லேபிள்கள்

திங்கள், 23 அக்டோபர், 2017

மல்டிபிள் பலன்கள் தரும் 10 எண்ணெய்கள்

மல்டிபிள் பலன்கள் தரும் 10 எண்ணெய்கள்
எண்ணெய்கள்
லைவலி, காய்ச்சல் என்றால் மாத்திரை எடுத்துக்கொள்கிறோம். ஆனால், அதற்கான காரணத்தை கண்டறிந்து சிகிச்சை எடுப்பது இல்லை. ஒரு மருத்துவம், உடலுக்கும் மனதுக்கும் சேர்ந்து சிகிச்சை அளித்தால் எப்படி இருக்கும்? நறுமண எண்ணெய் சிகிச்சை இதைச் செய்கிறது. மனதையும் உடலையும் ஒருநிலைப்படுத்தி பிரச்னைக்குத் தீர்வு காண உதவுகிறது நறுமண சிகிச்சை.
  மூக்கில், உள்ள சிறு முடிகள் (Cillia) வாசனையை உள்வாங்கி மூளைக்கு அனுப்பும். மூளையானது மற்ற உறுப்புகளுக்குக் கட்டளையிடுவதால் நோய்கள் தீரவும், நோய்களின் தீவிரம் குறையவும் வாய்ப்புகள் அதிகம். பூக்கள், பழங்கள், மூலிகைகள் போன்றவற்றை நுகர்ந்தோ, அதைச் சருமத்தில் பூசியோ நற்பலன்களைப் பெற முடியும்.


லெமன் எண்ணெய் (Lemon oil)
  – 25கி ரூ85

புண், மரு சரியாகும்.
சிறந்த கிளென்ஸர். சருமத்தின் உட்புறத் தோலில் உள்ள அழுக்கைச் சுத்தம்செய்யக்கூடியது.
உடலில் உள்ள செல்களுக்குப் புத்துயிர் தரக்கூடியது. பாதித்த செல்களை இயல்பாக்கும்.
சென்சிட்டிவ் சருமத்தினருக்கு மட்டும் எரிச்சல் கொடுக்கலாம். மற்ற அனைத்துச் சருமத்தினருக்கும் ஏற்ற எண்ணெய் இது.
முகத்தில் வரக்கூடிய கரும்புள்ளிகளைக் குணமாக்கும்.
முகத்தைப் புத்துணர்வாக்கும்.

லாவெண்டர் எண்ணெய் (Lavender oil)  – 25கி  ரூ350
ஐந்து நிமிடங்கள் சுவாசித்தால் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.
பூச்சிக்கடி, சரும நோய்கள் சரியாகும்.
நகம் உடையும் பிரச்னை இருப்பின், நகத்தைச் சுற்றி தடவி வர நகங்கள் ஆரோக்கியமாகும்.
பாத வெடிப்புகளைக் குணமாக்கும்.

இஞ்சி எண்ணெய் (Ginger oil) – 25கி  ரூ450
[You must be registered and logged in to see this image.]
உடலில் சேரும் கொழுப்பைத் தடுக்கும். மலமிளக்கியாகவும் செயல்படும்.
தொப்பை இருப்பவர்கள், இந்த எண்ணெயைத் தடவி மசாஜ் செய்துவர கொழுப்பைக் கரைக்க உதவும்.
செல்லுலாயிட் என்ற கொழுப்பு, சருமத்தில் எங்கு வேண்டுமானாலும் படியலாம். அதைக் கரைக்கும்.
வெந்நீரில் இரண்டு சொட்டுகள் விட்டு வாய் கொப்பளித்தால், தொண்டைவலி, வறட்டு இருமல் குணமாகும்.

யூகலிப்டிக்ஸ் எண்ணெய் (Eucalyptics oil) –
  25கி  ரூ125
மூக்கடைப்பு, தலைவலி, நீர் கோத்தல், சைனஸ் பிரச்னைக்கு நிவாரணம் அளிக்கும்.
மனச்சோர்வு நேரத்தில்,
  இந்த எண்ணெயைப் பஞ்சில் நனைத்து, ஐந்து நிமிடங்கள் சுவாசிக்கலாம்.
தலைமுடியில் துர்நாற்றம் வீசும், பிரச்னையைப் போக்கும்.
சுவாசப் பாதைகளில் உள்ள பிரச்னைகளைச் சரிசெய்யும்.
தலைவலி, தலை பாரம் தீரும்.

பெப்பர்மின்ட் எண்ணெய் (Peppermint oil) 25கி  ரூ70
மென்தால் இருப்பதால், சுவாசப் பாதையில் உள்ள அடைப்புகள் நீங்கும்.
சருமத்தில் அடைபட்டிருக்கும் அழுக்கைப் போக்கும்.
கை, கால்கள் போன்ற இடங்களில் திடீர் வீக்கம் வரும்போது, இந்த எண்ணெயைத் தடவி மசாஜ் கொடுக்கையில் வலி நீங்கும்.

மிளகு எண்ணெய் (Black pepper oil) – 25கி  ரூ500
மூட்டுவலி, முடக்குவாதம், எலும்புருக்கியால் ஏற்படும் வலிக்கு நிவாரணியாகச் செயல்படும்.
சிறந்த வலி நிவாரணி. உடனடியாக வலி குறையும்.
ஒற்றைத் தலைவலி, இடுப்பு வலி சரியாகும்.
மாதவிடாய் சுழற்சி சரியாக இல்லாதோருக்கு, இந்த எண்ணெயைத் தடவி மசாஜ் கொடுத்துவர மாதவிலக்கு சீராகும்.

ரோஸ்மெரி எண்ணெய் (Rosemary oil) – 25கி
 ரூ200
கூந்தலுக்கு கிளென்ஸராகச் செயல்படும்.
பொடுகு நீங்கும். கூந்தல் வளர உதவும்.
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது, இரண்டு சொட்டு ரோஸ்மெரி எண்ணெய்விட்டு குளித்தால், கூந்தல் பளபளப்புடன், ஃபிரெஷ்ஷாக இருக்கும்.
ரோஸ்மெரியைப் பயன்படுத்தும் அளவு மிகவும் முக்கியம். தெரப்பிஸ்ட் பரிந்துரைத்த அளவைத் தாண்டினால், வலிப்பு நோய் வரலாம்.
குளிக்கும் நீர், ஃபேஷியல் கலவை, கூந்தலில் தடவும் எண்ணெயோடு இரண்டு சொட்டுகள் ரோஸ்மெரி எண்ணெயைக் கலந்திட இரட்டிப்புப் பலன்களைப் பெற முடியும்.

டீ ட்ரீ எண்ணெய் (Tea Tree oil) 25கி
 ரூ200
ஆன்டிசெப்ட்டிக்காக பயன்படும். முகப்பருக்கள், எண்ணெய் வழிதல், பொடுகு, படை, தேமல், அலர்ஜி, பூச்சிக்கடி, கொப்புளங்களுக்கு மருந்தாகச் செயல்படும்.
காயங்களை சுத்தப்படுத்தி சுகாதாரமாக வைக்க உதவும்.
அக்கி, அம்மைத் தழும்புகள் சரியாகும்.
சிடர்வுட் எண்ணெய் (Ciderwood oil) – 25கி
 ரூ50
தேவதாரூ என்ற மூலிகையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் இது. பார்க்கத் தெளிவாகவும், எடை குறைந்தும் இருக்கும்.
சருமத்தில் ஆன்டிசெப்டிக்காகச் செயல்பட்டு, தொற்றுகளை நீக்கும். சருமத்தை மிருதுவாக்கி ஆரோக்கியமாக்கும்.
கால், முழங்காலில் நீர் கோத்து மூட்டுக்கள் வீங்கும் பிரச்னைக்கு
  நல்ல தீர்வு.
பிசுக்கான பொடுகு, எண்ணெய் வழிதல் பிரச்னையைப் போக்கும்.
முகப்பரு, அரிப்பு, சொரி போன்ற சருமத் தொல்லைகளை நீக்கும்.

ஸ்வீட் ஆரஞ்சு எண்ணெய் (Sweet orange oil) 25கி
 ரூ125
கிளென்ஸராகச் செயல்படும். முகத்தில் வழியும் எண்ணெய்ப் பசையை நீக்கும்.
ஆரஞ்சின் தோலில் இருந்து எடுக்கக்கூடிய எண்ணெய் ஒரு மூட் க்ரியேட்டராகச் செயல்படும்.
மாணவர்களுக்கு, கவனக்குறைவு, சோர்வான உணர்வு இருப்பின், கைக்குட்டையில் இரண்டு சொட்டுகள் விட்டு, அவ்வப்போது நுகர்ந்தால் நல்ல பலன் தெரியும்.
சோர்வைப் போக்கும். வீட்டில் இரண்டு சொட்டுகள் விட்டால், இந்த வாசனை மனதை ரம்மியமாக்கும்.
சரும துர்நாற்றத்தைப் போக்கும்.
வயதானவர்களின் மனநிலையை உற்சாகமாக்க இந்த எண்ணெய் உதவியாக இருக்கும்
http://www.tamilyes.com/t53241-10

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

கேஸ் சிலிண்டரை சேமிக்க சிறந்த வழி முறைகள்.

' மாதம் பிறந்தா இதுக்கு அழுதே ஆகணும்னு... ' ஒரு பட்டியல் இருக்கும். அதில் ஒன்ற காஸ் ...

Popular Posts