Sunday, November 27, 2016

'மனித உறவுகள் மேம்பட' இதோ சில எளிய வழிகள்:!

சமீபத்தில் படித்த புத்தகம் ஒன்றில், 'மனித உறவுகள் மேம்பட' என்ற தலைப்பில் கொடுத்திருந்த அறிவுரைகள், அற்புதமாக இருந்தன.
குடும்பம் மற்றும் அலுவலகத்தில் மனித உறவுகளில் விரிசல் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்கவும், இதோ சில எளிய வழிகள்:
* நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.

* அர்த்தமில்லாமலும், தேவையில்லாமலும், பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டே இருப்பதை தவிருங்கள்.

* எந்த விஷயத்தையும், பிரச்னையையும் நாசூக்காகக் கையாளுங்கள்.

* விட்டுக் கொடுங்கள்.

* சில நேரங்களில், சில சங்கடங்களை சகித்து தான் ஆக வேண்டும் என்று உணருங்கள்.

* நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று கடைசி வரை வாதாடாதீர்கள்.

* குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.

* உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல், இங்கே கேட்டதை, அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை, இங்கே சொல்வதையும் விடுங்கள்.

* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து, கர்வப்படாதீர்கள்.

* அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய், ஆசைப்படாதீர்கள்.

* எல்லாரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

* கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்.

* அற்ப விஷயங்களையும் பெரிதுபடுத்தாதீர்கள்.

* உங்கள் கருத்துகளில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.

* மற்றவர் கருத்துக்களை, செயல்களை, நடக்கிற நிகழ்ச்சிகளை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.

* மற்றவர்களுக்கு உரிய மரியாதையைக் காட்டவும், இனிய, இதமான சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள்.

* புன்முறுவல் காட்டவும், சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள்.

* பேச்சிலும், நடத்தையிலும், திமிர்தனத்தையும், தேவையில்லாத மிடுக்கு காட்டுவதைத் தவிர்த்து, அடக்கத்தையும், பண்பாட்டையும் கடைபிடியுங்கள்.

* பிணக்கு ஏற்படும்போது, அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல், நீங்களே பேச்சைத் துவங்க முன் வாருங்கள்.

* தேவையான இடங்களில் நன்றியையும், பாராட்டையும் சொல்ல மறக்காதீர்கள். பாராட்டுக்கு மயங்காத மனிதனே இல்லை; அதுவே, உங்களுக்கு வெற்றியாக அமையும்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

No comments: