமானம்                                Income from House Property
3. மூலதன ( பரிமாற்ற) வருமானம்                    Income from Capital Gains
4. வியாபாரம் மற்றும் தொழில் வருமானம்  Income from Business and Profession
5. இதர இனங்களின் மூலமாக வருமானம்    Income from Other Sources
தனிநபர் (Individual), கூட்டு நிறுவனம் (Patrnership Firm), கம்பெனி (company), மூலதன  பரிமாற்றம், இதர வருமானம் ஆகிய வருமானத்திற்கு ஒவ்வொருவிதமான விகிதத்தில் வரி கணக்கீடு உண்டு.
இதில் தனிநபர் வருமானம் மூன்று விதமாக பிரிக்கப்படும்
1. 60 வயதுக்கு கீழ் உள்ளவர்
2. 60 வயதுக்கு மேல் ஆனால் 80 வயதுக்கு கீழ் உள்ளவர்
3. 80 வயதுக்கு மேல் உள்ளவர்
பொதுவாக தனிநபருடைய வருமானம் என்பது பெரும்பாலும் சம்பளம் மூலமாகவே வரும். அவ்வருமானத்திற்கு வருமான வரியை எப்படி கணக்கிடுவது என்பது மிகவும் எளிமையனது அதற்கு வருமானவரி படிவம் தாக்கல் செய்வதும் மிகவும் எளிமையானதே. ஒருவருடைய ஆண்டு வருமானம் இரண்டு லட்சம் வரை இருந்தால் அவருக்கு வருமானவரி கிடையாது, அதற்கு மேல் இருந்தால் கீழ்கண்ட விகிதத்தில் வருமான வரி கணக்கிடப்படும்.
1. 60 வயதுக்கு கீழ் உள்ளவர்:
வருமானம்                                        வருமானவரி சதவீதம்
2,00,000                                                இல்லை
2,00,000-5,00,000                          2,00,000 லட்சத்துக்கு அதிகமான தொகைக்கு 10%
5,00,000-10,00,000                       30,000+ 5,00,000 லட்சத்துக்கு அதிகமான தொகைக்கு 20%
10,00,000க்கு மேல்                        1,30,000+ 10,00,000 லட்சத்துக்கு அதிகமான தொகைக்கு 30%
2.  60 வயதுக்கு மேல் ஆனால் 80 வயதுக்கு கீழ் உள்ளவர்:
வருமானம்                                          வருமானவரி சதவீதம்
2,50,000                                                 இல்லை
2,50,000-5,00,000                            2,50,000 லட்சத்துக்கு அதிகமான தொகைக்கு 10%
5,00,000-10,00,000                         25,000+ 5,00,000 லட்சத்துக்கு அதிகமான தொகைக்கு 20%
10,00,000 க்கு மேல்                        1,25,000+ 10,00,000 லட்சத்துக்கு அதிகமான தொகைக்கு 30%
3. 80 வயதுக்கு மேல் உள்ளவர்:
வருமானம்                                        வருமானவரி சதவீதம்
5,00,000                                                இல்லை
5,00,000-10,00,000                       5,00,000 லட்சத்துக்கு அதிகமான தொகைக்கு 20%
10,00,000 க்கு மேல்                       1,00,000+ 10,00,000 லட்சத்துக்கு அதிகமான தொகைக்கு 30%
இத்தோடு கல்விக்கு என கூடுதலாக 2%, மேல்நிலைக்க் கல்வி மற்றும் உயர்கல்விக்கு
என 1% கூடுதலாக மொத்த வரியில் இருந்து வசூலிக்கப்படுகிறது.
உதாரணமாக ஒருவருடைய ஆண்டு வருமானம் 3,65,00 என்றால் அவருடைய வரி கீழ்கண்டவாறு கணக்கிடப்படும்.
வருமானம்    3,65,000-2,00,00= 1,65,00
வரி                                                                 1,65,000X10% =  16,500
3% கல்வி வரி                                                   16,500X3%=        480
———————————–
செலுத்தவேண்டிய வரி                                                      =   16,980
———————————–
வருமான வரி கணக்கிடப் படுவதற்கு முன் மொத்த வருமானத்தில் இருந்து  தனிநபர்களுக்கு அவரவருடைய தொழில் வரி (Professional tax), சேமிப்பு, வீட்டுக்கடன் அசல், மருத்துவக் காப்பீடு,போன்றவற்றிற்க்கு செலுத்திய தொகைகளை பிடித்தம் செய்து கொள்ளலாம் அவை VI-A Deduction என்று குறிப்பிடப்படுகிறது.அந்த பிடித்தங்கள், 80C, 80CC, 80D,80U  என பல வகைப்படும்
80-C ன்படி 1,00,000 லட்சம் வரை மட்டும் பிடித்தம் செய்து கொள்ளலாம், இந்த பிடித்தமானது இன்சூரன்சு கட்டணம் (Insurance Premium) , வைப்புத்தொகை (Gratuity), வீட்டுக்கடன் அசல் தொகை, மகள்/மகனின் கல்விக்  கட்டணம், ஓய்வூதிய சேமிப்பு   மற்றும் பல இனங்களை உள்ளடக்கியது.
80-D ன் படி மருத்துவக் காப்பீட்டுக்கு என 15,000 (மூத்த குடிமக்களுக்கு 20,000) பிடித்தம் செய்து கொள்ளலாம்.80-U ன் படி மாற்றுத் திறனாளிகள் 50,000 ( மிக அதிகமான ஊனம் இருந்தால் 1,00,000).
உதாரணம்: X என்பவருடைய ஆண்டு வருமானம் 7,35,000. அவர் செலுத்திய தொகைகள்
தொழில் வரி(Professional tax)    2,700
இன்சூரன்சு கட்டணம்                    30,000
வீட்டு கடன் அசல்                            55,000
வைப்புத்தொகை                              15,000
கல்விக் கட்டணம்                            30,000
ஓய்வூதிய சேமிப்பு                          25,000
மருத்துவக் காப்பீடு                        18,000
இடது கை உனமுற்றவர்.
இவருடைய வருமானத்தைக் கணக்கிடலாம்
X ன் ஆண்டு வருமானம்                       7,35,000
கழிக்க: u/s. 16 தொழில் வரி                        2,700
VI-A Dedutions – 80C
இன்சூரன்சு கட்டணம்                                 30,000
வீட்டு கடன் அசல்                                         55,000
வைப்புத்தொகை                                           15,000
கல்விக் கட்டணம்                                        30,000
ஓய்வூதிய சேமிப்பு                                      25,000
—————-
மொத்தம்                                                       1,55,000
அதிகபட்சம்                                                  1,00,000
மருத்துவக் காப்பீடு   80-D                         18,000
அதிகபட்சம்                                                       15,000
மாற்றுத்திறனாளி      80-U                         50,000
———————–
மொத்த பிடித்தங்கள்                                1,67,700
—————————
ஆண்டு வருமானம்                                    5,67,300
வருமான வரி
5,00,000 லட்சம் வரை                                 30,000
67,300 @ 20%                                                   13,460
————————–
                                                                          43,460
கல்விக் கட்டணம் @ 3%                                   1,303
————————–
மொத்த வரி                                                   44,763
—————————
இவ்வாறு வருமான வரியைக் கணக்கிடலாம்.
http://pettagum.blogspot.com/2017/03/blog-post_77.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

கேஸ் சிலிண்டரை சேமிக்க சிறந்த வழி முறைகள்.

' மாதம் பிறந்தா இதுக்கு அழுதே ஆகணும்னு... ' ஒரு பட்டியல் இருக்கும். அதில் ஒன்ற காஸ் ...

Popular Posts