லேபிள்கள்

ஞாயிறு, 19 அக்டோபர், 2025

டீ பற்றிய சில தகவல்கள்.

காலையில் ஒரு கப் டீ இல்லாமல் ஒரு சிலருக்கு நாளே ஓடாது. உலகின் பல்வேறு பகுதிகளில் பலர் தேநீர் பிரியர்களாக உள்ளனர்.

தேநீர் என்பது பல வீடுகளில் மாலையிலும், காலையில் ஒரு முறையும் கட்டாயம் குடிக்க வேண்டிய பானமாகும். ஐக்கிய நாடுகள் சபையின் படி ஆண்டுதோறும் மே 21 அன்று சர்வதேச தேயிலை தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் டஸ்ட் டீக்கும் முழு இலை தேநீருக்கும் உள்ள வித்தியாசம் குறித்து பார்க்கலாம்.

தேநீர் இரண்டு வகைகளில் வருகிறது: இலைகள் மற்றும் தேநீர் பைகள்.

பெரும்பாலான மக்கள் பாரம்பரிய இலைகள் கலந்த தேநீரை விரும்புகிறார்கள், சிலர் தேநீர் பைகளை விரும்புகிறார்கள். ஒரு கோப்பை சிறந்த தேநீரை எவ்வாறு தயாரிப்பது என்பதில் நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கண்ணோட்டம் இருக்கலாம்.

டஸ்ட் டீ: இது தேயிலையின் மிகக் குறைந்த தரம் ஆகும். இது உடைந்த இலைகளை நசுக்குவதன் மூலம் சேகரிக்கப்படுகிறது. இது சிறிய தேயிலை துகள்களை மட்டுமே விட்டுச்செல்கிறது. அதன் சுவை பொதுவாக திரும்பத் திரும்பக் குடுக்கும்போது நீடிக்காது.

முழு இலை தேநீர்: 'முழு இலை தேநீர்' என்பது, அப்படியே, சேதமடையாத இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் தேநீரைக் குறிக்கிறது. டஸ்ட் டீ என்றும் அழைக்கப்படும் தேயிலை பைகள், விரைவாக காய்ச்சுவதற்கு வடிவமைக்கப்பட்ட சிறிய தேயிலை இலைகள். ஒரு முழு இலையும் பெரிய பரப்பளவைக் கொண்டிருப்பதால், இதனைக் கொண்டு செய்யப்படும் தேநீர் சுவையாகவும், செழுமையாகவும் இருக்கும்.

பொதுவாக, டஸ்ட் டீயை விட முழு இலைத் தேநீரில் சுவை அதிகம். முழு இலை தேநீர், இலை தேநீர்களை விட மிகவும் நுட்பமானதாக இருக்கும். தேநீர் பைகளில் இருந்து தேநீர் குடிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்றாலும், நீங்கள் தேநீர் விரும்பினால், தளர்வான இலை தேநீர் சிறந்தது.

இறுதியில், அது உங்கள் தேவைகளை மட்டுமே சார்ந்துள்ளது. பொதுவாக, விரைவாக தேநீர் தயாரிக்க விரும்பினால் டஸ்ட் டீயே சிறந்த வழி. அதே சமயத்தில் ஆரோக்கிய நன்மைகள், சுவை, பணத்திற்கான மதிப்பு மற்றும் தரம் அனைத்தையும் நீங்கள் விரும்பினால் முழு இலை தேநீர் எப்போதும் சிறந்த தேர்வாகும்.



--

வியாழன், 16 அக்டோபர், 2025

மொபைல் சார்ஜர் நிறத்தின் சீக்ரெட்!

மொபைல் சார்ஜர் வெள்ளை நிறம் அல்லது கருப்பு நிறமாக தான் பெரும்பாலும் இருக்கும். மொபைல் கம்பெனி நினைத்தால் சார்ஜரை வேறு நிறத்தில் வடிவமைக்க முடியும்.

ஆனால் வெள்ளை நிறத்தில் வடிவமைப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. வெள்ளை நிறம் வெப்பத்தை ஈர்க்காது. மேலும் பெரும்பாலான வீடுகளில் வெள்ளை நிற ஸ்விட்ச் போர்டு தான் இருக்கும். அதற்கு பொருத்தமாக வெள்ளை நிற சார்ஜர் தயாரிப்பது வழக்கம்.

குறிப்பாக வெள்ளை நிறத்தை விட கருப்பு நிற சார்ஜர் தயாரிப்பதற்கு செலவு குறைவு தான். ஆனால் கருப்பு நிற சார்ஜர் மிகுந்த வெப்பத்தை ஈர்க்கும். குறிப்பாக கருப்பு நிற சார்ஜரில் சிவப்பு நிறத்தில் reflecting light கொடுத்திருப்பார்கள். இது இருட்டில் சார்ஜர் தெரிய வேண்டும் என்பதற்காகத் தான்.



--

திங்கள், 13 அக்டோபர், 2025

குறைவாகசாப்பிட்டாலும் உடல் எடை குறையவில்லையே என்று கவலைப் படுபவர்களுக்கு சில டிப்ஸ்.

உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கஷ்டப்படுவதை நாம் காண முடிகிறது.

இதனால் பல்வேறு டயட் முறைகளை பின்பற்றி எடை இழப்பு செய்ய முயற்சிக்கின்றனர். ஆனால் உடல் எடையை குறைப்பது எளிதல்ல. உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது என்ன சாப்பிட வேண்டும், என்னென்ன சாப்பிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். டயட் இருக்கும் போது தவறான உணவுகளை உட்கொள்வதால் பசி எடுக்கும், இதனால் உங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியாத நிலை ஏற்படும். எனவே சரியான உணவை தேர்ந்தெடுத்து சாப்பிட்டால், பசி கட்டுக்குள் இருக்கும். இது எடை இழப்பை எளிதாக்கும்.

இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகையில், உடல் எடையை இழந்தவர்களும், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க எண்ணுபவர்களும் தினமும் சில வழிகளை கடைபிடிக்க வேண்டும், அவ்வாறு செய்தால் தான் உடல் சரியான அளவில் அப்படியே இருக்கும். மேலும் உடல் எடையை குறைப்பது எவ்வளவு முக்கியமானதோ அதை விட முக்கியமானது மீண்டும் உடல் எடை ஏறிவிடாமல் பார்த்துக்கொள்வது. அதனால் உடல் எடையை சரியான முறையில் பராமரிப்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

ஊட்டச்சத்து நிபுணர்களின் அறிவுறுத்தலின்படி கீழ்கண்ட மூன்று வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உடல் எடையை சரியான அளவில் பராமரிக்கலாம்.

1) தினசரி 7000 முதல் 8000 ஸ்டெப்ஸ் நீங்கள் நடக்க வேண்டும், அவ்வாறு தினமும் நீங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது உங்கள் உடலில் அழகிய வடிவத்தை பெறும்.

2) உடற்பயிற்சி செய்வதை தினமும் சுழற்சி முறையில் செய்துவர வேண்டும், கிட்டத்தட்ட ஒரு வாரத்தில் நான்கு நாட்களுக்கு நீங்கள் உடற்பயிற்சி செய்யவேண்டும்.

3) மேலும் முறையான உணவுப்பழக்கத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். தினமும் உணவில் 80% ஆரோக்கியமான உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும், 20% உங்களுக்கு தேவைப்படும் ஜங்க் ஃபுட்ஸ்களை உண்ணலாம், இருப்பினும் கூடுமானவரை ஆரோக்கியமான உணவுகளையே உண்ணுங்கள்.



--

வியாழன், 9 அக்டோபர், 2025

இரத்த அழுத்தம்திடீரென அதிகரித்தால் என்ன செய்வது?

உங்கள் இரத்த அழுத்தம் திடீரென உயர்ந்தால், பீதி அடைய வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் இந்த சூழ்நிலையில் பீதி அடைவது உங்கள் ஆரோக்கியத்தை மேலும் மோசமாக்கும்.

அத்தகைய சூழ்நிலையில், பெரிய பிரச்சனை ஏற்படாதவாறு புத்திசாலித்தனமாக வேலை செய்ய வேண்டும். இதுபற்றி ஊட்டச்சத்து நிபுணர் 'நிகில் வாட்ஸ்' சிறந்த டிப்ஸ் கொடுத்திருக்கிறார். அதை பின்பற்றினால் பிபி கட்டுக்குள் இருக்கும். எனவே இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை விரிவாக அறிந்து கொள்வோம்.

1. இடது நாசி வழியாக சுவாசிக்கவும்

நிகில் வாட்ஸ் கூறுகையில், இரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது,   உடனடியாக இடது நாசி வழியாக மூச்சு எடுக்க வேண்டும். இந்தப் பயிற்சியை குறைந்தது 5-7 நிமிடங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். இதன் போது 8 வினாடிகள் மூச்சை உள்ளிழுத்து 10 வினாடிகள் சுவாசிக்கவும். நீங்கள் அதை பின்பற்றினால், முடிவை நீங்களே பார்க்கலாம்.

2. பொட்டாசியம் உணவுகளை உணவில் சேர்க்கவும்

இதனுடன், பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளவும். இது உங்கள் பிபியை கட்டுக்குள் வைத்திருக்கும். அதேபோல் அவகேடோ, கீரை சூப், அன்னாசிப்பழம் சாப்பிடலாம். இது உங்களுக்கு நிம்மதியைத் தரும்.

இந்த டிப்ஸ்கள் மூலம் பிபியும் கட்டுப்படுத்தப்படும்

* இது தவிர, உணவு மற்றும் பானங்களில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உடற்பயிற்சி செய்யாத இத்தகையோர் தினமும் நடைப்பயிற்சியை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இந்த வகையான சிக்கலைத் தவிர்க்க, நீங்கள் இதை முயற்சிக்க வேண்டும்.

* புகைபிடிப்பவர்கள், இந்த பழக்கத்தை படிப்படியாக கைவிட வேண்டும், ஏனெனில் இது உயர் இரத்த அழுத்த பிரச்சினையை கூடுதலாக ஏற்படுத்துகிறது. மேலும், மதுவும் பிபிக்கு நல்லதல்ல. இந்த இரண்டு விஷயங்களிலிருந்தும் நீங்கள் விலகி இருப்பது நன்மை தரும்.

இரத்த அழுத்தத்தின் பொதுவான அறிகுறிகள்

* சுவாசப் பிரச்சனை

* பலவீனம்

* தலைச்சுற்றல் மற்றும் மயக்கம்

* நீர்ச்சத்தின்மை.



--

திங்கள், 6 அக்டோபர், 2025

துணிகளில் படிந்தகறையை எப்படி நீக்கலாம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

துணிகளில் எண்ணெய் கறை கறை படிந்து விட்டால் அதை நீக்குவது மிகவும் கடினமானது.

அதை நீக்காமல் விட்டால் துணியின் அழகையே கெடுத்துவிடும் இந்த கரையை நீக்குவது எப்படி என்று இல்லத்தரசிகள் தெரிந்துகொள்ளவேண்டும். உங்களுக்கு அருமையான குறிப்புகள் இதோ.

கரை படிந்த உடனே இதை செய்யுங்கள்:

ஆடையில் எண்ணெய் கறை படிந்தால் உடனடியாக சுத்தமான துணி அல்லது டிஷ்யூ பேப்பரை எடுத்து கறை பட்ட இடத்தை சுத்தமாக துடைத்து விடுங்கள். எண்ணெய் இருபுறமும் அழுந்தாமல் துடைத்து எடுக்கவும்.

பேக்கிங் சோடா:

பேக்கிங் சோடாவை பயன்படுத்தி கறைகளை எடுக்கலாம். இதை துணிகளை மிஷின் உள்ளே போடுவதற்கு முன்பு உபயோகிக்கவேண்டும். பேக்கிங் சோடாவை கரை படிந்த துணிகளில் தடவி 24 மணி நேரம் அப்படியே வைத்துவிடவேண்டும். ஒரு நாள் முழுக்க கரை மீது வினிகரை தெளித்து தெளித்து விடவும். பின்பு மென்மையான சோப்பு கொண்டு துடைத்து எடுக்கவும். கறை நீங்கி துணி பளபளக்கும்.

சாக் பீஸ்:

துணிகளில் முதலில் எண்ணெய் கறையை துணியால் துடைத்து எடுத்துவிட்டு குழந்தைகள் பயன்படுத்தும் வெள்ளை சாக்பீஸ் எடுத்துக்கொண்டு கறையில் சில வினாடிகள் தேய்த்தால் கறைகள் மறையும். இதற்கு பதிலாக பதிலாக சுண்ணாம்பு இருந்தால் பயன்படுத்தலாம். பின்னர் சோப்பு போட்டு துணியை துவைக்கவும்.

பேபி பவுடர்:

கறை இருந்த இடத்தை துடைத்து விட்டு விட்டு அதில், பேபி பவுடர் எடுத்து கறையின் மீது சில நிமிடங்கள் போட்டால் அதன்மீது ஒட்டிக்கொள்ளும். பின்னர் சிறிது நேரம் கழித்து கைகளால் உருட்டி அழுக்குகளோடு பவுடர் வெளியே வரும். இதுவரை இல்லாத அளவுக்கு துணி பளிச்சிடும்.

டூத் பேஸ்ட்:

டூத் பேஸ்ட் ஆடையில் உள்ள கறைகளை நீக்க உதவும். முதலில் துணியில் கறை படிந்த இடத்தில் தடவி விடவும். பிறகு வெந்நீரை மெதுவாக துணி மீதுள்ள டூத் பேஸ்ட் மீது ஊற்றவும். உயரமாக கரை மீது படும்படி சிறிது சிறிதாக ஊற்றி வந்தால் கறை கரைந்து வெளிவரும்.

வினிகர்:

வினிகரை வைத்து கறையை வெளியேற்றிவிடலாம். சம அளவு தண்ணீர் எடுத்து அதனுடன் வினிகரை கலந்து தடவினால் துணியில் கறை நீங்கி விடும்.



--

வெள்ளி, 3 அக்டோபர், 2025

ஏசி போட்டாலும்உங்க ரூம் சீக்கிரமா கூல் ஆகலயா..? இந்த டிப்ஸை ஃபாலோபண்ணுங்க…

நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது..

அக்னி நட்சத்திரம் தொடங்கிவிட்டதால் மக்கள் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.. இந்த கடுமையான வெப்பத்தில் குளிர்ச்சியாக இருக்க, கண்டிப்பாக ஏசி என்பது அன்றாட தேவையாகிவிட்டது.. வெப்பநிலை கடுமையாக அதிகரித்துள்ளதால், ஏசியின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் அதிகமாக ஏசியை பயன்படுத்துவதால், மின்சாரக் கட்டணங்கள் மாதந்தோறும் அதிகரித்து வருகின்றன, இது நிச்சயமாக பெரும்பாலான மக்களுக்கு ஒரு கவலைக்குரிய காரணியாகும்.

பெரும்பாலான ஏசிகள் சிறந்த வெப்பநிலை அமைப்பு மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்துவதற்கான மிகவும் மேம்பட்ட அம்சங்களுடன் வருகின்றன, இதன் விளைவாக மின் கட்டணங்கள் உயரும்.

உங்கள் ஏசி வேகமாக வேலை செய்ய உங்கள் அறையை மூடி வைக்க வேண்டும். எனவே, ஏசியை ஆன் செய்யும் போது கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும். ஏதேனும் கதவு திறந்திருந்தால், உங்கள் ஏசி, குளிரூட்டலுக்கு கூடுதல் நேரத்தை எடுத்துக்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன, இது அதிக மின்சார நுகர்வுக்கு வழிவகுக்கும்..

ஏசி வேகமாக குளிர்விக்க, நீங்கள் வழக்கமான இடைவெளியில் பில்டர்களை சுத்தம் செய்ய வேண்டும். எனவே, உங்கள் ஏசி குளிர்ச்சியடையவில்லை என்று நீங்கள் உணர்ந்தால், நீங்கள் உடனடியாக ஏசி பில்டரை சுத்தம் செய்ய வேண்டும், இல்லையெனில் உங்கள் ஏசி அதிக மின்சாரத்தை உட்கொள்ளும்.

ஏசி மற்றும் சீலிங் ஃபேன் ஒன்றாகப் பயன்படுத்தினால் அறையை மிக வேகமாக குளிர்விக்கும் என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால் மின்விசிறியை இயக்குவது, அறை முழுவதும் அனல் காற்றை வீசுவதை இது ஏசியின் குளிர்ந்த காற்றை எதிர்க்கும். எனவே, சிறிது நேரம் ஏசியைப் பயன்படுத்திய பின் அறை குளிர்ச்சியாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், நீங்கள் மின்விசிறியை இயக்கலாம், ஆனால் குறைந்த வேகத்தில். இது அறை முழுவதும் குளிர்ந்த காற்றைப் பரப்ப உதவும்.

உங்கள் ஏசி வேகமாக குளிர்ச்சியடைய, குளியலறை அல்லது சமையலறையில் ஏதேனும் எக்ஸாஸ்ட் ஃபேன் இருந்தால், அவற்றை அணைக்க பரிந்துரைக்கப்படுகிறது. அவற்றை ஸ்விட்ச் ஆஃப் செய்வது அறையின் வெப்ப அளவைக் குறைத்து ஏசியை சிறப்பாகச் செயல்படச் செய்யும்.



--

டீ பற்றிய சில தகவல்கள்.

காலையில் ஒரு கப் டீ இல்லாமல் ஒரு சிலருக்கு நாளே ஓடாது. உலகின் பல்வேறு பகுதிகளில் பலர் தேநீர் பிரியர்களாக உள்ளனர். தேநீர் என்பது பல ...

Popular Posts