லேபிள்கள்

புதன், 11 மே, 2016

காட்டன் டிரெஸ் டிப்ஸ்


புதிய காட்டன் புடவையை முதல் முறை துவைக்கும் முன்னர், ஒரு பக்கெட் தண்ணீரில் ஒரு கை கல் உப்பு சேர்த்து, அதில் புடவையை பதினைந்து நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். இதனால் புடவையில் சாயம் போவது, நிறம் மங்குவது போன்ற பிரச்னை இருக்காது.

காட்டன் புடவைகளை, ஒவ்வொரு முறையும் துவைத்த பின்னர், நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் புங்கன்கொட்டைகளை, தண்ணீரில் ஊறவைத்து, இந்தத் தண்ணீரில் காட்டன் புடவைகளை முக்கி எடுத்தால் புடவை கண்டிஷனர் போட்டதுபோல், ஃபிரெஷ்ஷாக இருக்கும்.

காட்டன் புடவைகள் நிறம் மங்காமல் இருக்க, கட்டாயம் நிழலில்தான் உலர்த்த வேண்டும். உலர்ந்ததும் கையுடன் அயர்ன் பண்ணிவிட்டால், புடவையின் ஓரங்களின் ஏற்படக்கூடிய நிரந்தர சுருக்கத்தை தடுக்கலாம்.

கடைகளில் கிடைக்கும், திரவ நிலையில் இருக்கக் கூடிய புடவைக் கஞ்சியை, பக்கெட் நீரில் தேவையான அளவில் ஊற்றி, அதில் காட்டன் புடவையை முக்கி எடுத்து உலர்த்தினால், புடவை தொய்ந்து போகாமல், நன்கு முடமுடப்பாக இருக்கும்.

புடவைக் கஞ்சியை வீட்டிலேயே தயாரித்துக்கொள்ளலாம். ஒரு டீஸ்பூன் சோள மாவுக்கு, இரண்டு கப் தண்ணீர் எனும் விகிதத்தில், இரண்டையும் கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைத்துக்கொண்டு தேவையானபோது உபயோகிக்கலாம்.
http://pettagum.blogspot.in/2014/07/blog-post_9684.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

உடலில் இரத்தம் குறைவாக இருந்தால் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்.

இரத்த சோகை காரணமாக உடல் மிகவும் பலவீனமாக தோன்றும். எப்போதும் சோர்வாக இருக்கும். அடிக்கடி தலைவலி ஏற்படும். உடலில் ரத்தம் குறைவாக இருக்கும்ப...

Popular Posts