லேபிள்கள்

திங்கள், 29 ஜூலை, 2013

உங்கள் செல்லக் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக சில தகவல்கள்..

குழந்தைகளின் மொழியை எளிதில் புரிந்து கொள்ள இயலாது. அழுகையும், சிரிப்புமே அதன் பரிபாஷைகள். அதனை உணர்ந்து குழந்தைகளை வளர்ப்பது என்பது தனிக்கலை. குழந்தைகளின் செயல்படுகள் புரியாமல் சில நேரங்களில் தாய்மார்கள் எரிச்சல் அடைவதும் உண்டு. குழந்தைவளர்ப்பு குறித்து குழந்தை நல நிபுணர்கள் தரும் ஆலோசனைகளை தெரிந்து கொள்ளலாம்.

செல்லக் கொஞ்சல்
குழந்தைகள் முதலில் விரும்புவது தாயின் அரவணைப்பைதான். அந்த கதகதப்பு கிடைக்காத பட்சத்தில் அதற்காகவே அழுகையை தொடங்குகிறதாம். எனவே குழந்தை அழும் போது அதனை தூக்கி கொஞ்சினால் குழந்தையானது உடனே அழுகையை நிறுத்திவிடுமாம். அந்த நேரத்தில் குழந்தைக்கு உணவூட்டவோ, தாலாட்டவோ, மசாஜ் செய்யவோ, குளிப்பாட்டவோ செய்யலாம்.
தசைகளை வலுப்படுத்தும்
குழந்தையைத் தூக்கும்போது அதன் முதுகுப் புறமாக அதிகமாகப் பிடித்துத் தூக்கக்கூடாது, அது குழந்தையின் தண்டுவடத்தைப் பாதிக்கும் என்று சிலர் அறிவுரை´ சொல்வார்கள். ஆனால் உண்மையில்லை. பின்னால் பிடித்துத் தூக்குவது குழந்தையின் ரிப்ளெக்ஸ்´ திறனை மேம்படுத்துகிறது. பின்புற மற்றும் கழுத்துத் தசைகளையும், தண்டுவடத்துக்குத் துணையாக உள்ள தசைகளையும் வலுப்படுத்துகிறது
இயல்பாய் பாலூட்டுங்கள்
குழந்தைக்குப் பாலூட்டும்போது அதை மார்பகத்தை நோக்கி அழுத்த வேண்டாம். அஅப்போது குழந்தை அதன் இயல்பின்படி தனது தலையைப் பின்னோக்கித் தள்ளும்.. எனவே கைகளில் லேசாக ஏந்தி அதற்கு ஏற்ற வகையில் பாலூட்டுவதே சிறப்பானது. குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதையும் தடுக்கும். ஒரு சிலர் படுத்துக்கொண்டே பாலூட்டுவார்கள். இது சில சமயங்களில் ஆபாத்தாக முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
வெது வெதுப்பான நீர்
இளந்தாய்மார்கள் பலர் குழந்தையை எப்படி குளிப்பாட்டுவது என்று தெரியாமல் திகைத்துப் போகிறார்கள். அந்நேரத்தில் குழந்தை அழுதால் என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறிப் போகிறார்கள். பெரியவர்கள் அல்லது கணவரின் துணையோடு குழந்தையை குளிப்பாட்டலாம். எப்பொழுதுமே வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்ட வேண்டும். குளித்த பின் மெல்லிய உலர்ந்த துணியை பயன்படுத்தி நன்றாக துடைத்து எடுப்பது நல்லது.
மெல்லிய ஆடைகள்
குழந்தைகளுக்கு காற்றோட்டமான, மெல்லிய துணி ஆடைகளை அணிவிக்கலாம். அது குழந்தை யின் இயல்பான உடல் வெப்பநிலையைப் பராமரிக்க உதவுவதுடன், புற வெப்பநிலையிலிருந்தும் பாதுகாக்கும் குழந்தையின் இடுப்பு ஆடையை உடனுக்குடன் மாற்றத் தவறுவதால் நோய்த் தொற்று ஏற்படலாம். இன்று நவீன டயாப்பர்கள்´ வந்துவிட்டன. குழந்தையின் சருமத்தைச் சுத்தமாகவும், உலர்வாகவும், வாசனையற்றும் வைத்துக்கொள்வது முக்கியம். அது நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கும்.
நேர்மறை எண்ணங்கள்
குழந்தையை தூங்கவைக்க ஒரு சிலர் பகீரத பிரயத்தனம் செய்வர். வெளியே வேடிக்கை காட்டுவது, காரில் அழைத்துச் செல்வது என பணத்தையும், நேரத்தையும் வீணாக்குவார்கள். அது தேவையற்றது என்கின்றனர் நிபுணர்கள். குழந்தையை அதன் சக்கர நாற்காலியில் வைத்து மெதுவாக உருட்டலாம். அப்போது ஏற்படும் மெல்லிய அதிர்வு, நகர்வுக்குக் குழந்தை பழகி தூங்கத் தொடங்கி விடும்.
குழந்தையின் நெற்றி, நெஞ்சு அல்லது பின்புறத்தில் மெதுவாகத் தட்டுவது ஒரு தூண்டலாகச் செயல்பட்டு குழந்தையைத் தூக்கத்தில் ஆழ்த்துகிறது. அப்போது எழும் ஓசையும் பாசிட்டிவ்´வான பலனைத் தருகிறதாம்.
முத்தமிடுங்கள்
குழந்தைக்கு காய்ச்சல் அடிப்பதை உணர தொட்டுப் பார்க்காமல், குழந்தையின் கழுத்தின் பின்புறம் முத்தமிடுவதன்மூலம் அதன் உடல் வெப்பநிலையைத் துல்லியமாக அறியலாம். உடல் சூடாக இருந்தால் நனைத்துப் பிழிந்த துணியை குழந்தையின் தலையில் போடுவதன் மூலம், மருத்துவச் சிகிச்சை அளிக்கும்வரை அதன் உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும். பின்னர் குழந்தை நல மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாம்.

--
*more articles click*
www.sahabudeen.com


சனி, 27 ஜூலை, 2013

அலுவலகத்தில் நீங்கள் பின்பற்றவேண்டிய கட்டளைகள்!

அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் நாம் செய்யும் சிறு சிறு தவறுகள் கூட நம் மன நிம்மதியை கெடுத்துவிடும். சிறப்பான அலுவலக சூழல் ஏற்பட நாம் கண்டிப்பாக பின்பற்றவேண்டிய பத்து வழிமுறைகள் இங்கே உள்ளன. இதனை பின்பற்றினால் அலுவலகத்தில் அனைவரும் விரும்பக்கூடிய சிறந்த மனிதராக நாம் பெயர் எடுக்கலாம். என் அலுவலக அனுபவங்கள் அதற்கு சாட்சி.

நல்ல வேலையை ரகசியமாக தேடுங்கள்!
தற்போது நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் வேலை உங்களுக்கு திருப்தி இல்லாமல் இருக்கலாம். அதில் தவறொன்றும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் விருப்பம் இல்லாமல் ஒரு வேலையை செய்வது என்பது மிகப்பெரிய கொடுமையாகும். ஆனால் நீங்கள் வேறு வேலை தேடிக்கொண்டிருப்பதை பற்றி  அலுவலகத்தில்  மற்றவர்களுடன் விவாதிக்கவேண்டாம். உங்களுக்கு புதிய வேலை கிடைக்காத பட்சத்தில் நீங்கள் பழைய வேலையிலேயே தொடர நேரிடலாம். அப்போது நீங்கள் விருப்பம் இல்லாமல் வேலையில் நீடிக்கிறீர்கள் என்ற விஷயம் அலுவலகம் முழுவதும் தெரிந்திருக்கும். அது உங்கள் மேலதிகாரிகளுக்கும் உங்களுக்கும் இடையே மனக்கசப்பை ஏற்படுத்தலாம். 

கிசுகிசு, வதந்தி வேண்டாம்!
நீங்கள் ஒருநாளைக்கு எட்டு மணி நேரம் அலுவலகத்தில் சக பணியாளர்களுடன் செலவிடுகிறீர்கள். சக பணியாளர்களின் அந்தரங்க தகவல்கள், விருப்பு வெறுப்புகளை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் எக்காரணத்தை முன்னிட்டும் அதனை அலுவலகத்தில் சக பணியாளர்களிடம் அம்பலப்படுத்த வேண்டாம். அலுவலகத்தில் பேசக்கூடிய கிசுகிசு மிகவும் வேகமாக பரவக்கூடியது. முதுகுக்கு பின்னால் பேசக்கூடியவர், நம்பிக்கைக்குரியவர் அல்ல என்று பெயர் எடுப்பதை தவிர்த்துவிடுங்கள்.

செக்ஸ் சப்ஜெக்ட் பேசாதீர்கள்!
செக்ஸ் பற்றிய விஷயங்களை நீங்கள் அலுவலகத்தில் பேச வேண்டாம். செக்ஸ் என்பது உங்களுக்கும், உங்கள் மனைவிக்குமான அந்தரங்கம் என்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருக்கலாம். ஆனாலும் உங்கள் தனிப்பட்ட செக்ஸ் நடவடிக்கைகள் பற்றி அலுவலகத்தில் பேசவேண்டாம்.

மேலதிகாரிகளிடம் புகார் செய்யாதீர்கள்!
நீங்கள்  செய்யும் வேலையில் உங்களுக்கு பல மனக்குறைகள்  இருக்கலாம். ஆனால் அவற்றை அடிக்கடி மேலதிகாரிகளிடம் புகார்களாக எடுத்துச்செல்லாதீர்கள்  அல்லது எதிர்மறையாக விமர்சிக்காதீர்கள். அது நீங்கள் பார்த்துகொண்டிருக்கும் வேலையை மதிக்கவில்லை அல்லது வெறுக்கிறீர்கள் என்ற எண்ணத்தை மேலதிகாரிகளிடம் ஏற்படுத்திவிடும். நீங்கள் செய்யும் வேலையை வெறுக்கிறீர்கள் என்ற எண்ணம் சக ஊழியர்களிடையே அல்லது வாடிக்கையாளர்களிடையே ஏற்படுமானால் அது உங்களின் வளர்ச்சிக்கு தடையாக அமைந்துவிடும். மேலும் உங்களின் மேலதிகாரி உங்களுக்கு பதவிஉயர்வு வழங்க எதிர்ப்பு தெரிவிக்க அது காரணமாக அமைந்துவிடலாம்.

சம்பளம்  உஷ்!அது ரகசியம்!
உங்கள் அலுவலகத்தில் ஒரே மாதிரியான பணி செய்யும் அலுவலர்கள் வெவ்வேறு விதமான ஊதியம் பெறலாம். உங்கள் அலுவலகத்தில் மற்றவர்களைவிட நீங்கள் அதிகமான சம்பளம் பெறுகிறீர்களா? அல்லது குறைவான சம்பளம் பெறுகிறீர்களா? என்பதை பற்றிய விவரம் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அது மற்றவர்களுக்கும் தெரியவேண்டாம். நீங்கள் பெறும் சம்பளம் அதிகமாக இருந்தால் மற்றவர்கள் உங்கள் மீது பொறாமைப்படலாம். மற்றவர்களைவிட குறைவாக இருந்தால் உங்களை ஏளனம் செய்யலாம். எனவே உங்கள் ஊதியத்தை மற்றவர்களிடம் கூறாதீர்கள்.

நிதிநிலைமை பற்றி பேசவேண்டாம்!
ஊதிய விவரம் எவ்வாறு ரகஸியமானதோ, அதைப்போன்று உங்களின் குடும்ப நிதிநிலைமை பற்றியும் அலுவலகத்தில் பேசவேண்டாம். உதாரணமாக குடும்பத்தில் நிதி பிரச்சினை இருந்தால் கூட அதனை உங்கள் குடும்பத்துக்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள். அது உங்களின் பிரச்சினை. அது மற்றவர்களுக்கு தெரியவேண்டியதில்லை. நீங்கள் அவ்வாறு சொல்வதை சக ஊழியர்கள் விரும்பாமல் கூட இருக்கலாம். ஒன்றிரண்டு பேர் உங்களின் நிதிநிலைமை பற்றி அறிந்துகொள்வது உங்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் சக ஊழியர் அனைவருக்கும் தெரிந்தால் அது தேவையில்லாத வதந்திகளையும், கிசுகிசுக்களையும் அலுவலகத்தில் பரப்பிவிடலாம்.

குடும்ப பிரச்சினை அலுவலகத்தில் வேண்டாம்!
உங்களுக்கு குடும்பத்தில் நிறைய பிரச்சினை இருக்கலாம். நீங்கள் எப்போதும் வெறுப்பான மனநிலையில் இருக்கலாம். அல்லது திருப்தி இல்லாமல் இருக்கலாம். உங்கள் பிரச்சினை எதுவாகவும் இருக்கலாம். எந்த பிரச்சினைகளையும் நீங்கள் உங்கள் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் அல்லது மருத்துவர்களுடனும் பேசி தீர்த்துக்கொள்ளுங்கள். அலுவலகத்திற்கு அவற்றை கொண்டுசெல்லாதீர்கள்.

அரசியல் வேண்டாம்!
அரசியல் மக்களை பிரிக்கிறது. அலுவலகத்தில் அரசியல் பற்றிய விவாதங்களில் ஈடுபடாதீர்கள். நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்ற விவரத்தை கூறவேண்டாம். நாளிதழ்களில் வெளியான அரசியல் செய்திகள் குறித்து உங்கள் கருத்துக்களை கூறுதல், சக ஊழியர்களிடம் நீங்கள் வரும் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க போகிறீர்கள் என்று விசாரித்தல் போன்றவைகளை தவிர்த்துவிடுங்கள். சில ஊழியர்கள் அரசியலை உணர்ச்சிபூர்வமாக அணுகக்கூடும். அதே ஊழியர்கள் உங்களின் தினசரி அலுவலகப் பணிகளுக்கு உதவி செய்பவராக இருக்கலாம். உங்களின் அரசியல் கருத்துக்கள் அவரை உங்களிடமிருந்து விலகச்செய்யலாம்.

உணர்ச்சியை பிறரிடம் வெளிப்படுத்தாதீர்கள்!
நீங்கள் ஒவ்வொரு நாளும் அலுவலகத்தில் அதிகமான நேரத்தை செலவிடவேண்டியிருக்கும். வேலைப்பளு மிக அதிகமாக இருக்கலாம். அது உங்களுக்கு மன அழுத்தத்தை தரலாம். ஆனால் அதற்காக மற்றவர்கள் மீது நீங்கள்  கோபத்தைக் காட்டுவதை ஏற்க முடியாது.  உங்களின் உணர்ச்சிகளை அலுவலகத்தில் உள்ளவர்கள் மீது வெளிக்காட்டாதீர்கள். நீங்கள் இன்னும் பல ஆண்டுகள்  அவர்களுடன் பணிபுரிய வேண்டியதிருக்கலாம். ஒரு நாள் கோபம் பல ஆண்டுகள் நல்லுறவை பாதிக்கலாம். மேலும் உங்களுடைய உணர்வு வெளிப்பாடு சக ஊழியர்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடலாம். உங்கள் மீது  தவறான எண்ணங்கள் அலுவலகத்தில் உருவாவது தவிர்க்கப்படவேண்டும்.

--
*more articles click*
www.sahabudeen.com


வியாழன், 25 ஜூலை, 2013

வீட்டில் வேலையே செய்யாமல் தப்பிப்பது எப்படி?

ஆபீஸ்லதான் நச்சு நச்சுன்னு உயிர வாங்குறானுங்கன்னா, வீட்டுக்கு வந்தா சப்பாத்தி சுடு, வெங்காய்த்த வெட்டு, பாத்திரம் கழுவு, டாய்லெட்ட கழுவுன்னு பெரிய கொடுமையா இருக்குன்னு நம்ம சிரிப்பு போலீஸ் ரமேஷ் கண்ணுல தண்ணி வெச்சிட்டார்....  அவருக்கு சிலபல ஐடியாக்கள் கொடுத்து இப்போ அவர கொஞ்சம் தெம்பா நடமாட விட்டிருக்கோம். அதே மாதிரி நாட்ல பல பேர் இருக்காங்க, அதுனால அவங்களுக்கும் பயன்படனும்னு சொல்லி அத ஒரு பதிவா போடுங்கன்னு அவர் கால்ல விழுந்து கெஞ்சுனதால இப்போ இந்த பதிவு.

1. வீட்டுக்கு ஆபீஸ்ல இருந்து போகும் போது எல்லாம் கைல ஏதாச்சும் ஆபீஸ் டாகுமெண்ட்ஸ் எடுத்து வெச்சுக்குங்க. அதுக்காக முக்கியமான டாகுமெண்ட எடுத்துட்டு போயி அதுல ரசம் கொட்டி டேமேஜர்கிட்ட வாங்கிக்கட்டிக்க வேணாம். ஏதாச்சும் கிழிச்சிப்போட வேண்டிய பேப்பர்ஸ் இருந்தா அத எடுத்துட்டு போனா போதும்.  வீட்டுக்கு வந்த உடனே அந்த பேப்பர்களை போட்டு சும்மா பொரட்டிக்கிட்டு இருங்க. அத பார்த்தாவே போதும், வீட்டம்மா உங்க பக்கத்துல கூட வரமாட்டாங்க. கில்மா பார்ட்டீஸ் ஏதாச்சும் கிளுகிளு கதைகளை பிரிண்ட் பண்ணி எடுத்துட்டு போய் ஆபீஸ் டாகுமெண்ட்ஸ் நடுவுல வெச்சிப் படிக்கலாம். ஆனா எக்குத்தப்பா மாட்டிக்கிட்டா அப்புறம் நிர்வாகம் பொறுப்பல்ல.

2. வீட்டுக்கு போன உடனே கம்ப்யூட்டர்ல போய் உக்காந்துடுங்க. ரெண்டு எக்செல், ரெண்டு வொர்டு ஃபைல் ஓப்பன் பண்ணிவெச்சிட்டு நீங்கபாட்டுக்கு ஃபேஸ்புக், ப்ளாக்னு மேயலாம். ஆனா என்ன வீட்டம்மா பக்கத்துல வரும் போது மூஞ்சிய கொஞ்சம் சீரியசா வெச்சிகிட்டு  வொர்டு/ எக்செல் ஃபைலுக்கு போய் எதையாவது நோண்டனும்....... பட் மூஞ்சில பதட்டமே தெரியப்படாது பீ கேர்ஃபுல்...........

3. அப்புறம் இருக்கவே இருக்கு போன். மொபைல எடுத்து ஏதாச்சும் ஆபீஸ் நம்பருக்கு டயல் பண்ணி, ரிங் போகமுன்னாடி கட் பண்ணிடுங்க. அப்புறம் காதுல வெச்சி படு சீரியசா, எஸ் சார், ஓகே சார், நைட்டே முடிச்சிடுறேன் சார் அப்படின்னு வெரப்பா பேசுங்க (பீ கேர்புல், போன் சைலண்ட் மோடுல இருக்கனும்). அதுக்கப்புறம் வீட்டம்மாவே உங்க டேபிளுக்கு வந்து சாப்பாடு ஊட்டிவிடவும் வாய்ப்பு இருக்கு. பட் இத அடிக்கடி யூஸ் பண்ணா சந்தேகம் வந்துடும், மாட்டிக்கிட்டா எல்லா வழிகளும் அடைபட்டிரும்...அப்புறம் காலம்பூரா கைல கரிச்சட்டியும் பினாயிலும்தான்....

4.
நீங்க ஒரேடியா டேபிள்லயே உக்காந்திருந்தாலும் மாட்டிப்பீங்க. அதுனால கொஞ்ச நேரத்துக்கு ஒருவாட்டி எந்திரிச்சி உலாத்தனும். மூஞ்சிய கொஞ்சம் சீரியசா வெச்சிட்டு காத்துலயே கணக்கு போடனும். அப்பப்போ வீட்டம்மா கிட்ட ஏதாச்சும் கேட்கனும், இன்னிக்கு என்ன கிழமை..... போனமாசம் 5-ம் தேதி எங்க போனோம் அப்படின்னு டக் டக்குனு கேட்கனும்.... பதில் சொல்ல முன்னாடி ஓகே ஓகேன்னு சொல்லிட்டு மறுக்கா போய் கம்ப்யூட்டர்ல/ஆபீஸ் டாகுமெண்ட்ஸ்ல உக்காந்துடனும். அப்புறம் ரொம்ப டயர்டாகிட்ட மாதிரி அப்பப்போ கொட்டாவி விடுறதும் நல்லது. இதுக்கு  டீ, காபி, ஸ்னாக்ஸ்னு நல்ல பலனும் கிடைக்க வாய்ப்பிருக்கு.

இது இம்புட்டு கஷ்டமாடா....?

5. இன்னொரு முக்கியமான விஷயம், நீங்க ஆபீஸ்ல இருந்து கொண்டு வந்த பேப்பர்சை அடுத்த நாள் காலைல எடுத்துட்டு போகனும். மறந்தீங்கன்னா தொலஞ்சீங்க. மேட்டர் ஓவர். சும்மா சோம்பேறித்தனமா அதே பேப்பர்களை திரும்ப திரும்ப கொண்டு வரக்கூடாது. கண்டுபுடிச்சிடுவாங்க. வெறும் பேப்பர்களுக்கு பதிலா ஃபைலா கொண்டுவரலாம், பட் ஆபீஸ்ல மாட்டிக்காம கொண்டுவரனும். இல்லேன்னா அப்புறம் நெலமை ரெண்டுபக்கமும் இடிவாங்குற மத்தளமாகிடும்.

6. கடைசியா ரொம்ப ரொம்ப முக்கியமான பாய்ண்ட். இந்தப் பதிவ உங்க வீட்டம்மா படிச்சிடாம இருக்கனும். படிச்சிட்டாங்கன்னா அப்புறம் ஏற்படும் பின்விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது.

--
*more articles click*
www.sahabudeen.com


செவ்வாய், 23 ஜூலை, 2013

நம்மிடம் உள்ள‍ முக்கிய ஆவணங்கள் தொலைந்து போனால், திரும்ப பெறுவது எப்ப‍டி?

எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரய ப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத் தைத் தொலைத்துவிட்டு பலரும் தவி ப்பதை நாம் பார்க்கலாம். அப்படி தொ லைந்து போனால் அல்லது மழையி ல் நனைந்து கிழிந்து அழிந்து போனா ல் அவற்றை திரும்பப் பெறுவது எப்ப டி என்பதை இங்கே தெரிந்துகொள்ள லாம்.

 இன்ஷூரன்ஸ் பாலிசி!
 யாரை அணுகுவது..?
பாலிசியை விநியோகம் செய்த கிளையை.
.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்ட வை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.
.எவ்வளவு கட்டணம்?
ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
.கால வரையறை: விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல்ஆவணம் கிடைக்கக்கூடும். 
நடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங் கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80ரூபா ய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்க ப்பட் டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.  
.
மதிப்பெண் பட்டியல்! 
யாரை அணுகுவது..?
பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலு த்திய ரசீது.
எவ்வளவு கட்டணம்?  
உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.
மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505. 
கால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.
நடைமுறை: காவல்துறையில் புகார் அளித் து 'கண்டுபிடிக்க முடிய வில்லை' என சான்றி தழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறு வனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்திசெய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங் க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதி காரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளி யிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குந ருக்கு அனுப்புவார். தனித்தேர்வர்கள் நேரடியாக தேர்வுத்துறை இய க்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகங்களை அணுக வேண்டும்.

 

ரேஷன் கார்டு!  

யாரை அணுகுவது..?
கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலு வலர்; நகர்ப்பகுதிகளில் உணவு ப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர். 
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை 
எவ்வளவு கட்டணம்?
புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.
கால வரையறை: விண்ணப்பம் அளித்த  45 நாட்க ளுக்குள் கிடைத்து விடும்.
நடைமுறை: சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல்போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ண ப் பத்தைப் பூர்த்தி செய்து தரவேண்டும். அவர்களின் விசாரணைக்கு ப் பிறகு புது குடும்ப அட்டை  அனுப்பி வைக்கப்படும்.

டிரைவிங் லைசென்ஸ்!

யாரை அணுகுவது?
மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.
எவ்வளவு கட்டணம்?
கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).
காலவரையறை: விண்ணப்பம் செய்த பிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.
நடைமுறை: காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம்.

பான் கார்டு!

யாரை அணுகுவது?
பான் கார்டு பெற்றுத் தரும் அங் கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல் லது வருமான வரித்துறை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்று ம் முகவரிச் சான்று நகல்கள்.
எவ்வளவு கட்டணம்?
அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.
கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட் கள் .
நடைமுறை: பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப் பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.  

பங்குச் சந்தை ஆவணம்!

யாரை அணுகுவது?
சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோ லியோ எண். 
எவ்வளவு கட்டணம்? தனியாக கட்டணம் கட்டத்தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.காலவரையறை விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களு க்குள்.
நடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறு வனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்ப டையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத் தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித் தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறு த்தும்.

 

கிரயப் பத்திரம்! 

யாரை அணுகுவது..?
பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை கடிதம், பத்திரி கையில் வெளியிடப்பட்ட விள ம்பரம், யாரிடமும் இருந்து ஆட் சேபனை வரவில்லை என்பதற் கான நோட்டரி பப்ளிக் ஒரு வரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்? ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய்.
கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறை: கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்ப ரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல் ல வேண்டும்.

டெபிட் கார்டு!

யாரை அணுகுவது..?
சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
கணக்குத் தொடர்பான விவர ங்கள்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.100.
கால வரையறை: வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிக பட்சம் 15 நாட்கள்.
நடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக் கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடி யான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப் படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.

 

மனைப் பட்டா!

யாரை அணுகுவது..?
வட்டாட்சியர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?
நகல் பட்டா கோரும் விண்ண ப்பம்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.20.
கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறை: முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்து ரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசி ல்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவி டும்.

 

பாஸ்போர்ட்!

யாரை அணுகுவது..?
மண்டல பாஸ்போர்ட் அலுவலகங் கள்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய் முத் திரைத்தாளில் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.4,000.
கால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக் கும்.
நடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான் றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலு வலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர் கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.
.

கிரெடிட் கார்டு!

யாரை அணுகுவது..?
நிறுவனத்தின் வாடிக்கையா ளர் சேவை மையம்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்க ள்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறு படும்).
கால வரையறை: 15 வேலை நாட்கள்.
நடைமுறை: கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக் கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைக ளை நிறுத்த வேண்டும். தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார் டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்க ளுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பி த்து வாங்க வேண் டும்.

--
*more articles click*
www.sahabudeen.com


நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும். மேலும் அந்...

Popular Posts