லேபிள்கள்

வியாழன், 3 நவம்பர், 2016

சின்ன சின்ன பயிற்சிகள்... கண்களை பாதுகாக்கலாம்!

 குளிர்கால கண்நோய்கள்
தமிழகத்தில் அக்டோபர்  டிசம்பர் மாதங்களில் உள்ள குளிரோட்டமான சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு  'அடினோ வைரஸ்' பரவ ஆரம்பிக்கிறது. கண்களில் இருக்கும் வெள்ளைப் பாகத்தை அடினோ வைரஸ் தாக்குவதால், கண்  சிவந்து போகும். சுத்தமில்லாத கைகளால் கண்களைத் தேய்ப்பதும், அழுக்கு தோய்ந்தக் கைக்குட்டைகளைவைத்து, கண்களை அழுத்தி துடைப்பதும்தான். மெட்ராஸ் ஐ வரக் காரணம். காஜல், கண் மை என ஒன்றை ஒரே குடும்பத்தில் அனைவரும் பயன் படுத்தினாலும் கண்களில் பிரச்னை வரும்.

 நாற்பதைத் தாண்டினால் வெள்ளெழுத்து ஏன்?
நமது கண் ஒருகாமிரா போலதான். நமது கண்ணுக்குள் லென்ஸ் இருக்கும். நாம் கண்களை அசைக்கும் போது, லென்ஸ் சுருங்கி விரியும். வயதாகும் போது லென்ஸ் கடினத்தன்மை அடைவதால், வெள்ளெழுத்து ஏற்படுகிறது.

 டி.வி பார்ப்பதால் கண் பாதிப்பு வருமா?
கண் சிமிட்டாமல் டி.வியை உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தால், கண் பிரச்னை வரும். டி.வி, கூர்ந்து கவனிக்கச் செய்யாத அளவுக்குப் பெரிதாக இருக்க வேண்டும். நாற்காலியில் நன்றாக சாய்ந்து உட்கார்ந்து, முகவாயை சற்று நிமிர்த்தி, இமைகள் கீழே இருக்குமாறு  டி.வி பார்க்க வேண்டும். இருட்டில் டி.வி பார்க்கக் கூடாது. கண்கள் சோர்வடைந்து போகும்.

 புரை (Cataract) எல்லோருக்கும் வருமா?
ஒரு பொருளின் பிம்பம் நமது கண்ணில் உள்ள லென்ஸ் வழியாக, விழித்திரையில் பதியும். விழித்திரையில் பதியும் பிம்பம், மூளைக்குச் சென்று, மூளையின் மூலமாகவே  நாம் பார்க்கிறோம். கண்களில் உள்ள லென்ஸ் சுத்தமாக இருந்தால் மட்டுமே ஒளிக்கதிர் எளிதாக ஊடுருவி, நாம் பார்க்க முடியும். வயதாகும்போது சிலருக்குக் கண்களில் உள்ள லென்ஸ் பகுதியில், பழுப்பு நிறத் திட்டுகள் படிய ஆரம்பிக்கின்றன. தலை முடியில் நரை ஏற்படுவது போலதான், லென்சில் ஏற்படும் நிறமாற்றமும். வைட்டமின், புரதச்சத்து குறைபாடுகளாலும், நீரிழிவு நோய், தொற்றுநோய், கண்களில் ஏற்படும் காயங்கள், விஷத்தன்மை வாய்ந்த சில வகை மருந்துகள் உட்கொள்வதன் காரணமாகவும் காட்ராக்ட் வர வாய்ப்புள்ளது. பெண்களுக்குத் தட்டம்மை நோய் ஏற்பட்டிருந்தால், அவர்களது குழந்தைகளுக்கு காட்ராக்ட் வர வாய்ப்புள்ளது. சாலை விபத்துக்கள், விளையாடும்போது ஏற்படும் விபத்துகள் காட்ராக்டை ஏற்படுத்தலாம்.  

 சர்க்கரை நோய் கண்களை பாதிக்கும்
சர்க்கரை நோய் கண்களில் உள்ள நரம்புகளையும், தசைகளையும் பாதிக்கும். இதனால் கண்களை அசைக்கவே சிரமம் ஏற்படும். சர்க்கரை நோய் விழித்திரையை பாதித்தால் 'டயபடிக் ரெட்டினோபதி' பிரச்னை ஏற்பட்டு, பார்வை இழப்பு ஏற்படலாம். கண்களில் உள்ள விழித்திரையில் நிறைய இரத்தக் குழாய்கள்  உண்டு. சர்க்கரை நோய் இந்த சிறிய இரத்தக் குழாய்களையும் பாதிக்கும். இதனால் விழித்திரையில் நீர் ஆல்லது ரத்தம் கசிந்து, மூளையில் உருவம் பதியாததால், பார்வை இழப்பு ஏற்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

 கண் பயிற்சிகள்
  பால்மிங் (Palming)   ஒரு நாற்காலியில் கையின் முட்டி தொடையில் படுமாறு உட்காரவும். வலது கையால் வலது கண்ணையும், இடது கையால் இடது கண்ணையும் மூடிக்கொண்டு, சந்தோஷம்தரும் பழைய தருணங்களை நினைத்துப்பார்க்கவும். 10 நிமிடங்கள் என தினமும் மூன்றுமுறை இந்தப் பயிற்சியை செய்யலாம்.
  ஸ்விங்கிங் (Swinging)  இரண்டு கால்களுக்கு இடையே சிறிதளவு இடைவெளி விட்டு நிற்கவேண்டும். பிறகு குதிகாலை லேசாகத் தூக்கி,  கடிகாரத்தின் பெண்டுலம் போல வலப்பக்கமும் இடப்பக்கமும் தொடர்ந்து அசையவும். இடுப்பை வளைக்கக் கூடாது. அசையும் போது எதிர்ப்பக்கம் தெரியும் ஏதேனும் ஒரு பொருளை நன்றாகக் கவனிக்கவும். நீங்கள் அசையாமல் அந்தப் பொருள் அசைவது போல தோன்றும். பிறகு, கண்களை ரிலாக்ஸாக  மூடிக்கொண்டு, மீண்டும் அசையவும். ஏற்கனவே பார்த்த அந்த பொருளை நினைத்துப் பார்க்கவும்.
  கண்களை வட்டமாக சுழற்றுங்கள். பின்னர் மீண்டும் அதற்கு நேர்மாறான திசையில் வட்டமாகச் சுழற்றுங்கள். இந்தப் பயிற்சியை தினமும் நான்கு முறை செய்யுங்கள்.
  நேராக நின்றுகொள்ளுங்கள். முகத்தைத் திருப்பாமல், இரு கண்களையும் முதலில் வலது புறமாகத் திருப்பவும். பிறகு இடதுபுறமாகத் திருப்பவும். இந்தப் பயிற்சியை ஆறு முறை செய்யவும்.
  ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 20 25 தடவை கண் சிமிட்டவும். சீரான இடைவேளையில் கண் சிமிட்டினால் பார்வை தெளிவாகும். கண் அயர்வு நீங்கும்.
  தினமும் மூன்று முறை குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவவும். கைகளில் சிறிதளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு, கண்ணிற்கு இரண்டு அங்குல தொலைவில் கைகளை வைத்து, தண்ணீரைத் தெளிக்கவும். தொடர்ந்து 20 முறை இவ்வாறு செய்யலாம்
  பச்சை கேரட், பீட்ரூட், பப்பாளி, முருங்கைக் கீரை, பால், தயிர், மீன், முட்டை உணவுகளைச் சாப்பிடுவது கண்களுக்கு நல்லது.
  செல்போன், டி.வி, கம்ப்யூட்டர் ஆகியவற்றை இருட்டில் பார்ப்பதும் தவறுதான்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

உங்கள் பைக்கை நீங்களே பராமரிக்க உதவும் சில முக்கிய டிப்ஸ்கள்.

  மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்களுக்கு அதை பற்றிய அனைத்து விவரங்கள் மற்றும் எப்படி ரிப்பேர் செய்வது என்பது தெரிந்திருக்க வேண்டும் என்ற அவ...

Popular Posts