லேபிள்கள்

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

கேஸ் விபத்துக்களும், நாம் அறிய வேண்டியவைகளும்…

கேஸ் விபத்துக்களும், நாம் அறிய வேண்டியவைகளும்

LPG சிலின்டர் நாம் வீடுகளில் தற்போது பயம் அற்று பயன் படுத்துகிறோம். ஆனால் முந்தைய காலங்களில் LPG சிலின்டர் என்றாலே பயந்து பயன்படுத்தாமல் இருப்பார்கள் பலர் .காலப்போக்கில் அது பழகிப்போய் இப்போதெல்லாம் எங்கும் காஸ் ஸ்டவ் தான் . அதாவது LPG என்று சொல்லப்படுகிற நீர்ம பெட்ரோலிய வாயு ( Liquefied Petroleum Gasas) தான் நமது வீட்டின் சமையல் அறைகளில் பயன்படுத்தபடுகிறது . ஆனால அவ்வப்போது பல தீ விபத்துக்கள் நடைபெற்று கொன்று தான் இருக்கிறது . குறிப்பாக சில தினங்களுக்கு முன்பு கூடசென்னையில் உள்ள வண்ணாரபேட்டையில் கியாஸ் கசிந்து நான்கு பேர் பலியானார்கள் மேலும் இரண்டு நபர்கள் படுகாயம் அடைந்தார்கள் .இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க நாம் கவனிக்க வேண்டிய விடையங்கள் இருக்கிறது அதனை நாம் இங்கு பார்க்கலாம்
LPG நாம் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய சில காரியங்களை
நாம் பார்க்கலாம் .!!
LPG சிலின்டர் நமது வீட்டிற்கு வரும்பொழுதே , அந்த சிலிண்டரின் ஆயுள் காலத்தை கவனித்த பின்பு தான் வாங்க வேண்டும். சிலிண்டருக்கு ஆயுள் காலம் உண்டா என்றால் உண்டு . கீழ் உள்ள படத்தை பாருங்கள் .
இதுலே D13 இருக்கு, கவனிச்சீங்களா? இதுக்கு என்ன அர்த்தம்?
இது வருஷத்தை நான்காகப் பிரிச்சு நான்காம் கால் பகுதியைக் குறிக்குது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை
இது இந்த சிலிண்டரின் காலாவதியைக் குறிப்பிடும் சொல். அதாவது 2013 டிசம்பர் வரைக்கும்தான் இந்த சிலிண்டருக்கு ஃபிட்னெஸ்(Fitness) இருக்கு. இதுக்கப்புறம் அதுலே உள்ள பாகங்கள் ஏதாவது பழுதடையும் வாய்ப்பு இருக்கு. பயன்படுத்தக்கூடாது என்ற எச்சரிக்கை.
காலாவதியானவைகளை இன்னொருமுறை அதுக்குண்டான பரிசோதனைகளைச் செய்து சரியாக்கி மறுபடி புது அட்டையுடன் பயனுக்கு விடலாம்
சிலிண்டர் வெடித்து மரணம் என்றெல்லாம் பத்திரிக்கைச் செய்தி வர்றதை நாமும் எத்தனை முறை வாசிச்சு இருக்கோம்.
இதுவரை இப்படி சிலிண்டருக்கு ஒரு காலாவதி இருக்குன்னு எனக்குத் தெரியவே தெரியாது. உங்களில் சிலருக்குத் தெரியாம இருந்திருக்கலாம்.
சரி, எப்போ இது காலாவதின்னு தெரிந்துகொள்ளுவது ?
இங்கே பாருங்க எப்படின்னு ஒரு சுலப வழி.
The alphabets stand for quarters -
A
என்பது மார்ச் (முதல் காலாண்டு)
B
என்பது ஜூன் (இரண்டாம் காலாண்டு)
C
என்பது செப்டம்பர் (மூன்றாம் காலாண்டு)
D
என்பது டிசம்பர் (நான்காம் காலாண்டு)
சிலிண்டரின் ஆயுள் காலம் அந்த சிலிண்டருக்கு மேல் குறிப்பிடபடி எழுதப்பட்டிருக்கும் .
உதாரணமாக D-13 என்று இருந்தால் டிசம்பர் 2013 என்று அர்த்தம்
இதில் 4 ஆங்கில எழுத்துகள் (A, B, C, D) என்று வரும் . இந்த நான்கு எழுத்துகளும் முதல் காலாண்டு (மார்ச் வரை) , இரண்டாம் காலாண்டு ( ஜூன் வரை) , மூன்றாம் காலாண்டு (செப்டம்பர் வரை), நான்காம் காலாண்டு (டிசம்பர் வரை) என்று பொருள்படும் . தொடர்ந்து எழுதபட்டிருக்கும் இரண்டு எண்களும் வருடத்தை குறிக்கும் .
பொதுவாக LPG வாயுவுக்கு மணம் கிடையாது. ஆனால் ஏதும் கசிவு ஏற்பட்டுளதா என்பதை கண்டுகொள்ள தான் அதனுடன் மணம் உண்டு பண்ணும் காரணிகள் சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் ஏதேனும் LPG மணம் ஏற்பட்டால் உடனடியாக எந்த மின்சார இணைப்புகளும் கொடுக்க கூடாது. ஏன் எனில் அதன் மூலம் எளிதில் தீ பிடிக்க வாய்ப்புண்டு .
பொதுவாக LPG, சாதாரண காற்றை விட அடர்த்தியாக உள்ள காரணத்தினால் , ஏதேனும் கசிவு ஏற்பட்டால் தரையை ஒட்டி தான் பரவி காணப்படும் . அதனால் தரை பகுதியில் நல்ல காற்றோட்டம் உருவாகும் படி எல்லா கதவுகளையும் (கசிவு ஏற்பட்டால்) திறந்து வைப்பது நல்லது .
சிலிண்டர்கள் எப்பொழுதும் நேராக (vertically) தான் வைக்க வேண்டும். படுக்க (Horizontally) வைக்க கூடாது . அதிக அழுத்தத்தில் LPG உள் நிரப்பப்பட்டிருப்பதால் சிலிண்டரின் வால்வில் ஏதாவது பாதிப்பு ஏற்ப்பட்டால் சிலிண்டர் வெகு வேகமாக பின் நோக்கி (Like Rocket) தள்ளப்படும் . அதனால் ஏற்ப்படும் விளைவு மிக மோசமானது .
வீடுகளுக்கு சிலிண்டர் மாற்றும் போது, நமக்கு வர்ற சிலிண்டரில் இந்த விவரத்தைக் கவனிச்சுப் பாருங்க. காலாவதியானதை 'வேணாம்'ன்னு கண்டிப்பாச் சொல்லுங்க. இந்த விவரத்தை நமக்குத் தெரிஞ்சவுங்க, தெரியாதவங்கன்னு இல்லாம கூடியவரை அனைவருக்கும் சொல்லுங்க.
விபத்து, மரணம் இவைகளைத் தடுக்க, ஏதோ நம்மால் ஆன ஒரு காரியம். எதுக்கும் எல்லாரும் அதிகம் கவனமா இருங்க
http://kulasaisulthan.wordpress.com


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

உடலில் இரத்தம் குறைவாக இருந்தால் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்.

இரத்த சோகை காரணமாக உடல் மிகவும் பலவீனமாக தோன்றும். எப்போதும் சோர்வாக இருக்கும். அடிக்கடி தலைவலி ஏற்படும். உடலில் ரத்தம் குறைவாக இருக்கும்ப...

Popular Posts