லேபிள்கள்

சனி, 29 ஜூன், 2013

எப்படி படிப்பது?, எப்படி அதிக மார்க் எடுப்பது


பள்ளிப் பருவம் முதல் கல்லுõரி வரை, மாணவர் களுக்கு எழும் கேள்வி, எப்படி படிப்பது?, எப்படி அதிக மார்க் எடுப்பது என்பதுதான். சில மாணவர்கள் 
கஷ்டப்பட்டு படிப்பர், அதிக மதிப்பெண்ணும் பெறுவர். சிலர் சுமாராக படிப்பர். ஆனாலும், தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து விடுவர்.

சிலர் என்னதான் கஷ்டப்பட்டு படித்தாலும், அதிக மதிப்பெண் பெற முடிவதில்லை. இதற்கு காரணம், எப்படி படிக்க வேண்டும் என அவர்களுக்கு தெரிவதில்லை. ஒவ்வொருவரும் வெவ்வேறு முறைகளில், தேர்வுக்கு தயாராகின்றனர். எப்படி படிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டால் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.

*
வெற்றி பெறுவதற்கு, குறுக்கு வழி இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

*
தேர்வைக் கண்டு பயப்படவோ, வெறுக்கவோ கூடாது. என்னால் நல்ல மதிப்பெண் பெற முடியும் என நீங்கள் உங்களை நம்பினால், கண்டிப்பாக அந்த எண்ணமே உங்களுக்கு வழிகாட்டியாக அமையும்.

*
ஒவ்வொரு பாடத்துக்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும், என்பதை முன்பே அட்டவணைப்படுத்த வேண்டும். கஷ்டமான பாடத்துக்கு அதிக நேரமும், எளிதான பாடத்துக்கு குறைந்த நேரமும் ஒதுக்கலாம். தொடர்ந்து படிக்காமல், இடையிடையே ஓய்வு எடுத்து படிக்க வேண்டும். அப்போது தான் ஒவ்வொரு முறையும் ஈடுபாட்டோடு படிக்க முடியும்.

*
படிக்கும் இடம் முக்கியமானது. அமைதியான இடமாக இருக்க வேண்டும். ஒரு பாடத்தை படித்துக்கொண்டிருக்கும் போது, மற்ற புத்தகங்கள் உங்கள் பார்வையில் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள் அப்போதுதான் கவனம் சிதறாமல் ஒரே பாடத்தை படிக்க முடியும்.

*
அதிகாலை படிப்பது நல்லது. அப்போது, உங்களைச் சுற்றி அமைதியான சூழல் இருக்கும். இது உங்களை படிக்க துõண்டும். படிக்கும் அறையில், கண்ணாடி இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இது உங்களது கவனத்தை சிதறச் செய்யும். கிழக்கு அல்லது வடகிழக்கு நோக்கி அமர்ந்து படியுங்கள். இது உங்களுக்கு, பாசிடிவ் எனர்ஜியை தரும்.

*
படிக்கும் போது, குறிப் பெடுத்துக்கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். தேர்வு சமயத்தில் அனைத்து பாடத்தையும் திரும்ப படிக்க முடியாது. அந்த தருணத்தில், குறிப்பேடு பயன் தரும்.

*
நன்றாக சாப்பிட வேண்டும். சத்தான உணவு உண்ணுவது அவசியம். அதே போல, போதிய துõக்கம் அவசியம். இரவு முழுவதும், விழித்திருந்து படிப்பது தவறு. நன்றாக உறங்கினால் தான், அடுத்த நாள் தேர்வை ஒழுங்காக எழுத முடியும்.

*
கேள்விக்கு எப்படி பதிலளிப்பது, என்பது முக்கியம். ஒரு நாளில் 20க்கும் மேற்பட்ட விடைத்தாள்களை ஆசிரியர் மதிப்பீடு செய்வர். அப்படி இருக்கும் போது, உங்கள் விடைகள் குறுகியதாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும். கையெழுத்து நன்றாக இருப்பது அவசியம்.

*
படிக்கச் சொல்லி தொந்தரவு செய்கிறார்களே என ஒருபோதும் மாணவர்கள் எண்ணக் கூடாது. நீங்கள் படிப்பது, அவர்களுக்காக அல்ல; உங்களுக்காகத்தான் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

*
தேர்வில் எக்காரணம் கொண்டும் மோசடியில் ஈடுபடாதீர். இது உங்கள் வாழ்க்கையை, ஏதாவது ஒரு வழியில் பாதிக்கும்.

*
கடவுள் மீதும், உங்கள் மீதும் நம்பிக்கையோடு தேர்வு எழுதுங்கள். நிச்சயம் அதிக மதிப்பெண் பெறுவீர்கள்.

*
தேர்வு முடிந்ததும், அதைப் பற்றி பிற மாணவர்களுடன் விவாதிக்காதீர்கள். இது அடுத்த தேர்வுக்கு தயாராவதை பாதிக்கும். அனைத்து தேர்வுகளும் முடிந்த பின் மட்டுமே, எழுதிய தேர்வை பற்றி நண்பர்களுடன் கலந்துரையாடுங்கள்.

--
*more articles click*
www.sahabudeen.com


செவ்வாய், 25 ஜூன், 2013

குழந்தை வளர்ப்பு - ஒரு இஸ்லாமிய பார்வை

அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து பரிபக்குவபடுத்தும் வல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்....

நாம் இவ்வுலகத்தில் எத்தனையோ இன்பங்களையும், அருட்கொடைகளையும் அனுபவிக்கிறோம்... அப்படிப்பட்ட இன்பங்களில் மிக சிறந்ததாக இஸ்லாம் கூறுவது நல் ஒழுக்கமுள்ள மனைவியை.....

பிறப்பு முதல் இறப்பு வரை எத்தனையோ  உறவுகளையும், நட்புகளையும் கடந்து வந்தாலும்  மிக நுண்ணியமானதும், உணர்வுப்பூர்வமான  உறவு வாழ்க்கை துணையே. மற்ற உறவுகளை நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது.
ஆனால்,வாழ்க்கை துணை மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு வாழும் உறவு ஆகும். அப்படிப்பட்ட உறவை சரியான முறையில்  தேர்ந்தெடுக்காவிட்டால் சொல்லொண்ணா நஷ்டம்தான்.

குழந்தை வளர்ப்புன்னு சொல்லிட்டு வாழ்க்கைத்துணையை  பற்றி ஏன் சொல்றேன்னு நீங்க நினைக்கலாம்! குழந்தை வளர்ப்பின் ஆரம்பமே நல்ல வாழ்க்கை துணையை தேர்தேடுப்பதில்தான் உள்ளது.....

இன்னும் நாம் அனைவரும் திருமணத்திற்கு முன்னும், பின்னும் இந்த து ஆ வை அதிகமாக ஒவ்வொரு தொழுகையிலும்
கேட்க வேண்டும்....
"எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! 
இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.25 :74
இது இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம அவர்கள் செய்த துஆ...
பயபக்தியாளர்களுக்கெல்லாம் முன்மாதிரியான அவர் செய்த
துஆவை நாமும் கேட்போம்.

சமுதாயத்தில் எத்தனை பேர் மனைவியிடம் அல்லது கணவனிடம் கண்குளிர்ச்சி இல்லாமல் அவதிப்படுவதை கண்கூடாகப் பார்க்கிறோம்....
மார்க்கம் இல்லாத அல்லது அரைகுறை மார்க்கம் தெரிந்த வாழ்க்கைதுணை
உள்ளவர்கள் வீட்டிற்கு உள்ளே ஏகப்பட்ட பிரச்சினைகளோடும்தான் வாழ்கிறார்கள்.

இவர்களிடம் வளரும் பிள்ளைகளும் அவர்கள் வழியேதானே வரும்.
வாழ்க்கைத்துணையிடம் பணமோ,அழகோ இருந்தால் மட்டும் போதாது.....
தக்வா உடைய வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுத்தால் மட்டுமே சந்ததிகளிடம் கண்குளிர்ச்சியை பார்க்க முடியும். மார்க்கம் உள்ள தாய், தந்தையால் மட்டுமே சிறந்த குழந்தைகளை உருவாக்கமுடியும்.

அடுத்ததாக கர்ப்பிணியாக இருக்கும் பெண்ணுக்கு கணவனின் அன்பும் அரவணைப்பும் கண்டிப்பாக தேவை. கணவனின் பாசமான தொடுதலும், அன்பான பேச்சும்  பெண்ணிற்கு மனதளவில் தெம்பையும், நம்பிக்கையை கொடுக்க கூடியது.

எளிதாக குழந்தை பெற்ற பெண்மணிகளிடம் ஆலோசனை கேட்டு கொள்வது  தன்னம்பிக்கையையும்,தைரியத்தையும் கொடுக்கும். சுகபிரசவத்திற்க்கும், சாலிஹான பிள்ளையாக வளர்வதற்கும் நாள்தோறும் ஒவ்வொரு தொழுகையிலும் ரப்புல் ஆலமீனிடம்  பிரார்த்திக்க வேண்டும்.
எவருக்கேனும் பிள்ளை பிறந்தால், அப்பிள்ளைக்கு நல்ல பெயர் வைக்கவும், நல்ல ஒழுக்கங்களைக் கற்றுக் கொடுக்கவும், வாலிப வயதை அடைந்து விட்டால் மணமுடித்து வைக்கவும். பருவமடைந்த பின்னரும்(தனது அலட்சியப் போக்கின் காரணமாக)  மகனுக்கு மணமுடித்து வைக்கவில்லையென்றால், அவன் பாவத்தில் வீழ்ந்துவிட்டால் அந்த பாவம் அவனுடைய தந்தையைச் சேரும். பைஹகி-401
இப்போதுள்ள பெற்றோர்கள் அழகிய பெயர்களை வைப்பதை விட்டு விட்டு  ''தஸ் புஸ்'' என்று புதுமைபெயர்களாக கண்டுபிடிக்கிறார்களாம். இஸ்லாத்திற்காக தன் இன்னுயிரை நீத்த சுமையா (ரலி), பிலால் (ரலி) போன்றவர்களின் பெயரை நாம் எத்தனை பேர் நம் பிள்ளைகளுக்கு வைத்துள்ளோம்???

நல்ல ஒழுக்கங்களை கற்றுக்கொடுக்க நாம் ஒவ்வொருவரும் அண்ணலாரின் பொன்மொழிகளை எளிய முறையில் கதைபோல சொல்லிக்கொடுப்பதும் அவசியமாகும். பிள்ளைகளுக்கு சரியான வயதில் திருமணம்செய்யாமல் இன்னும் சம்பாதிக்கவேண்டும் என்று பிள்ளைகளை நிர்பந்திக்கும் பெற்றோர்கள் எத்தகைய தவறுகளைச் செய்கிறார்கள் என இந்த ஹதீஸின் மூலம் தெரிந்து கொள்ளலாம்???

அடுத்து, குழந்தை பெற்ற பின் குழந்தைக்கு இரண்டு வருடம் தாய் பால் ஊட்டுவது  தாய்க்கு இறைவன் இட்ட கட்டளையாகும். தாய்ப்பாலுக்கு இணையான உணவு  இவ்வுலகத்தில் ஒன்றும் இல்லை. பூமியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும்  இறைவன் கொடுக்கும் அருட்கொடையே தாய்ப்பால் ஆகும். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தியும், புற்று நோயை தடுக்கும் ஆற்றல் உள்ளதாக அறிவியல் கூறுகிறது. தாய்ப்பால் கொடுக்கும்போது தாயின் உடம்பில் உள்ள வெப்பமும், கதகதப்பும் குழந்தைக்கு மிகப்பெரும்நம்பிக்கையும், ஆற்றலையும் கொடுப்பதாக  உளவியல் ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.

இதனால்தான் அல்லாஹ் செவிலித்தாய் மூலமாகவது
குழந்தைக்கு பாலூட்ட கட்டளை இடுகிறான்.
ஒரு செவிலித்தாயைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால்  அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லை;  ஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டியதை முறைப்படி செலுத்திவிட வேண்டும்; அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - 
நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.2;223
நமது குழந்தைகளை நாம் எப்படி நடத்த வேண்டிய முறை பற்றி 
கண்மணி நாயகம் ஸல் அவர்கள் கூறியதாவது....
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் பேரரான)  ஹஸன் இப்னு அலீயை முத்தமிட்டார்கள்.  அப்போது அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்த அக்ரஉ இப்னு ஹாபிஸ் அத்தமீமீ(ரலி), 'எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கிறார்கள்.   ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை' என்றார்.  அவரை ஏறெடுத்துப் பார்த்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'அன்பு காட்டாதவர்  அன்பு காட்டப்படமாட்டார்' என்று கூறினார்கள்.புகாரி-5997

முத்தம் என்பது பாசத்தின் வெளிப்பாடு.
அன்பின் வெளிப்பாடு.
கருணையின் வெளிப்பாடு.
நான் உன்மேல் பாசமாக இருக்கிறேன்.உன் உணர்வுகளை மதிக்கிறேன் என்பது போன்ற செயல்களை பிள்ளைகளிடம் வெளிப்படுத்த வேண்டும்.

நம்மில் எத்தனை பேர் பிள்ளைகளுக்கு முத்தம் கொடுக்கிறோம்....?
தோளில் தட்டி கொடுக்கிறோம்...?
தலையை வருடிக் கொடுக்கிறோம்.....?
மடியில் படுக்க வைத்து கொஞ்சுகிறோம்...?
செல்ல பெயர் வைத்து அழைக்கிறோம்...?
பிள்ளைகளின் தலையை வருடிக்கொடுப்பது அவர்களுக்கு நம்மீது இனம்புரியாத பாசத்தையும், ஈர்ப்பையும் ஏற்படுத்தும்.... இதெல்லாம் தாய் மட்டுமே செய்ய வேண்டிய செயல் அல்ல... தந்தைமார்களும் அன்பை வெளிப்படுத்த வேண்டும்.
தன் உள்ளம் கடினமாக இருக்கிறது என முறையிட்ட சஹாபியிடம்நபி ஸல் அவர்கள் அநாதையின் தலையை தடவிக் கொடுப்பீராக என ஆலோசனை கூறுகிறார்கள்.(முஸ்னத் அஹ்மத்-293)
அநாதைகளின் தலையை தடவிக் கொடுப்பது அன்பை பரிமாற்றம் செய்யக்கூடிய செயலாக அண்ணலார் வழிக்காட்டுகிறார்கள். அதே போல், தலையை தடவிகொடுப்பதன் மூலமாக பெற்றோர்,பிள்ளை இரண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் பாசம் ரீசார்ஜ் செய்யப்படுகிறது.
நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்:உங்கள் குழந்தைகள் ஏழு வயது எட்டும்வரைஅவர்களுடன் விளையாடுங்கள்.அடுத்த ஏழு வயதில் அவர்களுக்கு கல்வியூட்டுங்கள்.அடுத்த ஏழு வயதில் அவர்களுடன் இணக்கமாகுங்கள்.#அஹ்மத்,நஸயி.

அல்லாஹ்வின் தூதர் எவ்வளவு அழகிய ஒரு வழிகாட்டலை குழந்தை வளர்ப்பில் ஒரு வரைபடம் போல காட்டிஉள்ளார்கள்...

குழந்தைகளுடன் விளையாட வேண்டுமாம்...
எத்தனை வயது வரை????
நன்றாய் கேளுங்கள்....?
7 வயது வரை.....!!!!

நாம் தான் 2 வயது ஆன உடனே குழந்தையின்  சேட்டைகளை ரசிக்காத கல் நெஞ்சம் கொண்டவர்கள் ஆயிற்றே!!!!! உடனே பிளே ஸ்கூல் எங்கே இருக்குனு தேடிப் பிடித்து கொண்டு போய் சிறை வைத்து விடுகிறோமே???

அடுத்த ஏழு வயதில் கல்வி கொடுக்கணுமாம்?!

அதற்கு அடுத்த ஏழு வயது அதி முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய பருவ வயது அல்லவா!! அந்த வயதில்தான் நாம் செல்போன்,லேப்டாப் தனியாக
வாங்கி கொடுக்கிறோம்..... அப்பொழுதுதான்  இணக்கமாக இருக்க ஒவ்வொரு பெற்றோருக்கும் அறிவுரை சொல்கிறார்கள்.
ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கு பொறுப்பாளிகள். உங்களின் பொறுப்பை பற்றி கேள்வி கேட்கப்படுவீர்கள்.
#
புகாரி.
பருவ வயதில் நம் பிள்ளைகள் வழி தவறியதென்றால் பெற்றோர்களிடம் அல்லாஹ் விசாரிப்பான் என்ற அச்சம் நம் அனைவருக்கும் வேண்டும். இன்னும் நமது குழந்தைகளுக்கு நாம் வழங்க வேண்டியவை ஏராளம்.
அன்பு, ஆதரவு, பாராட்டு, சுதந்திரம், வெற்றி என பல விசயங்கள் அதில் அடங்கும்... 

பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பும் முன்பே வீட்டிலேயே தாய் சிறிய துஆக்கள்,குட்டி குட்டி சூராக்கள், சலவாத் சொல்வது நற்பண்புகளை வளர்க்கும் ஹதீஸ்கள் போன்றவற்றை சொல்லி வளர்ப்பது கட்டாயமாகும்....

இன்னும் ஆண்களுக்கு நபி ஸல் அவர்கள் இடும் கட்டளை....
உங்கள் தொழுகைகளை சிலவற்றை வீட்டில் மேற்கொள்ளுங்கள். உங்கள் வீடுகளை மண்ணறைகளாக ஆக்கிவிடாதீர்கள்.#புகாரி

தந்தையும்,தாயும் வீட்டில் தொழுவதை பார்க்கும் பிள்ளைகள்அதே போன்று செய்ய உந்துதலாக இருக்கும். சம்பாதிப்பது மட்டும் தந்தையின் கடமை அல்ல. நல்ல ஒழுக்கத்தை கற்றுக்கொடுப்பதும் கடமையாகும்.
ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும்,
நல்ல ஒழுக்கத்தையும் விட சிறந்த அன்பளிப்பை வழங்கமுடியாது.
#திர்மிதி-1952
இன்னும் சில பெற்றோர் பிள்ளைகளிடம் எப்போதும் கண்டிப்புடனும், அதிகாரத்துடனும்நடந்துகொள்வார்கள். குழந்தைகளை எப்போது பார்த்தாலும் அடிப்பதால் தற்காலிக தீர்வு கிடைக்குமே தவிர நிரந்தர வெறுப்பு உண்டாகும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.பூமியில் உள்ளவர்களுக்கு கருணை காட்டுங்கள். வானில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான் என்பது நபிமொழி மென்மையான முறையில் பிள்ளைகளை கண்டியுங்கள்.
தவறு செய்யும்போது அவனுக்கு கொடுக்க வேண்டிய
அவனுக்கு தண்டனை கொடுக்கும் விதமாக அவன் விரும்பும் ஒன்றை கொடுக்காமல் இருக்க வேண்டும்.

பிறர் முன் (உறவினர்கள்,நண்பர்கள்) பிள்ளைகளை கேவலப் படுத்துதல் கூடாது. அது அவனுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்.

ஒவ்வொரு குழந்தையும் தன் தாய்க்கும்  100 மார்க் போட்டு வைத்திருக்கும்.ஏன் என்றால் தாய்தானே குழந்தையை  இவ்வுலகத்திற்கு அறிமுகப்படுத்துகிறார். தன் தாயின் ஒவ்வொரு அடி மற்றும் தண்டனைக்கும்  ஒவ்வொரு மார்க் ஆக குறைத்துக் கொண்டே வரும்...
இறுதியில் ஒவ்வொரு தாயும் பூஜ்ஜியம் மார்க்குடன் தீராத வெறுப்பையும்  சம்பாதித்து இருப்பார்.
உங்களிடம் கண்ணியத்துடன்  நடந்துகொள்வது உங்கள் குழந்தைகளின் கடமை; உங்கள் குழந்தைகளை சமமாக நடத்துவது உங்களின் கடமை!-அபுதாவூத்.
குழந்தை வளர்ப்பை பற்றித்தான் அல்லாஹ்வின் தூதர் எவ்வளவு ஒரு அழகிய வழிகாட்டலை கொடுத்துள்ளார்கள். நம் பிள்ளைகளாக இருந்தாலும் அவர்களும் சக மனிதர்கள் என்ற விதத்திலே நடத்த வேண்டும். குழந்தைகளின் நல்ல பழக்கத்திற்காக பரிசளிக்க வேண்டும்.. மிரட்டல், உருட்டல் இருக்கும் பழக்கம் நம்மிடம் இருந்தால் உடனே நாம் அதனை மாற்றிக்கொள்வோம்.

ஆண்,பெண் பிள்ளைகளுக்கு இடையில் வேறுபாடு காட்டும் வகையில் உணவு,உடை விசயத்தில் பாரபட்சம் காட்டக்கூடாது... அதிகமான வீடுகளில் ஆண்பிள்ளைக்கும் மட்டும் உணவு விசயத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கபடும்.அது மிகத் தவறு.
ஒருவன் தன் பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்காமலும்,கொடுமைப்படுத்தாமலும், ஆண் குழந்தையுடன் ஒப்பிடும்போது வேறுபாடு காட்டாமலும் இருந்தால்இறைவன் அவனை சுவனத்தில் நுழையச் செய்வான்.#அபுதாவூத்.

ஆம்.பிள்ளைகளை ஒழுங்காக வேறுபாடு காட்டாமல் வளர்த்தாலும் பெற்றோருக்கு சொர்க்கத்தை கொண்டு நன்மாராயம் கூறப்படுகிறது....

ஒரு முஸ்லிம் தன் உயிரை விட அதிகமாக
அல்லாஹ்வை நேசிக்க வேண்டும்...
இரண்டாவது தூதரை நேசிக்க வேண்டும்.
மூன்றாவது தாயை நேசிக்க வேண்டும்....
நான்காவது இடம் யாருக்கு.....?
ஐந்தாவது இடம் யாருக்கு....?
அதுவும் தாய்க்குறிய இடம்
எனஅல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறுகிறார்கள்.
ஆறாவது இடம் தான் தந்தைக்கு......

மூன்று இடத்தை பெற்றுள்ள தாய் தன் பொறுப்பை சரிவர நிறைவேற்ற வேண்டும்.... இன்ஷா அல்லாஹ் அன்பின் மூலமும், நல்ல ஒழுக்கத்தின் மூலமும் சிறந்த மனிதனை உருவாக்கலாம். ஒரு சிறந்த மனிதனை உருவாக்குவது சிறந்த சமுதாயத்தைஉருவாக்குவதற்கு சமம்....

இன்ஷா அல்லாஹ்,
நாம் அனைவரும் இஸ்லாம் மட்டுமே கூறும் வாழ்வியல்கலையின் மூலம் சிறந்த சமுதாயத்தை உண்டாக்குவோம்.

உங்கள் சகோதரி
ஆஷா பர்வீன்

--
*more articles click*
www.sahabudeen.com


உழ்ஹிய்யாவின் சட்டங்கள்

குர்பானியின் பின்னணி

இஸ்மாயீல் (அலை) அவர்களைத் தனக்காக அறுத்துப் பலியிட வேண்டும் என்று இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கனவில் அறிவித்தான்.
இப்ராஹீம் (அலை) தள்ளாத வயதில் இஸ்மாயில் (அலை) அவர்களைப் பெற்றெடுத்ததால் அதிகப் பாசம் அவர்களிடம் இருந்தது. ஆனாலும் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியில் மகனை அறுக்க முற்பட்டார்கள்.. அப்போது ஷைத்தான் அவர்களுடைய மனதில் தீய எண்ணங்களை ஏற்படுத்தினான். ஆனால் இப்ராஹீம் (அலை) ஷைத்தானிற்குக் கட்டுப்படாமல் இறைக் கட்டளையை நிறைவேற்றத் துணிந்தார்கள்.
அவர்களின் இந்தத் தியாகத்தை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு இஸ்மாயீல் (அலை) அவர்களைப் பலியிடுவதற்கு பதிலாக ஒரு பிராணியைப் பலியிடுமாறு கட்டளையிட்டான். இந்த விவரங்கள் திருக்குர்ஆனின் 37 வது அத்தியாயத்தில் 100 முதல் 111 வது வசனம் வரை கூறப்படுகிறது.
என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று இப்ராஹீம் கேட்டார்.) அவருக்கு சகிப்புத்தன்மை மிக்க ஆண் குழந்தை பற்றி நற்செய்தி கூறினோம். அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு" என்று கேட்டார். என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்" என்று பதிலளித்தார்.
இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்" என்று அவரை அழைத்துக் கூறினோம். இது தான் மகத்தான சோதனை. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம். இப்ராஹீமின் மீது ஸலாம் உண்டாகும்! நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம். அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர்.
அல்குர்ஆன் (37 : 100)

குர்பானியின் நோக்கம்
இந்த மாபெரும் தியாகத்திலிருந்து படிப்பினைகளை பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வருடமும் துல்ஹஜ் மாதத்தில் ஆடு, மாடு ஒட்டகங்களை அறுத்துப் பலியிடுமாறு நபி (ஸல்) அவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.
குர்பானியின் நோக்கத்தைப் புரியாத பலர் புகழுக்காக இந்த வணக்கத்தை நிறைவேற்றுகிறார்கள். ஒரு வருடம் கொடுத்து அடுத்த வருடம் கொடுக்காவிட்டால் மற்றவர்கள் ஏளனமாகப் பார்ப்பார்கள் என்று நினைக்கிறார்கள். படைத்தவனின் திருப்தியை விட மனிதர்களின் திருப்திக்கே முன்னுரிமை தருகிறார்கள். நம்மிடம் இறைவன் எதை மிக முக்கியமாக எதிர்பார்க்கிறானோ அதில் தவறிழைத்து விடுகிறார்கள்.
அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக!
அல்குர்ஆன் (22 : 37)
குர்பானியின் சிறப்பு
குர்பானியின் சிறப்புப் பற்றி வரும் பெரும்பாலான ஹதீஸ்கள் பலவீனமானவை. என்றாலும் துல்ஹஜ் மாத்தின் முதல் பத்து நாட்களில் செய்யும் நற்காரியங்களுக்கு தனிச்சிறப்பு இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(துல் ஹஜ்) பத்து நாட்களில் நல்லறங்கள் செய்வது ஏனைய நாட்களில் அவற்றைச் செய்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் (அறப்போர்) செய்வதை விடவுமா? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதை விடவும் சிறந்தது தான். ஆயினும் தனது உயிருடனும் தனது செல்வத்துடனும் புறப்பட்டுச் சென்று அவ்விரண்டில் எதையும் திரும்பக் கொண்டு வராத பேராளியைத் தவிர (அதாவது அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதானவரைத் தவிர) என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : புகாரி (969)
குர்பானி கொடுப்பது முஸ்லிம்களின் வழிமுறையாக அல்லாஹ்வால் ஆக்கப்பட்டுள்ளது. இதை நிறைவேற்றுபவர் முஸ்லிம்களின் வழியில் நடந்தவர் ஆவார். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்னால் (பிராணியை) அறுக்கின்றாரோ அவர் தம் (சொந்த தேவைக்காகவே) அறுத்தவர் ஆவார். யார் தொழுகைக்குப் பின்னால் அறுக்கிறாரோ அவரது (குர்பானி) வழிபாடு பூர்த்தியாகிவிடும். மேலும் அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றியவர் ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : புகாரி (5546)
அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறுவதற்காக நாம் தொழுகை நோன்பு தர்மம் போன்ற வணக்கங்களை அதிக ஆர்வத்துடன் செய்து வருகிறோம். அல்லாஹ்விடத்தில் நம்மை நெருக்கமாக்கி வைக்கும் இது போன்ற வணக்கங்களில் குர்பானியும் ஒன்றாகும். இதை நபி (ஸல்) அவர்கள் வழிபாடு என்று குறிப்பிடுகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பெருநாளன்று நிகழ்த்திய உரையில்) யார் நமது தொழுகையைத் தொழுது நமது தொழும் திசையை (கிப்லாவை) முன்னோக்கி நமது குர்பானி வழிபாட்டைச் செய்கிறாரோ அவர் தொழுவதற்கு முன் குர்பானிப் பிராணியை அறுக்க வேண்டாம். என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : பராஃ பின் ஆசிப் (ரலி)
நூல் : புகாரி (955)
யார்மீது கடமை?
குர்பானி கொடுப்பது வலியுறுத்திச் சொல்லப்பட்ட சுன்னத்தாகும். வசதியுள்ளவர்கள் அவசியம் இந்த வணக்கத்தை நிறைவேற்ற வேண்டும். இதற்கு பின்வரும் ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.
நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) யார் நமது தொழுகையைத் தொழுது (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பது போன்று கொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானி கொடுத்தவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறாரோ அவர் தொழுகைக்கு முன் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர். என்று குறிப்பிட்டார்கள்.
அப்போது அபூ புர்தா பின் நியார் (ரலி) அல்லாஹ்வின் தூதரே இன்றைய தினம் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் உரிய தினமாகும் என்று விளங்கி நான் தொழுகைக்கு முன்பே என் ஆட்டை அறுத்து விட்டேன். எனவே நான் தொழுகைக்கு வருவதற்கு முன்பே என் ஆட்டை அறுத்து (அதையே) காலை உணவாக உட்கொண்டு விட்டேன் என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் உன் ஆடு மாமிசத்திற்காக அறுக்கப்பட்ட ஆடாகத் தான் கருதப்படும் என்று கூறினார்கள். அப்போது அவர் அல்லாஹ்வின் தூதரே என்னிடம் ஓராண்டு நிறையாத ஆட்டுக்குட்டிகள் உள்ளன. எங்களிடம் இரண்டு ஆடுகளை விட விருப்பமான ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக்குட்டி ஒன்று உள்ளது. அதை அறுப்பது போதுமா? என்று கேட்டார். ஆம் இனிமேல் உன்னைத் தவிர வேறு யாருக்கும் அது பொருந்தாது என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
அறிவிப்பாளர் : பராஃ (ரலி)
நூல் : புகாரி (955)
குர்பானி கொடுப்பது அவசியம் என்பதால் தான் ஆறுமாதக் குட்டியை மீண்டும் அறுக்குமாறு அபூபுர்தா (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகிறார்கள். அவசியமில்லை என்றால் நபி (ஸல்) அவர்கள் இவ்வளவு வலியுறுத்திருக்க மாட்டார்கள். வேறுசில அறிவிப்புகளில் திரும்பவும் அறுக்கட்டும் என்று கூறியதாக வந்துள்ளது.
யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுக்கிறாரோ அவர் திரும்பவும் அறுக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி (954)
ஒரு (ஹஜ்ஜுப் பெருநா)ளின் போது (தொழுகை முடிந்த பிறகு) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பிராணிகளை அறுத்து குர்பானி கொடுத்தோம். (அன்று) சிலர் தங்களுடைய பிராணியை தொழுகைக்கு முன்பாகவே அறுத்து விட்டனர். (தொழுகையிலிருந்து திரும்பிய) நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு முன்னதாகவே அவர்கள் குர்பானி கொடுத்துவிட்டிருப்பதைக் கண்ட போது யார் தொழுகைக்கு முன் அறுத்து விட்டாரோ அவர் அதற்கு பதிலாக வேறொன்றை அறுக்கட்டும். யார் தொழும்வரை அறுத்திருக்கவில்லையோ அவர் அல்லாஹ் பெயர் சொல்லி அறுக்கட்டும் என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஜுன்தப் பின் சுஃப்யான் (ரலி)
நூல் : புகாரி (5500)
தொழுகைக்கு முன் குர்பானி கொடுத்திருந்தாலும் தவறாகக் கொடுத்ததினால் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியிருப்பதால் வசதியுள்ளவர்கள் கண்டிப்பாகக் குர்பானி கொடுக்க வேண்டும் என்று புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் மேலுள்ள ஹதீஸில் அறுக்காதவர் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டையிட்டுள்ளார்கள், இந்தக் கட்டளையும் குர்பானியின் அவசியத்தை எடுத்துரைக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் பயனத்திலும் ஊரில் இருக்கும் போதும் குர்பானி கொடுத்துள்ளார்கள். இந்த நடைமுறை அதன் அவசியத்தை உணர்த்துகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடைய குர்பானிப் பிராணியை அறுத்துவிட்டு சவ்பானே இதன் இறைச்சியைப் பக்குவப்படுத்துவீராக என்று கூறினார்கள். அவர்கள் மதீனாவிற்கு வரும் வரை அதிலிருந்து அவர்களுக்கு நான் உண்ணக் கொடுத்துக் கொண்டே இருந்தேன்.
அறிவிப்பவர் : சவ்பான் (ரலி)
நூல் : முஸ்லிம் (3649)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொம்புகள் உள்ள இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்கள் பக்கம் சென்று தமது கரத்தால் அவற்றை அறுத்தார்கள்.
அறவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : புகாரி (5554)
நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன் பின் (இல்லம்) திரும்பி அறுத்துப் பலியிடுவோம். யார் இவ்வாறு செய்கிறாரோ அவர் நமது வழிமுறையைப் பேணியவராவார் என்று நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.
அறவிப்பவர் பராஃ (ரலி)
நூல் புகாரி (951)
குர்பானி கொடுக்கும் படி நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டையிடுகிறான். நபி (ஸல்) அவர்களுக்கு மாத்திரம் உரியது என்ற விளக்கம் குர்ஆனிலோ ஹதீஸிலோ இல்லையென்றால் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் இட்ட கட்டளைகள் அவர்களுடைய சமூகத்தாருக்கும் உரியதாகும்.
(முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம். எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!
(அல்குர்ஆன் 108 : 1,2)
கடன் வாங்கி குர்பானி
கடன் வாங்கியாவது குர்பானி கொடுக்க வேண்டும் என்று பலர் நினைக்கின்றார்கள். இதை நிறைவேற்றுவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். கடன் வாங்கியாவது குர்பானி கொடுக்க வேண்டும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் வருவதால் இவ்வாறு செய்கிறார்கள். உண்மையில் இது தொடர்பாக வரும் செய்திகள் பலவீனமானதாகும்.
அல்லாஹ்வின் தூதரே நான் கடன் பெற்று குர்பானி கொடுக்கவா? என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம் இதுவும் நிறைவேற்றப்பட வேண்டிய கடனாகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : பைஹகீ (19021)
கடனாளியாக இருந்தால் குர்பானி கொடுப்பது அவர் மீது கட்டாயம் ஆகாது. அவர் முதலில் கடனையே நிறைவேற்ற வேண்டும். ஏனென்றால் இஸ்லாத்தின் தூண்களாக விளங்கும் ஜகாத் ஹஜ் போன்ற கடமைகள் கூட நம் சக்திக்கு உட்பட்டால் தான் கடமையாகும். மிகவும் வலியுறுத்திச் சொல்லப்பட்ட இந்தக் கடமைகளை கடன் வாங்கி நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்கம் பணிக்கவில்லை.
நபி (ஸல்) அவர்கள் தடுத்த காரியங்களை முழுமையாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் கட்டளையிட்டால் அதை நம்மால் முடிந்த அளவு நிறைவேற்ற வேண்டுமே தவிர சிரமப்பட்டு நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு மார்க்கம் உபதேசிக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்த்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (7288)
வசதியில்லாதவர் சிரமப்பட்டு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் எந்த ஒருவரையும் அவர் சக்திக்கு மீறி அல்லாஹ் சிரமப்படுத்தமாட்டான்.
எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.
(அல்குர்ஆன் 2 : 286)
அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்த தியாகியானாலும் கடனுடன் மரணித்தால் அல்லாஹ் அவரை மன்னிப்பதில்லை. எனவே முதலில் கடனை நிறைவேற்றும் கடமை அவருக்கு உள்ளது.
கடனைத் தவிர அனைத்து பாவமும் அல்லாஹ்வின் பாதையில் மரணித்தவருக்காக மன்னிக்கப்படுகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் (3498)
குர்பானி கொடுப்பவர் கடைபிடிக்க வேண்டியவை
குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ்ஜு மாதம் பிறை ஒன்று முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம், முடி இவற்றில் எதையும் வெட்டக் கூடாது.
நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)
நூற்கள் : முஸ்லிம் (3655), நஸயீ (4285)
ஆனால் ஒருவருக்கு முதல் 10 நாட்களுக்கு இடையில் கொடுப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. அவர் எப்போது குர்பானிக் கொடுப்பதாக எண்ணிக் கொண்டாரா அப்போதிருந்து கொடுக்கும் வரை இவற்றை வெட்டக்கூடாது. ஏனென்றால் குர்பானி கொடுப்பதாக அவர் முடிவெடுக்கும் போது தான் இந்தத் தடை ஏற்படும்.
தன்னுடைய முயற்சியின்றி தானாக நகம் முடி ஆகியவை விழுந்தால் இதில் தவறேதுமில்லை. சில நேரங்களில் இவைகள் இருப்பதினால் மிகவும் துன்பம் ஏற்படலாம். உதாரணமாக கையின் நகம் உடைந்து தொங்கிக் கொண்டு வலியை அதிகப்படுத்திக்கொண்டிருக்கிறது.
அல்லது அறுவை சிகிச்சை செய்வதற்காகவோ அல்லது காயத்தை குணப்படுத்துவதற்காகவோ முடியை வெட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது போன்ற சிரமமான நிலையில் வெட்டுவதில் தவறேதும் இல்லை. ஏனென்றால் அல்லாஹ் எந்த உயிரையும் அதன் சக்திக்கு அப்பாற்பட்டு கஷ்டம் கொடுப்பதில்லை. நபி (ஸல்) அவர்களுடைய வழிமுறையை நம்மால் முடிந்த அளவு பின்பற்றுவதே நம்மீது கடமை.
குடும்பத்தை நடத்திச் செல்பவர் தன் குடும்பத்தின் சார்பாக குர்பானி கொடுப்பார். இவர் மட்டும் நகம் முடிகளைக் களையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் இவ்வாறு கடைப்பிடிக்க வேண்டியதில்லை. அனைவரும் கட்டாயம் இதைக் கடைபிடிப்பதாக இருந்தால் நபித்தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கட்டளையிட்டிருப்பார்கள்.
குர்பானிப் பிராணிகள்
ஒட்டகம், ஆடு, மாடு இம்மூன்றும் குர்பானி கொடுக்கத் தகுதியான பிராணிகள். இதைத் தவிர வேறு எதையும் குர்பானி கொடுக்கக் கூடாது.
கால்நடைகளை அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியதற்காக அறியப்பட்ட நாட்களே அல்லாஹ்வின் திருநாமத்தை அவர்கள் துதிப்பார்கள். அதில் இருந்து நீங்களும் உண்ணுங்கள், வறிய ஏழைகளுக்கும் வழங்குங்கள்.
(அல்குர்ஆன் 22 : 28)
இந்த வசனத்தில் குர்பானிக்கான பிராணிகளைப்பற்றி அல்லாஹ் குறிப்பிடும் பொழுது அன்ஆம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றான். அன்ஆம் என்றால் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று பிராணிகளை மாத்திரம் குறிக்கும். எனவே ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றையே குர்பானி கொடுக்க வேண்டும்.
ஆடுகளில் சில இனத்தைக் கொடுக்கக் கூடாது என்ற தவறான நம்பிக்கை நிலவுகிறது. வெள்ளாடு செம்மறியாடு ஆகிய எதுவானாலும் கொடுப்பதில் குற்றமில்லை. பலியிடப்பட வேண்டிய பிராணிகளை இறைவன் பட்டியலிடும் போது செம்மறியாடு வெள்ளாடு மாடு ஒட்டகம் இவற்றையே குறிப்பிடுகிறான்.
(பலியிடக் கூடிய பிராணிகளில்) எட்டு வகைகள் உள்ளன. செம்மறியாட்டில் (ஆண் பெண் என) இரண்டு, வெள்ளாட்டில் இரண்டு உள்ளன. (இவற்றில்) ஆண் பிராணிகளையா (இறைவன்) தடுத்திருக்கிறான்? அல்லது பெண் பிராணிகளையா? அல்லது பெண் பிராணிகளின் கருவில் உள்ளவற்றையா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அறிவுடன் எனக்கு விளக்குங்கள்!" என (முஹம்மதே!) கேட்பீராக!
ஒட்டகத்தில் இரண்டு, மாட்டில் இரண்டு உள்ளன. இவற்றில் ஆண் பிராணிகளையா தடை செய்திருக்கிறான்? அல்லது பெண் பிராணிகளையா? அல்லது பெண் பிராணிகளின் கருவில் உள்ளவைகளையா?" என்று (முஹம்மதே!) கேட்பீராக!
அல்குர்ஆன் (6 : 143)
மேலும் நபி(ஸல்) அவர்கள் ஒட்டகம், ஆடு, மாடு ஆகியவற்றை மட்டும் குர்பானி கொடுத்ததாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கூறுகின்றன. எனவே இம்மூன்று பிராணிகள் மட்டுமே குர்பானிப் பிராணிகளாகும்.
எருமை மாட்டை குர்பானிக் கொடுப்பதில் அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த பூமியில் எருமை மாடு இல்லாததால் குர்ஆன் ஹதீஸில் இதைப் பற்றி தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. எனவே சிலர் ஹதீஸ்களில் இல்லாததை குர்பானி கொடுக்கக்கூடாது என்கின்றனர். இன்னும் சிலர் எருமை மாடு மாட்டு இனத்தில் உள்ளதால் மாட்டை எப்படிக் கொடுக்கலாமோ அதைப் போன்று இதையும் கொடுக்கலாம் என்கின்றனர்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.
சில ஊர்களில் சேவல், கோழி போன்றவற்றை குர்பானி கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வது கூடாது. இதற்கு ஹதீஸ்களில் எந்த ஆதாரமும் கிடையாது.
பிராணிகளின் தன்மைகள்
குர்பானிப் பிராணிகள் நல்ல திடகாத்திரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். பொதுவாக எந்தக் குறையும் இல்லாததாக இருக்க வேண்டும்.
தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் பார்வைக் குறை, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அல்பரா பின் ஆசிப் (ரலி)
நூற்கள் : திர்மிதீ(1417), அபூதாவூத்(4293), நஸயீ(4294) , இப்னுமாஜா (3135), அஹ்மத் (17777)
நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் குறை தெரியும் பிராணியைத் தடை செய்துள்ளார்கள். உதாரணமாக குருடு நொண்டி போன்ற குறைகள் இருக்கக் கூடாது. அவர்கள் கூறிய தெளிவாகத் தெரியும் என்ற வாசகம் குறை மறைமுகமாகவும் சிறியதாகவும் இருந்தால் பிரச்சனையில்லை என்பதை காட்டுகிறது. எனவே சிறிய அளவில் வெளிப்படையாகத் தெரியாத குறையுள்ள ஆட்டைக் குர்பானிக் கொடுப்பதில் குற்றமில்லை.
நபி(ஸல்) அவர்கள் கொம்புள்ள, கருப்பு நிறத்தால் நடக்கக் கூடிய, கருப்பு நிறத்தால் அமரக் கூடிய, கருப்பு நிறத்தால் பார்க்கக் கூடிய (அதாவது முட்டுக்கால், கால், கண்பகுதி, கருப்பு நிறமுடைய) ஆட்டை குர்பானிக் கொடுக்க வாங்கி வருமாறு கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி)
நூற்கள் : முஸ்லிம் (3637)
நபி (ஸல்) அவர்கள் உட்பகுதியில் பாதி கொம்பு உடைந்த ஆடு குர்பானி கொடுக்கப்படுவதை தடுத்தார்கள்.
நூல் : நஸயீ (4301)
அறிவிப்பாளர் : அலீ (ரலி)
தலையின் உட்பகுதியில் பாதியளவு கொம்பு உடைந்த ஆட்டிற்கு அல்பா என்று சொல்லப்படும். இவ்வகை பிராணியை குர்பானி கொடுக்க நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். வெளிப்பகுதியில் கொம்பு உடைந்திருந்தால் அதை குர்பானி கொடுப்பதில் தவறில்லை. ஏனென்றால் தடைசெய்யப்பட்ட பிராணிகளின் தன்மைகளை பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது வெளிப்புறத்தில் கொம்பு உடைந்ததை கொடுக்கக்கூடாது என்று தடைவிதிக்கவில்லை.
இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் ஆடு வாங்குபவர்கள் பெரிய கொம்புள்ள, முகம், மூட்டுக்கால், கண் பகுதி கருப்பு நிறமுடையதாக வாங்குவது சிறப்புக்குரியதாகும். ஆனால் கட்டாயமில்லை.
குர்பானி கொடுப்பதற்கு பெண் பிராணியை பெரும்பாலும் யாரும் தேர்வு செய்வதில்லை. பெண் பிராணியை அறுத்துப் பலியிடுவது தவறானது என்று நினைக்கிறார்கள். தடுக்கப்பட்ட பிராணிகளின் தன்மையை நபி (ஸல்) அவர்கள் விளக்கும் போது பெண்ணினத்தை பலியிடக்கூடாது என்று கூறவில்லை.
நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறாத போது நாமாக நிபந்தனைகளை விதிப்பது வழிகேடே. பலியிடப்பட வேண்டிய பிராணிகளைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது பெண்ணினத்தையும் சேர்த்தே குறிப்பிடுகிறான்.
(பலியிடக் கூடிய பிராணிகளில்) எட்டு வகைகள் உள்ளன. செம்மறியாட்டில் (ஆண் பெண் என) இரண்டு, வெள்ளாட்டில் இரண்டு உள்ளன. (இவற்றில்) ஆண் பிராணிகளையா (இறைவன்) தடுத்திருக்கிறான்? அல்லது பெண் பிராணிகளையா? அல்லது பெண் பிராணிகளின் கருவில் உள்ளவற்றையா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அறிவுடன் எனக்கு விளக்குங்கள்!" என (முஹம்மதே!) கேட்பீராக!
ஒட்டகத்தில் இரண்டு, மாட்டில் இரண்டு உள்ளன. இவற்றில் ஆண் பிராணிகளையா தடை செய்திருக்கிறான்? அல்லது பெண் பிராணிகளையா? அல்லது பெண் பிராணிகளின் கருவில் உள்ளவைகளையா?" என்று (முஹம்மதே!) கேட்பீராக!
அல்குர்ஆன் (6 : 143)
இறைச்சி அதிகமாகவும் ருசியாகவும் உள்ள பிராணிகளைத் தேர்வு செய்ய வேண்டும். ஆடுகளின் எண்ணிக்கையை விட ஆட்டின் தரம் தான் முக்கியம். அபூபுர்தா என்ற நபித்தோழர் தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்து விட்டார். அதற்குப் பதிலாக இரண்டு ஆட்டின் இறைச்சியை விட அதிக இறைச்சியை கொண்ட ஆடு உள்ளதாக அவர் கூறியபோது இந்த ஆடே முன்பு கொடுத்த ஆட்டைவிட சிறந்தது என்று கூறினார்கள்.
அபூபுர்தா பின் நியார் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் அறுப்பதற்கு முன்பே அறுத்துவிட்டார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து) அல்லாஹ்வின் தூதரே இந்த நாள் இறைச்சி அதிகமாக விரும்பப்படும் நாள். (ஆகையால்) எனது வீட்டார்களுக்கும் எனது அண்டை வீட்டாருக்கும் எனது உறவினர்களுக்கும் உண்ணக் கொடுப்பதற்காக எனது குர்பானிப் பிராணியை அவசரப்பட்டு அறுத்து விட்டேன் என்று கூறினார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் மீண்டும் அறுப்பீராக என்று கூறினார்கள். அவர் அல்லாஹ்வின் தூதரே என்னிடத்தில் ஆறுமாதம் பூர்த்தியான பெண் வெள்ளாட்டுக் குட்டி உள்ளது. அது (அதிக) இறைச்சியுடைய இரு ஆடுகளை விட சிறந்தது என்று கூறினார். அதற்கு நபியவர்கள் உனது இரு குர்பானிப் பிராணியில் இதுவே சிறந்ததாகும் உமக்குப் பின்னால் யாருக்கும் ஆறுமாதக் குட்டி போதுமாகாது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : பராஃ பின் ஆசிப் (ரலி)
நூல் : முஸ்லிம் (3625)
மதீனாவில் குர்பானிப் பிராணிகளை நாங்கள் கொழுக்க வைப்போம். (ஏனைய) முஸ்லிம்களும் கொழுக்க வைப்பார்கள்.
அறிவிப்பவர் : அபூஉமாமா(ரலி)
நூற்கள் : அபூஅவானா, புகாரி(தஃலீக்)
இந்த ஹதீஸை இமாம் புகாரி அவர்கள் அறிவிப்பாளர் வரிசையில்லாமல் பதிவு செய்துள்ளார்கள். ஹாஃபிள் இப்னு ஹஜர் அவர்கள் தனது ஃபதஹுல் பாரி என்ற நூலில் இந்தச் செய்தி அபூநுஐம் அவர்களின் அல்முஸ்தத்ரக் என்ற நூலில் அறிவிப்பாளர் வரிசையுடன் இடம்பெறுவதாக குறிப்பிடுகின்றார். எனவே குர்பானிப் பிராணிகளை முன் கூட்டியே வாங்கி நல்ல தீனி போட்டு கொழுக்க வைக்கலாம்.
குர்பானிப் பிராணிகள் வாங்கும் போது நல்ல தரமான உயர் ரகமானதை வாங்குவது நன்மையை அதிகரித்துத் தரும். ஏழைகள் உயர்தரமான இறைச்சியைச் சாப்பிட வேண்டும் என்று எண்ணி அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு கூடுதலான நன்மைகள் உண்டு. இதனை பின் வரும் ஹதீஸ்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
நீ தூய்மையானதும், தன்யீம்' என்ற இடத்திற்கு சென்று இஹ்ராம் அணிந்து கொள்! பிறகு இந்த இடத்தில் என்னைச் சந்தி! (இப்படிச் செய்வதினால்) உன்னுடைய செலவுக்கும், உன் கஷ்டத்திற்கும் ஏற்ப கூலி கொடுக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி)
நூல் : புகாரி(1287)
சிறந்த அமல் எது என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அல்லாஹ்வை நம்புவதும் அவனுடைய பாதையில் போர் புரிவதுமாகும் என்று கூறினார்கள். அடிமை விடுதலை செய்வதில் சிறந்தது எது? என்று கேட்டேன். எஜமானால் விருப்பமுள்ள அதிக விலையுள்ள அடிமை (யை விடுதலை செய்வது) என பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர் : அபூதர் (ரலி)
நூல் : புகாரி (2518)
பெரும்பாலான இடங்களில் அல்லாஹ்விற்காக வாங்கப்பட்ட பிராணிகளுக்கிடையே சண்டையை ஏற்படுத்தி போட்டி வைக்கிறார்கள். இதனால் அப்பிராணிகளின் கொம்புகள் உடைந்து விடுகின்றது. அவற்றுக்கு பலத்த காயமும் ஏற்படுகிறது. இது போன்று குறைகளை ஏற்படுத்தி குர்பானிக் கொடுத்தால் இதில் எள் அளவும் பயனில்லை.
இக்கேளிக்கையில் ஈடுபடுபவர் உயிரினங்களை கொடுமைப்படுத்திய குற்றத்தின் கீழ் சேர்க்கப்படுவார். பிராணியை அறுக்கும் போது அதற்குச் சிரமம் ஏற்படாமல் இருப்பதற்காக கத்தியை கூர்மையாக்கிக் கொள்ளும்படி வலியுறுத்தும் நம்மார்க்கம் பிராணிகளுக்கு இழைக்கப்படும் இந்த சித்தரவதையை ஒருபோதும் ஏற்காது.

ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட பிராணி
காயடிக்கப்பட்ட பிராணியை நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்ததாக அஹ்மதில் ஒரு ஹதீஸ் இடம் பெறுகிறது. இந்த ஹதீஸில் ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்ற பலவீனமானவர் இடம் பெறுகிறார். இந்த ஹதீஸ் பலவீனமானதாக இருந்தாலும் காயடிக்கப்பட்ட ஆட்டைக் கொடுப்பதற்கு நம்பத்தகுந்த ஹதீஸ்களில் எந்தத் தடையும் வரவில்லை. ஆட்டிற்குக் காயடிப்பதினால் அதன் வளர்ச்சி நன்றாக இருக்குமே தவிர தரம் எந்த விதத்திலும் குறைந்து விடாது. ஆகையால் காயடிக்கப்பட்ட பிராணிகளையும் குர்பானி கொடுக்கலாம்.
பிராணியின் வயது
குர்பானிக்காக வாங்கப்படும் பிராணிக்கு பல்விழுந்திருக்க வேண்டும். சிலர் பால்குடிக்கும் குட்டிகளை அறுத்துப் பலியிடுகிறார்கள். இதை மார்க்கம் அங்கீகரிக்கவில்லை.
இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்குச்) சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுவதற்கு முன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியில் (நன்மை) எதுவும் கிடையாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூபுர்தா இப்னு நியார்(ரலி) அவர்கள் (தொழு முன்) அறுத்து விட்டார்கள். அவர் (நபி (ஸல்) அவர்களிடத்தில்) என்னிடத்தில் முஸின்னாவை விட ஆறுமாத குட்டி உள்ளது. (அதை குர்பானி கொடுக்கலாமா?) என்றார். அதை முன் அறுத்ததற்கு இதைப் பகரமாக்குவீராக! எனினும் உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இது (குர்பானி கொடுக்க) அனுமதியில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : பரா(ரலி)
நூற்கள் : புகாரி(5560)
அபூபுர்தா (ரலி) அவர்கள் தொழுகைக்கு முன்னர் குர்பானி கொடுத்த போது அதற்குப் பகரமாக நபி (ஸல்) அவர்களிடம் முஸின்னாவை விட ஜத்அ (ஆறுமாதக் குட்டி) உள்ளது. (அதைக் குர்பானி கொடுக்கலாமா?) என்று கேட்ட கேள்வியிலிருந்து முஸின்னாவைத் தான் நபி (ஸல்) அவர்கள் கொடுக்கச் சொல்லியுள்ளார்கள் என்பதை விளங்கலாம்.
நபி (ஸல்) அவர்கள் குர்பானி ஆடுகளைப் பங்கிட்டுக் கொடுத்தார்கள். அதில் எனக்கு ஜத்வு' கிடைத்தது. அல்லாஹ்வின் தூதரே எனக்கு ஜத்வு தான் கிடைத்தது என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அதைக் குர்பானி கொடுப்பீராக என்றனர்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ர-)
நூல் : முஸ்லிம் (3634)
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஜத்வு என்ற நிலையில் செம்மறி ஆட்டுக்குட்டியை குர்பானிக் கொடுத்தோம்.
அறிவிப்பாளர் : உக்பத் பின் ஆமிர்
நூல் : நஸயீ (4306)
பிராணியின் வயது தொடர்பாக வரக்கூடிய செய்திகள் இவை. இதை வைத்துக் கொண்டு குர்பானி பிராணியின் வயதை முடிவு செய்யலாம்.
முஸின்னாவைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். முஸின்னா என்ற வார்த்தையின் பொருள் ஆடு, மாடு , ஒட்டகத்தில் பல் விழுந்தவைக்கு சொல்லப்படும். சில நாட்டின் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ப பிராணிகளின் நிலைகளில் மாறுபாடு ஏற்படுகின்றது. இதன் காரணத்தால் தான் வயதைக் கணிப்பதில் அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
முஸின்னா என்பது ஆட்டிலும் மாட்டிலும் இரண்டு வருடம் பூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஒட்டகத்தில் ஐந்து வருடம் பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என்று பிரபலியமான அகராதி நூலான லிஸானுல் அரப் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.
இதற்கு மாற்றமாக ஆட்டில் ஒரு வருடம் பூர்த்தியடைந்திருந்தால் போதும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே பல் விழுந்துள்ளதா என்பதைக் கவனித்து வாங்கினால் சரியானதாக அமையும்.
அடுத்து ஜத்வு என்பதையும் கொடுக்கலாம் என்று சில ஹதீஸ்கள் உள்ளன. ஜத்வு என்பது முஸின்னாவுக்கு முந்தைய நிலையில் உள்ளதாகும். அதாவது முஸின்னாவின் நிலைக்கு நெருக்கமான நிலைக்கு வந்ததாகும். ஆறு மாதம் பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என்றும் ஒரு வருடம் பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
முஸின்னா இல்லையானால் அல்லது முஸின்னா ஆட்டை, மாட்டை வாங்குவதற்குரிய வசதியில்லையானால் முஸின்னாவிற்கு முந்தைய நிலையில் உள்ள ஜத்வு வகையைக் கொடுக்கலாம்.
பாலூட்டும் பிராணி
குட்டியை ஈன்று பால் கொடுத்துக் கொண்டிருக்கும் பிராணியை அறுக்க வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஏனென்றால் தாயை அறுத்து விட்டால் குட்டி பாசத்திற்கும் பாலிற்கும் ஏங்கக்கூடிய நிலை ஏற்படும். குர்பானி கொடுப்பவர்கள் இதை கவனத்தில் கொண்டு குட்டிபோட்டு பால்தரும் பிராணிகளை அறுப்பதை தவிர்க்க வேண்டும்.
(ஒரு அன்சாரித் தோழர் நபி (ஸல்) அவர்களுக்காக ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பால்தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என நான் உம்மை எச்சரிக்கிறேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
முஸ்லிம் : (3799)
குர்பானிப் பிராணியை பயன்படுத்தலாமா?
அவசியம் ஏற்படும் போது குர்பானிப் பிராணிகளை பயன்படுத்திக் கொள்வது தவறல்ல. ஆனால் கொடுமை செய்யாமல் அதன் சக்திக்கு உட்பட்டவாறு அழகிய முறையில் அதைக் கையாள வேண்டும்.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் பலிப்பிராணியில் ஏறிச் செல்வதைப் பற்றிக் கேட்கப்பட்டது., நீங்கள் அதில் ஏறிச் செல்ல வேண்டிய நிலைக்குக் கட்டாயப்படுத்தப்பட்டால் பயண வாகனம் கிடைக்கும் வரை முறையோடு அதில் ஏறிச் செல்க என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன் என அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு ஜுரைஹ் (ரஹ்)
நூல் : முஸ்லிம் (2562 , 2563), நஸயீ (2752), அபூதாவூத் (1498), அஹ்மத் (14230)
ஒருவர் தமது குர்பானி ஒட்டகத்தை இழுத்துக் கொண்டு செல்வதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் அதில் ஏறிக் கொள்ளும் என்றார்கள். அதற்கவர் இது குர்பானி ஒட்டகமாயிற்றே என்றதும் (பரவாயில்லை) அதில் ஏறிக் கொள்ளும் என்றார்கள். மீண்டும் அவர் இது குர்பானி ஒட்டகமாயிற்றே என்றதும் (பரவாயில்லை) அதில் ஏறிக்கொள்ளும் என மூன்றாம் தடவையும் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி (1690)
சில பிராணிகள் நம் கட்டளைகளுக்கு அடங்காமல் மிரண்டு ஓடும். இப்ராணிகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக அவற்றை அடிப்பதில் தவறேதும் இல்லை. அடங்காத பிராணிகளை அம்பெய்து கட்டுப்படுத்த நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.
எங்களுக்கு சில ஒட்டகங்களும் ஆடுகளும் போர்ச் செல்வமாகக் கிடைத்தன. அவற்றிலிருந்து ஓர் ஒட்டகம் மிரண்டு ஓடிவிட்டது. உடனே (நபித்தோழர்களில்) ஒருவர் அந்த ஒட்டகத்தைக் குறிவைத்து அம்பெய்து அதை ஓடவிடாமல் தடுத்து நிறுத்தினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வனவிலங்குகளில் கட்டுக்கடங்காதவை இருப்பதைப் போன்றே இந்தப் பிராணிகளிலும் கட்டுக்கடங்காதவை சில உள்ளன. இவற்றில் உங்களை மீறிச் செல்பவற்றை இவ்வாறே (அம்பெய்து நிற்கச்) செய்யுங்கள்.
அறிவிப்பவர் : ராஃபிஉ பின் கதீஜ்
நூல் : புகாரி (2488) முஸ்லிம் (3638)
கூட்டுக் குர்பானி
ஒட்டகம், மாடு இவற்றில் ஏழு நபர்கள் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம். அதாவது ஏழு குடும்பங்கள் சேர்ந்து ஒரு ஒட்டகம் அல்லது மாடு வாங்கி ஏழு குடும்பங்கள் சார்பாகக் குர்பானி கொடுக்கலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஹஜ் மற்றும் உமராவில் ஓர் ஒட்டகத்தில் ஏழு பேர் வீதம் கூட்டுசேர்ந்தோம்.
அறிவிப்பவர் : ஜாபிர்(ரலி)
நூற்கள் : முஸ்லிம்(2325)
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்த போது ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது. ஒரு மாட்டில் ஏழு பேர் வீதமும் ஒரு ஒட்டகத்தில் 10 பேர் வீதமும் நாங்கள் கூட்டுசேர்ந்தோம்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : திர்மிதி (1421), நஸயீ (4316),இப்னு மாஜா (3122)
ஒரு மாடு ஏழு நபருக்கும் ஒரு ஒட்டகம் ஏழு நபருக்கும் (கூட்டுசேர போதுமானதாகும்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல் : அபூதாவூத் (2425)
மேல் கூறப்பட்டுள்ள ஹதீஸ்கள் மாடு அல்லது ஒட்டகத்தில் ஏழு பேர் கூட்டு சேரலாம் என்று தெரிவிக்கின்றது. ஒரு ஒட்டகத்தில் 10 பேர் கூட்டு சேருவதற்கும் ஆதாரம் உள்ளது. ஒட்டகம், மாட்டில் மட்டும் தான் பலர் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம். ஆட்டில் ஒரு குடும்பம் மட்டுமே கொடுக்க வேண்டும்.
எங்கே கொடுப்பது?
முஸல்லா எனும் திடலில் நபி (ஸல்) அவர்கள் அறுப்பவர்களாக இருந்தார்கள்."
அறிவிப்பவர் : இப்னு உமர்(ரலி)
நூற்கள் : புகாரி(5552), அபூதாவூத் (2428), நஸயீ (1571)
நபி (ஸல்) அவர்கள் பொதுமக்கள் பார்க்கும் வண்ணம் முஸல்லா என்ற திடலில் குர்பானி கொடுத்துள்ளார்கள். பொதுவான ஒரு இடத்தில் வெளிப்படையாக அறுக்கும் போது ஏழை எளியவர்கள் இதைக் கண்டு கொள்வார்கள். குர்பானி கொடுத்தவர்களிடம் சென்று இறைச்சியை அவர்கள் வாங்குவதற்கு இம்முறை உதவியாக இருக்கும். இந்த நோக்கத்திற்காக நபி (ஸல்) அவர்கள் முஸல்லாவில் சென்று குர்பானி கொடுத்திருக்கலாம். விரும்பினால் வீட்டில் கொடுப்பதற்கும் அனுமதி உள்ளது. இரு முறைகளும் பெருமானாரின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டதாகும்.
இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (இல்லத்திற்கு) திரும்பிச் சென்று குர்பானி கொடுப்போம்.
அறிவிப்பவர் : பரா(ரலி)
நூற்கள் : புகாரி(5545), முஸ்லிம் (3627)
இந்த ஹதீஸில் நாம் திரும்பிச் சென்று என இடம் பெற்றுள்ள வாசகம் கவனிக்கத் தக்கது. இந்த வாசகம் திடல் இல்லாத வேறொரு இடத்தைச் சுட்டுகிறது. வீட்டில் அறுக்கலாம் என்பதை உணர்த்துவதற்கு நபி (ஸல்) இந்த வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்கள்.
கருப்பு நிறத்தால் நடக்கக்கூடிய கருப்பு நிறத்தால் அமரக்கூடிய கருப்பு நிறத்தால் பார்க்கக்கூடிய கொம்புள்ள ஒரு ஆட்டை குர்பானி கொடுக்க வாங்கி வருமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (ஆடு வந்ததும்) ஆயிஷாவே கத்தியை எடுத்து வா என்றார்கள். பிறகு அதை கல்லில் தீட்டு என்றார்கள். நான் அப்படியே செய்தேன். பிறகு கத்தியை வாங்கிக் கொண்டார்கள். ஆட்டை கீழே படுக்க வைத்து அறுத்தார்கள்.
நூல் : முஸ்லிம் (3637)
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
ஆயிஷா (ரலி) அவர்களிடம் கத்தியை எடுத்து வரும் படி கட்டளையிட்டிருப்பது அறுத்தல் வீட்டில் நடந்திருக்கிறது எனத் தெரிவிக்கிறது. திடலுக்குச் சென்றிருந்தால் கத்தியுடனே அங்கு சென்றிருப்பார்கள். கத்தியை எடுத்து வரும்படி கூறுவதற்கு எந்த அவசியமும் இருந்திருக்காது. இதன்படி குர்பானிப் பிராணியை ஈத்கா திடலில் அல்லது வீட்டில் அறுக்கலாம் என்பது தெளிவாகிறது.
வீடு அல்லது திடலில் அறுக்காமல் வீட்டிற்கு முன்பு தெருவில் சிலர் அறுக்கிறார்கள். இவர்களது இச்செயல் தெருக்களில் அடிக்கடி போய் வந்து கொண்டிருக்கும் மக்களுக்கு இடையூராக அமைந்து விடுகிறது. இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
அறுக்கும் முன் கவனிக்க வேண்டியவை
பிராணியை அறுக்கும் முன் அதன் வாயில் சிறிது நீரை விடுகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று புரியவில்லை. இதனால் அப்பிராணிக்கு வேதனை குறையும் என்று நம்புவதற்குச் சான்றுகள் ஏதும் இல்லை. கத்தியைக் கூர்மையாக வைத்துக் கொள்வதே அவசியம். கூர்மையற்ற கத்தியினால் பிராணியை அறுத்து சித்திரவதை செய்யக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எம்முறை பிராணிக்குச் சிரமத்தைக் குறைக்குமோ அதன் அடிப்படையில் செயல்பட வேண்டும்.
எல்லாப் பொருட்களின் மீதும் நல்ல முறையில் நடந்து கொள்வதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். நீங்கள் (கிஸாஸ் பழிக்குப் பழி வாங்கும் போது) கொலை செய்தால் அழகிய முறையில் கொலை செய்யுங்கள். நீங்கள் பிராணிகளை அறுத்தால் அழகிய முறையில் அறுங்கள். உங்கள் கத்தியை நீங்கள் கூர்மையாக்கிக் கொள்ளுங்கள்! (விரைவாக) அறுப்பதன் மூலம் அதற்கு நிம்மதியைக் கொடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஷிதாத் இப்னு அவ்ஸ்(ரலி)
நூற்கள் : முஸ்லிம் (3615), திர்மிதி(1329) நஸயீ(4329), அபூதாவூத் (2432) இப்னுமாஜா (3161), அஹ்மது(16490)
ஆயிஷாவே! கத்தியைக் கொண்டு வா! அதைக் கல்லில் கூர்மையாக்கு என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)
நூற்கள் : முஸ்லிம் (3615)
கால்நடைகளை முறையாக ஒரு பக்கமாகப் படுக்கவைத்து அவை எழாமல் இருப்பதற்காக அவற்றின் கழுத்தில் காலை வைத்து அழுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் பலிப்பிராணியை அறுக்கும் போது அது துள்ளி பூரணமாக அறுப்பதைத் தடுத்துவிடும். இதற்காக நபி (ஸல்) அவர்கள் இம்முறையைக் கடைப்பிடித்துள்ளார்கள்.
' நபி (ஸல்) அவர்கள் கருப்பும் வெள்ளையும் கலந்த இரு ஆடுகளைக் குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவர்கள் தம்முடைய பாதத்தை அவற்றின் கழுத்தில் வைப்பதை நான் பார்த்தேன். பிஸ்மிலாஹ்வையும் தக்பீரையும் கூறி அவற்றை தம் கையால் அறுத்தார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி (5558)
ஒட்டகத்தைப் பொறுத்தவரை நிற்க வைத்து அதன் ஒரு காலை கயிற்றால் கட்டி வைத்துக் கொண்டு அறுக்க வேண்டும். ஒட்டகம் என்பது ஆட்டைப் போன்றதல்ல. ஆட்டை அறுப்பதைப் போன்று படுக்க வைத்து அதை அறுக்க இயலாது. ஆகையால் ஒட்டகத்தில் இம்முறையைக் கடைபிடிக்க வேண்டும்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறுப்பதற்காக அவரது ஒட்டகத்தைப் படுக்க வைத்திருந்த ஒருவரிடம் வந்து அதைக் கட்டி நிற்க வைத்து அறுப்பீராக அதுவே முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வழிமுறை என்று கூறியதை நான் பார்த்தேன்.
அறிவிப்பாளர் : ஸியாத் பின் ஜுபைர் (ரலி)
நூல் : புகாரி (1713)
நபி (ஸல்) அவர்கள் ஏழு ஒட்டகங்களை நிற்க வைத்து தமது கையாலேயே அறுத்தார்கள். மேலும் அவர்கள் மதீனாவில் பெரிய கொம்புகளுடைய கருப்பு நிறம் கலந்த வெள்ளை நிற ஆடுகள் இரண்டையும் குர்பானி கொடுத்தார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி (1712)
பிராணியைப் படுக்க வைப்பதற்கு முன்பாகவே கத்தியைக் கூர்மைபடுத்திக் கொள்ள வேண்டும். அதைப் படுக்க வைத்துக் கொண்டு அதன் கண்ணெதிரே கத்தியைத் தீட்டுவதினால் பிராணி மிரள ஆரம்பிக்கும். இவ்வாறு செய்வது பிராணியைத் துன்புறுத்துவதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஒருவர் ஆட்டை அறுப்பதற்காக அதைப் படுக்க வைத்துக் கொண்டு கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்தார். நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்) இப்பிராணியைப் பலமுறை கொல்வதை நீ நாடுகிறாயா? இதை நீ படுக்கவைப்பதற்கு முன்பாகவே உன் கத்தியை நீ கூர்மைப்படுத்தியிருக்கக் கூடாதா? என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : ஹாகிம் பாகம் : 4 பக்கம் : 257
குடும்பத்தினர் ஆஜராக வேண்டுமா?
குர்பானி கொடுக்கும் போது குடும்பத்தினர் அனைவரும் கட்டாயம் வந்து நிற்க வேண்டும் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது தொடர்பாக வந்துள்ள அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானதாக உள்ளது.
ஃபாத்திமா ! எழு! உன்னுடைய பிராணியிடத்தில் ஆஜராகு! ஏனெனில் குர்பானி பிராணியின் முதலாவது சொட்டு இரத்தம் விழும் போதே உனது அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன. மேலும் இந்தப் பிராணி மறுமை நாளில் இதனுடைய இரத்தமும் மாமிசமும் எழுபது மடங்கு கூடுதலாகக் கொண்டு வரப்படும். இதை உன்னுடைய மீஸானில் (நன்மைத் தட்டில்) வைக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! இந்த பாக்கியம் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினருக்குரியதா? அல்லது எல்லா மக்களுக்கும் உரியதா? எனக் கேட்டார்கள். முஹம்மதுடைய குடும்பத்திற்கும் எல்லா மக்களுக்கும் பொதுவானது தான் என பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அலீ (ரலி) மற்றும் இப்ரான் பின் ஹுஸைன் (ரலி)
நூல் : பைஹகீ (19161) (19162)
இந்த ஹதீஸைப் பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்களே இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அமீர் பின் காலித் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆகையால் குடும்பத்தினர் வந்து நிற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதில் கூறப்பட்டுள்ள சிறப்புகளும் நபி (ஸல்) அவர்களின் கூற்றாகாது.
ஆனால் அறுப்பதைப் பார்க்க குடும்பத்தினர்கள் விரும்பி அவர்களாகவே முன்வந்தால் அதில் எந்த குற்றமும் இல்லை. ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுக்கும் போது அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் நின்று பார்த்துள்ளார்கள் என்ற தகவலை முன்பே பார்த்தோம்.
கிப்லாவை முன்னோக்கித் தான் அறுக்க வேண்டுமா?
குர்பானிப் பிராணியை கிப்லாவை முன்னோக்கித் தான் அறுக்க வேண்டும் என்று கூறுவதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவும் இல்லை. இது தொடர்பாக பைஹகியில் இடம் பெறுகின்ற ஹதீஸை இமாம் பைஹகீ அவர்களே பலவீனமானது என்று குறிப்பிட்டுள்ளார்கள். எனவே எந்தத் திசை அறுப்பவருக்கு தோதுவாக உள்ளதோ அந்தத் திசையில் அறுக்கலாம்.
சில ஊர்களில் அறுப்பதற்கு முன்னால் பிராணியைக் குளிப்பாட்டுவது, மஞ்சள் பூசுவது, கண்களில் சுர்மா இடுவது, கொம்புகளில் பூச்சுற்றுவது போன்ற செயல்களைச் செய்கின்ற னர். இவை எல்லாம் மாற்றுமதக் கலாச்சாரங்களாகும். மேலும் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தராத மார்க்கத்தில் புதிதாக நுழைக்கப்பட்ட பித்அத்'தான நடைமுறைகளாகும். இவற்றைத் தவிர்ப்பது மிகவும் அவசியமானதாகும்.
பிராணியை அறுப்பதற்கு முன்பு கூற வேண்டியவை
பிராணியை அறுக்கும் போது வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ என்ற துஆவை சிலர் ஒதுகின்றனர். இது பற்றி அபூதாவுத் பைஹகீ இப்னுமாஜா ஆகிய நூற்களில் ஒரு பலவீனமான ஹதீஸ் இடம் பெறுகிறது. ஆகயால் இதை நாம் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக சஹீஹான ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் சில வார்த்தைகளைக் கூறியதாக உள்ளது.
அறுக்கும் போது பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்" (அல்லாஹ்வின் பெயரால் அறுக்கிறேன், அல்லாஹ் பெரியவன்) என்று கூறி இவ்வணக்கத்தை நம்மிடமிருந்து ஏற்றுக் கொள்ளும்படி அல்லாஹ்விடம் துஆ செய்ய வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் கருப்பும், வெள்ளையும் கலந்த இரண்டு கொம்புள்ள ஆடுகளை குர்பானி கொடுத்தார்கள். அதைத் தன் கையால் அறுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ்(ரலி)
நூற்கள் : புகாரி(5565), முஸ்லிம் (3635)
முஸ்லிமில் உள்ள இன்னொரு அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் என்று சொன்னதாக வந்துள்ளது.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் (3636)
கருப்பு நிறத்தால் நடக்கக்கூடிய கருப்பு நிறத்தால் அமரக்கூடிய கருப்பு நிறத்தால் பார்க்கக்கூடிய கொம்புள்ள ஒரு ஆட்டை குர்பானி கொடுக்க வாங்கி வருமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (ஆடு வந்ததும்) ஆயிஷாவே கத்தியை எடுத்து வா என்றார்கள். பிறகு அதை கல்லில் தீட்டு என்றார்கள். நான் அப்படியே செய்தேன். பிறகு அந்தக் கத்தியை வாங்கி அந்தச் செம்மறியாட்டைப் பிடித்து சரித்துப் படுக்கவைத்து அறுத்தார்கள்.
(அறுப்பதற்கு முன்) பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம தகப்பல்மின் முஹம்மதின் வஆலி முஹம்மதின் வமின் உம்மதி முஹம்மதின் (அல்லாஹ்வின் பெயரால் அறுக்கிறேன். இறைவா முஹம்மதிடமிருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடமிருந்தும் முஹம்மதின் சமுதாயத்தாரிடமிருந்தும் இதை ஏற்றுக்கொள்வாயாக என்று கூறி அதை அறுத்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் (3637) அபூதாவுத் (2410) அஹ்மத் (23351)
பெருநாள் தொழுகை முடிந்த உடன் பள்ளிவாசலில் பணிபுரியும் ஹஜ்ரத்மார்களுக்கும் மோதினாருக்கும் கடுமையான வேலை வந்துவிடும். ஒவ்வொருவரும் குர்பானிப் பிராணியை அறுப்பதற்காக அவர்களையே நாடி இருப்பார்கள். இவர்கள் அறுத்தாலே குர்பானி ஏற்கப்படும் என்று பலர் இன்று தவறாக எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் தம்முடைய கரத்தால் அறுத்துள்ளதால் குர்பானி கொடுப்பவர் தானே அறுப்பதே சிறந்ததாகும். அவ்வாறு அறுக்கும் போது பிறரை உதவிக்கு அழைத்துக் கொள்வது தவறாகாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது குர்பானிப் பிராணியை அறுப்பதற்காக அதைப் படுக்கவைத்து விட்டு ஒரு மனிதரிடத்தில் எனது குர்பானிப் பிராணியை (அறுப்பதற்கு) எனக்கு உதவிபுரியுங்கள் என்று கூறினார்கள். அவர் நபி (ஸல்) அவர்களுக்கு உதவி புரிந்தார்.
அறிவிப்பவர் : பெயர் குறிப்பிடப்படாத ஒரு நபித்தோழர்
நூல் : அஹ்மத் (22086)
எப்போது அறுக்க வேண்டும்?
குர்பனிப் பிராணியை உலுஹியா, குர்பானி" என்று பிரித்து உலுஹியா" என்றால் தொழுகைக்கு முன்பு அறுக்கலாம் என்றும், குர்பானி" என்றால் தொழுகைக்குப் பின்பு தான் அறுக்க வேண்டும் என்றும் சிலர் கூறுகின்றனர். இவ்வாறு பிரித்துச் செய்வதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. உலுஹியா என்பதும், குர்பானி என்பதும் ஒன்று தான்.
ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை முடிந்த பின்பே குர்பானி கொடுக்க வேண்டும். அதற்கு முன்னர் கொடுத்தால் அது குர்பானியாகக் கணக்கில் கொள்ளப்படாது.
தொழுகை முடிந்த உடன் தான் அறுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் நிர்ணயித்து விட்டதால் அதையே துவங்குவதற்குரிய நேரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். மக்கள் இதை அறியாமல் ஃபஜர் ஆரம்பித்த உடனே அறுத்து விடுகிறார்கள். தெரியாமல் தொழுகைக்கு முன் அறுத்து விட்டால் தொழுத பின் மற்றொரு பிராணியை அறுக்க வேண்டும்.
இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்குச்) சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுவதற்கு முன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியில் (நன்மை) எதுவும் கிடையாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூபுர்தா இப்னு நியார்(ரலி) அவர்கள் (தொழுமுன்) அறுத்து விட்டார். அவர் (நபி(ஸல்) அவர்களிடத்தில்) என்னிடத்தில் முஸின்னாவை விட ஆறுமாத குட்டி உள்ளது. (அதை குர்பானி கொடுக்கலாமா?) என்றார். முன் அறுத்ததற்கு இதை பகரமாக்குவீராக! எனினும் உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இது (குர்பானி கொடுக்க) அனுமதியில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : பரா(ரலி)
நூற்கள் : புகாரி(5560), முஸ்லிம் (3627)
அபூபுர்தா பின் நியார் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் அறுப்பதற்கு முன்பே அறுத்துவிட்டார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து) அல்லாஹ்வின் தூதரே இந்த நாள் இறைச்சி அதிகமாக விரும்பப்படும் நாள். (ஆகையால்) எனது வீட்டார்களுக்கும் எனது அண்டைவீட்டாருக்கும் எனது உறவினர்களுக்கும் உண்ணக்கொடுப்பதற்காக எனது குர்பானிப் பிராணியை அவசரப்பட்டு அறுத்துவிட்டேன் என்று கூறினார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் மீண்டும் அறுப்பீராக என்று கூறினார்கள். அவர்அல்லாஹ்வின் தூதரே என்னிடத்தில் ஆறுமாதம் பூர்த்தியான பெண் வெள்ளாட்டுக் குட்டி உள்ளது. அது (அதிக) இறைச்சியுடைய இரு ஆடுகளை விட சிறந்தது என்று கூறினார். அதற்கு நபியவர்கள் இதுவே உனது இரு குர்பானிப் பிராணியில் சிறந்ததாகும் உமக்குப் பின்னால் யாருக்கும் ஆறுமாதக் குட்டி போதுமாகாது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : பராஃ பின் ஆசிப் (ரலி)
நூல் : முஸ்லிம் (3625)
இந்த ஹதீஸின் இறுதியில் தொழுகைக்குப் பின்னால் கொடுக்கப்படும் ஆறுமாதக் குட்டியே முன்பு கொடுக்கப்பட்டதை விட சிறந்தது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். முன்பு அறுக்கப்பட்ட பிராணி வயதில் பெரிதாக இருந்தாலும் அது நபி (ஸல்) அவர்களின் பார்வையில் குர்பானிப் பிராணியாக கணிக்கப்படவில்லை.
இறைச்சிக்காக அறுக்கப்பட்டதாகவே எண்ணப்பட்டது. மாறாக தொழுகைக்குப் பின்பு கொடுக்கப்படும் பிராணி குறைந்த வயதுடையதாக இருந்தாலும் அதை குர்பானிப் பிராணியாக கருதி அதுவே சிறந்தது என்று கூறியுள்ளார்கள். எனவே தொழுகைக்குப் பின்பே குர்பானி கொடுக்க வேண்டும்.
எவ்வளவு நாட்களுக்குள் அறுத்துப் பலியிட வேண்டும்?
பெருநாள் மற்றும் அதற்கு அடுத்துள்ள மூன்று நாட்களுக்குள் குர்பானிப் பிராணியை அறுத்துவிட வேண்டும். பெருநாளுக்கு அடுத்துள்ள மூன்று நாட்களுக்கு தஷ்ரீக்குடைய நாட்கள் என்று சொல்லப்படும். இந்நாளில் மக்கள் குர்பானிப் பிராணிகளின் இறைச்சியை சூரிய ஒளியில் காயவைத்து உப்புக்கண்டம் தயாரித்ததால் இதற்கு அய்யாமுத் தஷ்ரீக் உப்புக் கண்டம் தயாரிக்கும் நாள் என்ற பெயர் வந்தது.
தஷ்ரீக்குடைய நாட்களுக்கு மினாவுடைய நாட்கள் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதை பின்வரும் ஹதீஸ்களிலிருந்து அறிந்துகொள்ளலாம்.
தஷ்ரீக்குடைய நாட்கள் உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : நுபைஷா (ரலி)
நூல் : முஸ்லிம் (2099)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னையும் அவ்ஸ் பின் அல்ஹதஸான் (ரலி) அவர்களையும் அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் அனுப்பி இறை நம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார். மினாவின் நாட்கள் உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும் என (மக்களிடையே) அறிவிக்கச் செய்தார்கள்.
அறிவிப்பவர் : கஅப் பின் மாலிக் (ரலி)
நூல் : முஸ்லிம் (2100)
மினாவுடைய நாட்கள் அதாவது தஷ்ரீக்குடைய நாட்கள் என்பது மூன்று நாளாகும் என நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
மினாவுடைய நாட்கள் மூன்றாகும் என்று நபி (ஸல்) அவர்கள் (மக்களுக்கு) அறிவிக்கச் செய்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் யஃமர் (ரலி)
நூல் : திர்மிதி (814)
பெருநாளுக்கு அடுத்துள்ள இந்த மூன்று நாட்களும் குர்பானிப் பிராணியை அறுப்பதற்குரிய நாட்களாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
தஷ்ரீகுடைய நாட்கள் (துல்ஹஜ் 11, 12, 13) அனைத்தும் அறுப்பதற்குரியதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜுபைர் இப்னு முத்இம்(ரலி)
நூல் : தாரகுத்னீ (பாகம் : 4) (பக்கம் : 284)
பகலில் மட்டுமே அறுக்கும் வழக்கம் மக்களிடம் உள்ளது. இரவில் பிராணியை அறுப்பதற்கு குர்ஆனிலோ ஏற்கத்தகுந்த நபிமொழிகளிலோ எந்தத் தடையும் இல்லை என்பதால் விரும்புபவர்கள் இரவில் அறுத்துப் பலியிடலாம்.
பெண்கள் அறுக்கலாமா?
பெண்கள் அறுப்பதற்கு எவ்விதத் தடையும் ஹதீஸ்களில் இல்லை. மேலும் நபி(ஸல்) அவர்கள், ஒரு பெண் அறுத்ததை அங்கீகரித்துள்ளார்கள்.
ஒரு பெண்மணி (கூர்மையான) கல்லால் ஆட்டை அறுத்து விட்டார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது அதைச் சாப்பிடும்படி கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : கஅபு இப்னு மாலிக்(ரலி),
நூல் : புகாரி(5504)
எத்தனை பிராணிகள் கொடுக்க வேண்டும்?
சிலர் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு ஆடு கொடுக்க வேண்டும் என்றும் சிலர் மூன்று நபருக்கு ஒரு ஆடு கொடுக்க வேண்டும் எனவும் மற்றும் பலர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஆடு கொடுத்தால் போதும் என்றும் கூறுகின்றனர்.
இவற்றில் ஒரு ஆடு ஒரு குடும்பத்திற்கு போதுமானது என்று கூறுவோரின் கருத்தே சரியான கருத்து. ஏனெனில் நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் சஹாபாக்கள் தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் சேர்த்து ஒரு ஆட்டை மட்டும் குர்பானியாக கொடுத்துள்ளார்கள் என பின்வரும் செய்தி கூறுகிறது.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் குர்பானி கொடுப்பது எவ்வாறு அமைந்திருந்தது என்று அபூ அய்யூப்(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், ஒருவர் தமக்காகவும், தம் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பார்கள். பிறருக்கும் உண்ணக் கொடுப்பார்கள்.
அறிவிப்பவர் : அதா இப்னு யஸார்
நூற்கள்: திர்மிதீ(1425), இப்னுமாஜா(3147)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கறுப்பில் நடக்கின்ற கறுப்பில் படுக்கின்ற கறுப்பில் பார்க்கின்ற (கால்கள் வயிறு கண் ஆகியப் பகுதிகள் கறுப்பு நிறத்தில் அமைந்த) கொம்புள்ள செம்மறி ஆட்டுக்கெடா ஒன்றைக் கொண்டுவருமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறு அது குர்பானிக்காக கொண்டுவரப்பட்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்) ஆயிஷாவே அந்தக் கத்தியை எடு என்றார்கள். பிறகு அதை ஒரு கல்லில் நன்றாகத் தீட்டு என்றார்கள்.அவ்வாறே நான் செய்தேன்.
பிறகு அந்தக் கத்தியை வாங்கி அந்தச் செம்மறியாட்டைப் பிடித்து சரித்துப் படுக்கவைத்து அறுத்தார்கள். (அறுப்பதற்கு முன்) பிஸ்மில்லாஹ் அல்லாஹும்ம தகப்பல்மின் முஹம்மதின் வஆலி முஹம்மதின் வமின் உம்மதி முஹம்மதின் (அல்லாஹ்வின் பெயரால் இறைவா முஹம்மதிடமிருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடமிருந்தும் முஹம்மதின் சமுதாயத்தாரிடமிருந்தும் இதை ஏற்றுக்கொள்வாயாக என்று கூறி அதை அறுத்தார்கள்
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் (3637)
இதுமட்டுமல்லாமல் குர்பானிக் கொடுப்பதை நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தும் போது ஒவ்வொருவருக்கும் ஒரு ஆடு கொடுக்க வேண்டும் என்று கூறவில்லை. மாறாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஆடு போதுமானது என்று தெளிவுபடுத்திவிட்டார்கள்.
நான் அரஃபா நாளில் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் (மக்களிடம்) ஒவ்வொரு பெருநாளிலும் ஒவ்வொரு ரஜப் மாதத்திலும் ஒரு ஆட்டை அறுப்பது ஒவ்வொரு வீட்டின் மீதும் கடமை என்று கூறிக்கொண்டிருந்தார்கள்.
நூல் : அஹ்மத் (19804)
அறிவிப்பாளர் : ஹபீப் பின் மிஹ்னஃப்
பெருமையை நாடாமல் ஏழைகளின் தேவையைக் கருதி எத்தனை பிராணி வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால் மாமிசத்தை வீண்விரையம் செய்யக்கூடாது.
நபி(ஸல்) அவர்கள் கருப்பும், வெள்ளையும் கலந்த கொம்புள்ள இரண்டு ஆடுகளை குர்பானி கொடுத்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ்(ரலி)
நூற்கள் : புகாரி(5565), முஸ்லிம் (3635)
நபி(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜில் அவர்களுடைய 100 ஒட்டகத்தில்) 63 ஒட்டகைகளை தன் கரத்தால் குர்பானி கொடுத்தார்கள். மீதத்தை அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்து (அறுக்கும் படி கூறினார்கள்). அலீ (ரலி) அவர்கள் மீதத்தை அறுத்தார்கள். அவற்றில் ஒவ்வொரு ஒட்டகத்திலும் சில துண்டுகளை (எடுத்து சமைக்கும் படி) கட்டளையிட்டார்கள். அவை ஒரு சட்டியில் வைத்து சமைக்கப்பட்டது. பின்பு அவர்கள் இருவரும் அதன் இறைச்சியை உண்டு அதன் குழம்பைப் பருகினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : முஸ்லிம் (2137)
நன்மையைக் கருதி அதிகமாக குர்பானி கொடுப்பது சிறந்தது என்றும் தனக்கு முடியாத பட்சத்தில் மற்றவரிடம் கொடுத்து குர்பானிப் பிராணியை அறுக்கச் சொல்லலாம் என்றும் இந்த ஹதீஸிலிருந்து விளங்கிக்கொள்ள முடியும்.
நீண்ட இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் அறுக்கப்பட்ட பிராணியின் மாமிசத்துண்டுகளைச் சமைத்து சாப்பிட்டதாக உள்ளது. குர்பானி கொடுப்பவர் தன்னுடைய குர்பானியின் மாமிசத்தை உண்பது நபிவழி என்பதற்கு இது சிறந்த சான்றாக உள்ளது.
ஹஜ்ஜுக்குச் சென்று துல்ஹஜ்ஜு பிறை பத்தாம் நாள் மினாவில் ஹாஜிகள் குர்பானி கொடுப்பார்கள். இவர்கள் உள்ளூரில் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. காரணம் நபி(ஸல்) அவர்களோ, மற்ற தோழர்களோ அவ்வாறு செய்யவில்லை. எனவே ஹாஜிகள் மினாவில் கொடுத்த குர்பானியே போதுமானதாகும்.
பங்கிடுதல்
குர்பானி கொடுத்த பிராணியின் மாமிசத்தை மூன்று பங்கு வைத்து ஒரு பங்கு தனக்காகவும், மற்றொன்று சொந்தக்காரர்களுக்கும், மற்றொன்று ஏழைகளுக்காகவும் கொடுக்க வேண்டும் என்று கூறுவதற்கு ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸும் இல்லை. தனது தேவைக்குப் போக சொந்தம், ஏழை, யாசிப்பவர்கள் இப்படி யாருக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். நிர்ணயம் எதுவுமில்லை.
அவற்றிலிருந்து (குர்பானி பிராணியிலிருந்து) நீங்களும் உண்ணுங்கள்! (வறுமையிலும் கையேந்தாமல், இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், யாசிப்போருக்கும் உண்ணக் கொடுங்கள்.
அல்குர்ஆன் (22 : 36)
இந்த வசனத்தில் அல்லாஹ் இத்தனை சதவிகிதம் கொடுக்க வேண்டுமென கட்டளையிடவில்லை. பொதுவாக தர்மம் செய்யுங்கள் என்றே கூறுவதால் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். நபி (ஸல்) அவர்கள் இறைச்சி முழுவதையும் தர்மம் செய்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தமது குர்பானி ஒட்டகங்களை பலியிடுமாறும் அவற்றின் இறைச்சி தோல் சேணம் ஆகிய அனைத்தையும் பங்கிடுமாறும் உரிப்பதற்கு கூலியாக அவற்றில் எதையும் கொடுக்கக்கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பாளர் : அலீ (ரலி)
நூல் : புகாரி (1717)
நபி(ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்து அதை அனைத்தையும் பங்கிட்டு ஏழைகளுக்கு வழங்குமாறு அலீ(ரலி) அவர்களுக்கு கட்டளையிட்ட செய்தி முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவற்றில் ஒவ்வொரு ஒட்டகத்திலும் ஒரு துண்டு எடுத்து அதை மட்டும் நபி (ஸல்) அவர்கள் சமைத்துச் சாப்பிட்டுள்ளார்கள். எனவே குறிப்பிட்ட அளவில்லாமல் எவ்வளவு வேண்டுமானாலும் தர்மம் வழங்கலாம்.
நபி(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின் போது அவர்களுடைய 100 ஒட்டகத்தில்) 63 ஒட்டகைகளை தன் கரத்தால் குர்பானி கொடுத்தார்கள். மீதத்தை அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்து (அறுக்கும் படி கூறினார்கள்). அலீ (ரலி) அவர்கள் மீதத்தை அறுத்தார்கள். அவற்றில் ஒவ்வொரு ஒட்டகத்திலும் சில துண்டுகளை (எடுத்து சமைக்கும் படி) கட்டளையிட்டார்கள். அவை ஒரு சட்டியில் வைத்து சமைக்கப்பட்டது. பின்பு அவர்கள் இருவரும் அதன் இறைச்சியை உண்டு அதன் குழம்பை பருகினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : முஸ்லிம் (2137)
மாமிசத்தில் நமக்குத் தேவையான அளவை எடுத்துக் கொள்ள அனுமதி உள்ளது. நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தின் போது மதீனாவிற்கு வரும் வரை அளவில்லாமல் குர்பானிப் பிராணியின் இறைச்சியை உண்டுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தன்னுடைய குர்பானிப் பிராணியை அறுத்துவிட்டு சவ்பானே இதன் இறைச்சியை பக்குவப்படுத்துவீராக என்று கூறினார்கள். அவர்கள் மதீனாவிற்கு வரும் வரை அதிலிருந்து அவர்களுக்கு நான் உண்ணக்கொடுத்துக் கொண்டே இருந்தேன்.
அறிவிப்பவர் : சவ்பான் (ரலி)
நூல் : முஸ்லிம் (3649)
மாற்றப்பட்டச் சட்டம்
பஞ்சம் மிகைத்திருந்த போது நபி (ஸல்) அவர்கள் மூன்று நாட்களுக்கு மேல் மாமிசத்தைச் சேமித்து வைக்கக் கூடாது என்று மக்களுக்குத் தடைவிதித்திருந்தார்கள். பின்பு எவ்வளவு நாள் வேண்டுமானாலும் சேமித்துக் கொள்வதற்கு சலுகை வழங்கினர்கள்.
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் (ஈதுல் அல்ஹா பெருநாளில் அறுக்கப்படும்) குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் வைத்துச் சாப்பிடுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்களா? என்று கேட்டேன். அவர்கள் மக்கள் (பஞ்சத்தால்) பசிபட்டினியோடு இருந்த ஒரு ஆண்டில் தான் அவர்கள் அப்படி (த் தடை) செய்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (பட்டினியைப் போக்க) வசதியுள்ளவர் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். (பிறகு) நாங்கள் ஆட்டுக்காலை எடுத்து வைத்துப் பதினைந்து நாட்களுக்குப் பிறகும் கூட அதை சாப்பிட்டு வந்தோம் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஆபிஸ் பின் ரபீஆ
நூல் : புகாரி (5423)
நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் வரும் போது கிராமத்தில் உள்ள பல குடும்பங்கள் (மாமிசத்தை எதிர் பார்த்து எங்களிடம்) வருவார்கள். ஆகையால் நபி (ஸல்) அவர்கள் (அவர்களுக்காக மக்களிடம்) மூன்று நாட்களுக்கு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு மீதமுள்ளதை தர்மம் செய்து விடுங்கள் என்று கூறினார்கள். இதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் பலவீனமான மக்களுக்காகத்தான் நான் தடுத்தேன். ஆகையால் நீங்கள் சாப்பிடுங்கள். (எவ்வளவு வேண்டுமானாலும்) சேமித்துக் கொள்ளுங்கள். தர்மமும் செய்யுங்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் (3643)
பங்கில் அவசியம் சேர்க்கப்பட வேண்டியவர்கள்
ஏழைகள் பட்டினியால் வாடாமல் இருப்பதற்காக பணக்காரர்கள் சேமித்து வைப்பதை பெருமானார் (ஸல்) அவர்கள் தடுத்ததை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏழைகளைக் கவனத்தில் வைத்தே பெருமானார் இவ்வாறு செய்துள்ளார்கள். நமது பகுதியில் ஏழைகள் மிகுதியாக இருப்பதினால் அவர்களையும் அவசியம் பங்கில் இணைத்துக் கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெருநாளன்று அண்டை வீட்டார்கள் உறவினர்கள் ஏழைகள் ஆகியோருக்கு நபித்தோழர்கள் இறைச்சியைக் கொடுத்து வந்தார்கள். இதற்கு பின்வரும் செய்திகள் சான்றாக உள்ளன.
நபி (ஸல்) அவர்கள் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டவர் மறுபடியும் குர்பானி கொடுக்கட்டும் என்று சொன்னார்கள். அப்போது ஒரு மனிதர் இது இறைச்சி விரும்பி உண்ணப்படும் நாள் என்று சொல்லிவிட்டு தம் அண்டை வீட்டாரின் தேவை( யினால் தொழுகைக்கு முன்பே அறுத்து விட்டதாக) குறிப்பிட்டார். நபி (ஸல்) அவர்கள் அவர் சொன்ன காரணத்தை ஏற்றுக் கொண்டதைப் போல் இருந்தது. .
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி (5561)
அபூபுர்தா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் நானும் சாப்பிட்டுவிட்டு எனது குடும்பத்தாருக்கும் அண்டை வீட்டாருக்கும் உண்ணக் கொடுத்து விட்டேன் என்று கூறியதாக புகாரியில் 983 வது செய்தியில் பதிவாகியுள்ளது.
நான் அபூஅய்யூப் அல்அன்சாரீ அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஒருவர் தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஒரு ஆட்டை குர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பார்கள். (மற்றவர்களுக்கும்) உண்ணக் கொடுப்பார்கள். ஆனால் இன்றைக்கு மக்கள் (இதன் மூலம்) பெருமையடித்துக்கொள்வதை நீங்கள் பார்க்கும் நிலை உருவாகிவிட்டது.
அறிவிப்பவர் : அதா பின் யசார்
நூல் : திர்மிதி (1425)
குர்பானி மாமிசத்தைக் முஸ்லிமல்லாதவர்களுக்குக் கொடுக்க எந்தத் தடையுமில்லை. (22 : 36) இந்த வசனத்தில் பொதுவாக ஏழைகள் என்றும் யாசிப்பவர்கள் என்றும் தான் கூறப்படுகிறது. ஆகையால் முஸ்லிமான ஏழைக்கும் முஸ்லிமல்லாத ஏழைக்கும் வழங்குவதில் எந்தக் குற்றமும் இல்லை. முஸ்லிம்களுக்கு குர்பானி இறைச்சியை தர்மமாகக் கொடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறாமல் பொதுவாக தர்மம் செய்யுங்கள் என்று கூறியிருப்பதினாலும் முஸ்லிமல்லாதவர்களுக்கு வழங்குவது குற்றமல்ல.
(குர்பானி இறைச்சியிலிருந்து) உண்ணுங்கள். சேமித்துக் கொள்ளுங்கள். தர்மம் செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் வாகித் (ரலி)
நூல் : முஸ்லிம் (3643)
எனினும் முஸ்லிம்களுக்கு பெருநாளாக இருப்பதால் அவர்கள் அன்றும் சிரன்ப்படக் கூடாது என்ற நோக்கத்தில் குர்பானி வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே மாமிசத்தை வழங்குவதில் முஸ்லிம்களுக்குத் தான் அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும். அவர்களுக்குப் போக மிச்சம் இருந்தால் முஸ்லிமல்லாதவர்களுக்கும் வழங்கலாம்.
தோல்
குர்பானிப் பிராணியின் தோல் அல்லது இறைச்சியை உரித்தவருக்குக் கூலியாகக் கொடுக்கக் கூடாது. இதைத் தர்மமாக ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.
ஒரு ஒட்டகத்தைக் குர்பானி கொடுக்கும் பொறுப்பை என்னிடம் நபி (ஸல்) அவர்கள் ஒப்படைத்தார்கள். அதன் மாமிசத்தையும், தோலையும் அதன் மீது கிடந்த(கயிறு, சேனம் போன்ற)வைகளையும் தர்மமாக வழங்குமாறும் உரிப்பவருக்குக் கூலியாக அதில் எதனையும் வழங்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அதற்கான கூலியை நாங்கள் தனியாகக் கொடுப்போம்.
அறிவிப்பவர் : அலீ(ரலி)
நூற்கள் : புகாரி (1716), முஸ்லிம் (2320)
தோல்கள் ஏழைகளுக்குச் சேரவேண்டியது என்பதால் நபி (ஸல்) அவர்கள் அதை கூலியாகக் கொடுப்பதைத் தடுத்து தர்மம் செய்யுமாறு கட்டடையிட்டுள்ளார்கள். மதரஸா மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கும் இயக்கங்களுக்கும் இதை வழங்காமல் இருப்பது நல்லது. இது அல்லாத மற்ற பணத்தை அவற்றிற்கு வழங்கலாம்.
மதரஸா மற்றும் தொண்டு நிறுவனங்கள் மொத்தமாக வாரிச் சென்று விடும் போது நம்மூரில் உள்ள ஏழைகள் பாதிக்கப்படுவதை நாம் உணர வேண்டும். நம்பிக்கைக்குரிய இயக்கம் ஏழைகளுக்குத் தருவதாகக் கூறி தோட்களை வாங்கினால் அவர்களிடத்தில் தோல்களை ஒப்படைப்பது தவறல்ல.
இரத்தம்
பிராணிகளை அறுக்கும் போது நரம்புகள் நன்கு துண்டிக்கப்பட்டு அவற்றின் இரத்தம் வெளியேற்றப்பட வேண்டும். ஏனென்றால் இரத்தம் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். இதையறியாமல் பலர் ஆடுகளை அறுக்கும் போது வெளிவரும் இரத்தத்தை எடுத்து சமைத்துச் சாப்பிடுகிறார்கள். இது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட காரியம்.
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்
அல்குர்ஆன் (2 : 173)
இறந்துவிட்டவர்கள் சார்பாகக் குர்பானி
இறந்தவர்கள் சார்பாக குர்பானி கொடுப்பதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் இல்லை. இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டப்படும் ஹதீஸ் பலவீனமானதாக இருப்பதுடன் ஆதாரப்பூர்மான ஹதீஸுடன் மோதுகிறது.
ஆதமின் மகன் இறந்த உடன் மூன்று காரியங்களைத் தவிர மற்ற எல்லாத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. அவை 1. நிரந்தர தர்மம். 2 .பஸ்ன் தரும் கல்வி 3. தன் தந்தைக்காக துஆச் செய்யும் நல்ல குழந்தை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (3084)
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் தனக்காகவும், தன் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார்.
நூற்கள் : திர்மிதீ (1425), இப்னுமாஜா (3138)
அறிவிப்பவர் : அபூ அய்யூப்(ரலி)
மேற்கண்ட ஹதீஸ் நபித்தோழர்கள் தன் குடும்பத்திற்காக மட்டுமே குர்பானி கொடுத்துள்ளார்கள். இறந்தவர்களுக்காகக் கொடுக்கவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
நபி (ஸல்) அவர்களுடைய வாழ்நாளிலே அவர்களுக்கு மிகப்பிரியமான பலர் மரணித்திருக்கிறார்கள். அவர்கள் மிகவும் நேசித்த அவர்களுடைய மகன் இப்ராஹிம் மகள் ஜைனப் மனைவி கதீஜா ஆகியோர் மரணித்தனர். இறந்தவர்களுக்கு குர்பானி கொடுப்பது கூடுமென்றால் நபி (ஸல்) அவர்கள் முதலில் இவர்களுக்குக் குர்பானி கொடுத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யாததால் இறந்தவர்களுக்காக உயிருடன் இருப்பவர்கள் குர்பானி கொடுக்கக்க கூடாது.
அல்லாஹ் அல்லாதவர்களுக்குக் குர்பானிகொடுக்கலாமா?
அல்லாஹ்விற்காகக் குர்பானி கொடுப்பதைப் போன்றே அவ்லியாக்களின் பெயர்களைக் கூறி அவர்களுக்காகச் சிலர் குர்பானி கொடுக்கிறார்கள். இது அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத் தரும் மாபாதகச் செயலாகும். குர்பானி என்பது தொழுகை நோன்பு ஹஜ் ஆகிய வணக்கங்களைப் போன்று ஒரு வணக்கமாகும். நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுப்பதை வணக்கம் என்று சொல்கிறார்கள்.
யார் தொழுகைக்குப் பின்னால் அறுத்தாரோ அவருடைய வணக்கம் பூர்த்தியாகி விட்டது. அவர் முஸ்லிம்களின் வழியைப் பின்பற்றியவர் ஆவார்.
அறிவிப்பவர் : பராஃ பின் ஆசிப் (ரலி)
நூல் : புகாரி (5545) முஸ்லிம் (3624)
பொதுவாக எந்த ஒரு வணக்கத்தையும் அல்லாஹ்வைத் தவிர மற்ற எவருக்கும் நிறைவேற்றக் கூடாது. அப்படிச் செய்தால் செய்பவர்கள் இணை வைத்தவர்களாகக் கருதப்படுவார்கள். குர்பானி உட்பட அனைத்து வணக்கத்தையும் அல்லாஹ்விற்கு மட்டும் செய்யும்படி நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.
எனது தொழுகை, எனது வணக்க முறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதலாமவன்" என்றும் கூறுவீராக!
அல்குர்ஆன் (6 : 162)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் மட்டும் தனிப்பட்ட முறையில் ஏதேனும் விஷயத்தை (இரகசியமாகச்) சொன்னார்களா? என்று அலீ (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அலீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள் அனைவருக்கும் பொதுவாகச் சொல்லாத எந்த விஷயத்தையும் எங்களிடம் தனிப்பட்ட முறையில் (இரகசியமாகச்) சொல்லவில்லை. இதோ இந்த வாளுரையில் இருப்பதைத் தவிர என்று கூறிவிட்டு ஓர் ஏட்டை வெளியில் எடுத்தார்கள். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.
அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் (பிராணியை) அறுத்தவனை அல்லாஹ் சபிக்கிறான், பூமியில் அடையாளச் சின்னங்களை திருடியவனை அல்லாஹ் சபிக்கிறான். தன் தந்தையைச் சபித்தவனை அல்லாஹ் சபிக்கிறான். (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை (மார்க்கத்தின் பெயரால்) ஏற்படுத்தியவனுக்கு அடைக்கலம் அளித்தவனை அல்லாஹ் சபிக்கிறான்,
அறிவிப்பவர் : அபுத்துஃபைல் (ரலி)
நூல் : முஸ்லிம் (3659)
அவ்லியாக்களுக்காகவோ அல்லது மகான்களுக்காகவோ அறுப்பது மட்டுமல்லாமல் அவ்வாறு அறுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை சாப்பிடுவதும் தடுக்கப்பட்டுவிட்டது.
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.
அல்குர்ஆன் (5 : 3)
எனவே குர்பானியின் சட்டங்களை தெரிந்து அதன் அடிப்படையில் இவ்வணக்கத்தை நிறைவேற்றி ஈருலகிலும் இறையருளைப் பெறுவோமாக!
நூலாசிரியர் : எஸ்.அப்பாஸ் அலி ஸப்வான் லங்கா
http://chittarkottai.com

--
*more articles click*
www.sahabudeen.com


நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும். மேலும் அந்...

Popular Posts