லேபிள்கள்

சனி, 9 பிப்ரவரி, 2019

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (61 – 70)

மவ்லவி M. றிஸ்கான் முஸ்தீன் மதனீ  

61) சூரதுஸ் ஸப்- அணிவகுப்பு
அத்தியாயம் 61
வசனங்கள்14
இவ்வத்தியாயத்தின் 4வது வசனத்தில் இறைவழிப் போராட்டம் தொடர்பாக குறிப்பிடுகின்றான்.
எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் அணியில் நின்றுஇ அல்லாஹ்வுடைய பாதையை போரிடுகிறார்களோஇ அவர்களை நிச்சயமாக (அல்லாஹ்)நேசிக்கின்றான்.
பினனர் இறைவிசுவாசிகளுடன் ஒரு வியாபாரத்தை பற்றி பேசுகின்றான்.
ஈமான் கொண்டவர்களே! நோவினை செய்யும் வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?
(அது) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொண்டு, உங்கள் பொருள்களையும், உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பதையில் ஜிஹாது(அறப்போர்) செய்வதாகும்; நீங்கள் அறிபவர்களா இருப்பின், இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.
நீங்கள் இந்த வியாபாரத்தை செய்தால் அல்லாஹ்விடம் இருந்து இலாபமாக பின்வருவனவற்றை பெற்றுக் கொள்ளலாம்.
அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான், சுவனபதிகளில் உங்களை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அன்றியும்,நிலையான அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளின் மணம் பொருந்திய இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு; இதுவே மகத்தான பாக்கியமாகும். (61:10-12)
62) சூரதுல் ஜுமுஆ வெள்ளிக் கிழமை
அத்தியாயம் 62
வசனங்கள் 11
வெள்ளிக் கிழமை தினத்தின் மகத்துவம் தொடர்பாக பேசப்படும் அத்தியாயம் இவ்வத்தியாயத்தின் 9வது வசனத்தில் ஜுமுஆ தொழுகையின் முக்கியத்துவம் தொடர்பாகபின்வருமாறு குறிப்பிடுகின்றான்.
ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்துசெல்லுங்கள் நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும். (62:9)
ஜுமுஆ தொழுகை முடிந்ததும் உங்கள் வாழ்வாதாரங்களை தேடி தாரளமாக செல்லுங்கள் என்று அடுத்த வசனத்தில் குறிப்பிடுகின்றான்.
பின்னர்இ (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்.அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள். (62:10)
63) சூரதுல் முனாபிகூன் நயவஞ்சகர்கள்
அத்தியாயம் 63
வசனங்கள் 11
அல்குர்ஆனில் பல இடங்களில் நயவஞ்சகர்களை பற்றி குறிப்பிட்டு அவர்களின் முகத்திரையை அகற்றிய அல்லாஹ் அவர்கள் பெயரிலே ஒரு அத்தியாயத்தை இறக்கி வைத்தான்.
'(நபியே!) முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) உம்மிடம் வந்து, 'நிச்சயமாக, நீர் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றீர்' என்று நாங்கள் சாட்சி சொல்கிறோம்' என்று கூறுகின்றனர்.மேலும், அல்லாஹ், 'நிச்சயமாக நீர் அவனுடைய தூதராக இருக்கின்றீர்' என்பதை நன்கு அறிவான். ஆனால், அல்லாஹ், நிச்சயமாக முனாஃபிக்குகள் (வஞ்சகமாகப்)பொய்யுரைப்பவர்கள்' என்பதாகச் சாட்சி சொல்கிறான். (63:1)
இந்த நயவஞ்சகர்கள் பொய் சொல்லுகின்றனர் என அல்லாஹ் கூறுகின்றான். இவர்களுக்கு ஏன் இந்த நிலமை ஏற்பட்டது என்பதை பற்றி அல்லாஹ் பின்வருமாறுகுறிப்பிடுகின்றான்.
இது நிச்சயமாக இவர்கள் ஈமான் கொண்டு பின் காஃபிர் ஆகி விட்டதனாலேயாகும். ஆகவே இவர்களின் இதயங்கள் மீது முத்திரையிடப்பட்டு விட்டது. எனவே, அவர்கள் விளங்கிக்கொள்ள மாட்டார்கள். (63:3)
64) சூரதுத் தகாஃபுன்- நஷ்டம்
அத்தியாயம் 64
வசனங்கள் 18
அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு நல்லரங்கள் செய்தவர்களை தவிர மற்றவர்கள் நஷ்டம் அடையும் மறுமை நாளைப் பற்றி இவ்வத்தியாயம் பேசுகின்றது.
ஒன்று திரட்டும் (மறுமை) நாளுக்காக அவன் உங்களை ஒன்று திரட்டும் நாள் அதுவே, (தீயோரை) நஷ்டப்படுத்தும் நாளாகும். ஆனால், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு,ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்கிறாரோ, அவருடைய பாவங்களை அவரை விட்டும் நீக்கி, ஆறுகள் அவற்றின் கீழே ஓடிக் கொண்டிருக்கும் சுவர்க்கச் சோலைகளிலும்அவன் அவரை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றில் என்றென்றும் இருப்பார்கள் இது மகத்தான பாக்கியமாகும். (64:9)
அன்றியும், எவர்கள் நிராகரித்து, நம்முடைய வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்கள் நரகவாசிகளே. அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அது மிகவும்கெட்ட சேருமிடமாகும். (64:10)
65) சூரதுத் தலாக் மணவிலக்கு
அத்தியாயம் 65
வசனங்கள் 12
கணவன் மணைவியாக வாழும் இருவருக்கு மத்தியில் சச்சரவுகள் ஏற்பட்டு தமது குடும்ப வாழ்க்கையை தொடர முடியாத நிர்பந்தம் ஏற்படும் போது மணவிலக்கை (தலாக்)இஸ்லாம் எமக்கு அனுமதி அளித்துள்ளது. இவ்வாரான பிரவின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற சட்டநிலைகளை பற்றி இவ்வத்தியாயத்தின் ஆரம்பப்பகுதிவிபரிக்கின்றது.
நபியே! நீங்கள் பெண்களைத் 'தலாக்' சொல்வீர்களானால் அவர்களின் 'இத்தா'வைக் கணக்கிட ஏற்ற வகையில் (மாதவிடாய் அல்லாத காலங்களில்) தலாக் கூறுங்கள். உங்கள்இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். தவிர, (அப்பெண்கள்) பகிரங்கமான மானக்கேடான (காரியத்)தைச் செய்தாலன்றி அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்துநீங்கள் வெறியேற்றாதீர்கள்; அவர்களும் வெளியேறலாகாது. இவை அல்லாஹ் (விதிக்கும்) வரம்புகள் எவர் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறாரோ, அவர் திடமாகத் தமக்குத்தாமே அநியாயம் செய்து கொள்கிறார்: (ஏனெனில், கூடி வாழ்வதற்காக) இதன் பின்னரும் அல்லாஹ் ஏதாவது ஒரு வழியை உண்டாக்கலாம் என்பதை அறியமாட்டீர். (65:1)
66) சூரதுத் தஹ்ரீம்- விலக்கிக் கொள்ளல்
அத்தியாயம் 66
வசனங்கள் 12
நபி (ஸல்) அவர்கள் தனது அன்பு மனைவி ஸைனப் பின்து ஜஹ்ஷ் (ரழி) அவர்களிடம் தேன் அருந்தினார்கள். இதனை நபியவர்களின் சில மனைவியர்கள் விரும்பாது உங்களிடம்ஏதோ மோசமான வாசனை வீசுகின்றது என்று நபியவர்களை பார்த்து சொன்னதும், தமது மனைமார்களில் சிலரை திருப்திப்படுத்துவதற்காக அல்லாஹ்வால் அனுமதிக்கப்பட்டதேனை நான் இனி குடிக்கமாட்டேன் என்று விலக்கிக் கொண்டார்கள். இச்செயலை கண்டித்து இந்த அத்தியாயத்தை அல்லாஹ் இறக்கியருளினான்.
நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்ககிருபையுடையவன். (66:1)
67) சூரதுல் முல்க் ஆட்சி
அத்தியாயம் 67
வசனங்கள் 30
அல்லாஹ்வின் வல்லமை, ஆட்சி அதிகாரம் தொடர்பாக பேசும் இந்த அத்தியாயம் உலக வாழ்வு மற்றும் மறுமையில் மனிதனின் நிலை என்பற்றை எடுத்தக் காட்டுகின்றது.
எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்;
மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காக படைத்தான்; (மனிதனே) அர்ரஹ்மானின் படைப்பில் குறையை நீர் காணமாட்டீர். பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார்! (அவ்வானங்களில்) ஏதாவது ஓர் பிளவை காண்கிறாயா? (67:1-3)
68) சூரதுல் கலம் எழுதுகோல்
அத்தியாயம் 68
வசனங்கள் 52
எடுதுகோலின் மீது சத்தியம் செய்து இந்த அத்தியாயத்தில் பல முக்கியமான விடயங்களை அல்லாஹ் ஞாபகப்படுத்துகிறான்.
எனவே, (சன்மார்க்கத்தைப்) பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் வழிபடாதீர்.
(சன்மார்க்க போதனையை) நீர் தளர்த்தினால், தாங்களும் தளர்ந்து போகலாம் என்று அவர்கள் விரும்புகின்றனர்.
அன்றியும், இழிவானவனான அதிகம் சத்தியம் செய்யும் ஒவ்வொருவனுக்கும் நீர் வழிபடாதீர்;
(அத்தகையவன்) குறைகூறித்திரிபவன், கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன். (68:8-11)
69) சூரதுல் ஹாக்கா நிகழக்கூடியது
அத்தியாயம் 69
வசனங்கள் 52
நிச்சியமாக நிகழ்ந்தே ஆகக்கூடிய மறுமை நாளை பொய்ப்பித்த சமுதாயங்கள் தொடர்பாகவும் அவர்களுக்கு ஏற்பட்ட அழிவுகள் பற்றியும் இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில்ஞாபகப்படுத்துகின்றான்.
மேலும் அந்த நாளில் நிகழும் அதிசய சம்பவங்கள், மனித அவலங்கள் என்பற்றையும் குறிப்பிடுகின்றான்.
ஆயினும், (அதைப்) பொய்ப்பிப்பவர்களும் உங்களில் இருக்கின்றார்கள் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.
அன்றியும், நிச்சயமாக அது காஃபிர்களுக்கு கைசேதமாக இருக்கிறது.
மேலும், அது நிச்சயமாக உறுதியான உண்மையாகும்.
ஆகவே, மகத்தான உம்முடைய இறைவனின் திருப்பெயரைக் கொண்டு (துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக.(69:49-52)
70) சூரதுல் மஆரிஜ் சிறப்புக்கள்
அத்தியாயம் 70
வசனங்கள் 42
மறுமையின் அமலிதுமலிகள் தொடர்பாக பேசும் இந்த அத்தியாயத்தின் ஆரம்பம் நிராகரிப்போருக்கு நிகழக் கூடிய தண்டனை குறித்து அவர்கள் கேட்கின்றனர்.சிறப்புக்களுடைய அல்லாஹ்விடம் இருந்து அந்த தண்டனையை தடுப்பன் எவரும் இல்லை என்று பிரச்தாபிக்கின்றான்.
மேலும் இந்த அத்தியாயத்தின் நடுப்பகுதியில் மனிதனின் நிலை குறித்து இறைவன் பேசுகின்றான்.
நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்.
அவனை ஒரு கெடுதி தொட்டுவிட்டால் பதறுகிறான்.
ஆனால் அவனை ஒரு நன்மை தொடுமானால் (அது பிறருக்கும் கிடைக்காதவாறு) தடுத்துக்கொள்கிறான்.
தொழுகையாளிகளைத் தவிர (70:19-22)
பின்னர் தொழுகையாளிகளின் பண்புகளை பட்டியலிடுகின்றான்.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா - 1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்பட...

Popular Posts